Home » Articles » உன்னதமாய் வாழ்வோம்!

 
உன்னதமாய் வாழ்வோம்!


அனுராதா கிருஷ்ணன்
Author:

– டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

என் அன்பிற்கினிய தன்னம்பிக்கை வாசகர்களே! உடலினை உறுதி செய்யும் மூன்றாம் படிநிலையான இரத்தம் சதையாக மாறும் இரகசியங்களை இன்று பார்ப்போம். நம் உடலில் சதை என்பது இரண்டு முக்கிய செயலாக்கத்திற்கு காரணமாக இருக்கிறது.

1. உடல் உழைப்பிற்கு வேண்டிய சக்தியாக்கம்

2. உடல் பராமரிப்புக்கு வேண்டிய சக்தியாக்கம்.

உடல் உழைப்பிற்கு வேண்டிய சக்தியாக்கம் என்பது உணவிலிருந்து பெறப் பெற சத்தும் சக்தியும், இரத்தம் வழியாக பிரான வாய்வின் துணை கொண்டு உடலில் உள்ள சதைப் பகுதிகளுக்கு சக்தியயை அளிப்பதாகும். இந்த சக்தி மாற்றம் என்பது சதைப் பகுதி எந்த அளவில் உழைத்து களைத்து பசியோடு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் நிகழ்கிறது. சதைப் பகுதிக்கு பசியில்லையெனில் சக்தியானது மிகுதியாக கொழுப்பு பகுதிக்கு சென்று தேங்க ஆரம்பித்து விடும். அவ்விதம் தேங்கும் வீரியம் குறைந்த கொழுப்பே ஊளைச் சதை என்று அழைக்கிறோம்.

என் அன்பிற்கினிய தாய்மார்களே! உங்கள் குழந்தைகள் பசி எடுத்து தானே தன் கைகளால் உணவு எடுத்து உண்டால், வலுவான சதை பற்றுடன் கூடிய உடலை பெறுவர். அதே சமயம் பசி எடுக்கிறதோ இல்லையோ! உணவு ஊட்டச் சதையுடன் தான் வளருவார்கள். ஊளைச்சதை கழிவு தேக்கத்தின் இருப்பிடம். பஞ்சபூத அளவுகளை சம நிலையில் வைக்க முடி யாத நிலையில் நோய் வசப்படும் தன்மையை உருவாக்கி விடும்.

அன்பர்களே! உழைப்பே உயர்வு தரும் என்பது இதை வைத்துதான் ஞானிகள் கூறியுள்ளனர். உழைக்காதவன் உடல் சுகத்துடன் இருக்க முடியாது. ஊக்கமும் ஆக்கமும் குறைந்து தான் வாழ வேண்டியிருக்கும். நம் உடல் உழைப்பு என்பது உடல் முழுமைக்கு மானதாக இருக்க வேண்டும். அப்போது தான் உடல் ஆரோக்கியம் என்பது உடல் முழுமைக்கும் இருக்கும். உடல் உழைப்பு என்பது நமது தேக வெப்பத்தை சிறிதளவு அதிகரிக்கச் செய்து (Warm up) வியர்வை வடியவைத்து, கசடு வெளியேற்றி புத்துணர்வு தருவதாக இருக்க வேண்டும். இந்த சிறிதளவு வெப்பம் பசியை உண்டு பண்ணும். அதுவே, குளிரூட்டப்பட்ட அறையில், விரல்களும் கண்களும் மூளையும் மாத்திரம் வேலை செய்ய உழைக்கும் கணினி பொறியாளர்களின் நிலை உண்மையில் ரஹழ்ம் ன்ல் நடைபெறுவதற்கு பதில் Cool down (வெப்பம் குறையும் நிலை) ஏற்படுவ தால், இவர்களின் சதை மண்டலத்திற்கு சக்தி கிடைக்கப் பெறாமல், சோர்வுற்று, பசி உணர்வு காலப்போக்கில் குறைந்து, பல விதமான மன மற்றும் உடல் நோய் தன்மைகளுக்கு ஆளாக நேரிடும். ஆகவே நண்பர்களே! உங்கள் அன்றாட உழைப்பு உங்களை புத்துணர்வு (Warm up) அடையச் செய்கிறதா அல்லது சோர்வு (Cool down) அடையச் செய்கிறதா? என்று கவனத்தில் கொள்வது மிக முக்கியம்.

இரண்டாவதாக, உடல் பராமரிப்புக்கு வேண்டிய சக்தியாக்கம் பற்றி இப்போது பார்ப்போம். உடல் பராமரிப்புக்கு நமது உடல் உள்ளுறுப்புகள் யாவும் சதையால் தான் ஆகி யுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நமது உடலின் சதை பகுதிக்கு சக்தி கிடைப்பது குறைந்தால், நமது உழைப்பை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளவோ, நிறுத்திக் கொள்ளவோ முடியும். ஆனால் உள்ளுறுப்புகள் அப்படி முடிவு செய்தால் நமது உயிர் வாழும் காலம் முடிவுக்கு வந்து விடும். ஆக எது எப்படி இருந்தாலும் நம் உயிரைக் காப்பாற்ற உள்ளுறுப்புகள் கண்டிப்பாக இடைவிடாது செயல்பட்டாக வேண்டும். அப்படி செயல்பட சேமிப்பு சக்தியாக உள்ள நல்ல கொழுப்பு (கெட்ட கொழுப்பில் இருந்து சக்தி பெற முடியாது), சதை மற்றும் எலும்புகள் கரைந்து உள்ளுறுப்புகளுக்குத் தேவையான சக்தியை அளித்துவிடுகிறது. இந்த நிலை தொடருமே யானால் உடல் தளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கிறது.

நண்பர்களே! நமது உடல் தளர்ச்சி அடையாமல் இருக்க மண்ணீரல் (Spleem) இயக்க சக்தி மிக அவசியமாகிறது. மண்ணீரலும் ஒரு சதை அமைப்பு தான் என்பதை கவனத்தில் கொள்ளவும். மண்ணீரலானது இறைப்பையில் உள்ள உணவில் கிடைக்கக் கூடிய உடனடி சக்தி (மாவுச்சக்தியின் மூலம் கிடைக்கக் கூடிய சக்தி)யை கிரகித்து சதைப் பகுதிகளுக்கு சக்தி யளிக்கிறது. மண்ணீரல் செயல்பாட்டில் சுனக்கம் ஏற்படுமாயின் உள்ளுறுப்புகள் தளர்ச்சி யடைய ஆரம்பிக்கிறது. இந்தக் குறைபாட்டின் வெளிப்பாடுதான் தொப்பை உண்டாகுதல், கற்பப்பை கீழிறக்கம், குடலிறக்கம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீர்பை தளர்ச்சி, இருதய செயல் வேகம் குறைந்து இரத்த அழுத்தம் குறைந்து போதல், மூளைச் சோர்வு ஆகியவை சதை தளர்ச்சி நோய்கள். ஆகவே என் இனிய நண்பர்களே! மண்ணீரலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டுமாயின், சத்தான சக்திமிக்க, இலகுவாக செரிக்கக் கூடிய நேர்மறை (Positive Foods) உணவுகளை பசி இருக்க எடுத்துக்கொள்ள வேண்டும். கழிவுகள் அதிகம் உள்ள, சக்தியும் சத்தும் குறைவாக உள்ள எதிர்மறை (Negative) உணவுகள் மண்ணீரலைக் கெடுத்து விடும். நண்பர்களே! பசித்திரு! விழித்திரு! தனித்திரு என்ற மூன்று சொற்றொடரில் பசித் திருத்தலின் இரகசியம் புரிகிறதா? விழித்திருப் பதும் தனித் திருப்பது பற்றியும் பிறகு பார்ப்போம்.

என் இனிய மண்ணின் மைந்தர்களே! மண்ணைக் காக்கத் தவறினால் மனிதகுலம் இல்லை. அதுவே மண்ணீரலைக் காக்கத் தவறினால் மனிதன் சக்தி இல்லை!

மண்ணீரலைக் காப்போம்!

மனித சக்தியைக் காப்போம்!

இரகசியங்கள் தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment