Home » Articles » வெளிச்சம்

 
வெளிச்சம்


மாதவன்
Author:

– ‘மன்னை’ மாதவன்

புத்தர் மனிதர்கள் நான்கு வகை என கூறுகிறார்

1. வெளிச்சத்திலிருந்து இருட்டு
2. இருட்டிலிருந்து இருட்டு
3. இருட்டிலிருந்து வெளிச்சம்
4. வெளிச்சத்திலிருந்து வெளிச்சம்

மனிதன் தோன்றியதில் இருந்து இன்று வாழும் மனிதர்கள் வரை இந்த வாசகங்கள் பொருந்தும்.

அரச வாழ்க்கை வாழ்ந்த புத்தர் இறந்த மனிதனை கண்டார். இறப்பு என்றால் என்ன? இறந்தவர்கள் ஏன்? திரும்ப வருவதில்லை? இந்த கேள்விகள் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றம் தான் இன்று உலகம் காணும் கௌதம புத்தர் என்ற ஞானி. ஒரு மனிதனின் இறந்த காலம் புத்தரின் புதிய வாழ்க்கை துவங்கிய உதயகால மாக மாறியது. காலம் (நேரம்) நம் எல்லோர் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாடாளும் பிரதமர் முதல் கூலித் தொழிலாளி வரை எல்லோருக்கும் இயற்கையால் பாரபட்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது 24 மணி நேரம்.

தனி மனிதனின் சாதனைகள், முயற்சிகள் அனைத்தும் இந்த 24 மணி நேரத்தில் அடங்கி யுள்ளது. நேரத்தின் அருமையை நன்கு உணர்ந்து பயன்படுத்திய நம் பாரத பிரதமர் “மன்மோகன் சிங்” 18 டாக்டர் (Ph.d ) பட்டம் பெற்றார். காலம், இதை சரியாக பயன்படுத்திய கலாம் சிறந்த விஞ்ஞானி ஆனார். ஜனாதிபதி ஆனார்.

வாழ்க்கையில் நாம் வெளிச்சம் பெற இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட காலத்தை சரியாக பயன்படுத்துவோம். பெரியோர்கள், தாய் மார்கள், இளைஞர்கள் என்று எல்லோரின் நேரமும் (F.M) ரேடியோவாலும், தொலைக் காட்சியாலும் மிகவும் விரையமாகின்றன.

இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் பொழுது கூட ‘செல்போனில்’ பாடல் கேட்டு கொண்டு ஓட்டிச் செல்கின்றனர். இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன் கவனமும் சிதறி சில நேரங்களில் விபத்து நிகழ்கின்றது. பிரபல மனநல மருத்துவர் ஒருவர் கூறிய கருத்து தொலைக்காட்சியில் வரும் மெகா தொடர்களை (சீரியல்களை) தடை செய்தால் போதும் குடும்ப நலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் விவாகரத்து வழக்குகள் 70% குறையும் என கூறுகிறார். இதற்கு சான்றாக ஒரு

செய்தி கூற வேண்டும் என்றால் நூறாவது நாள் திரைப்படத்தில் வந்த கொலைக்காட்சியைப் பார்த்து அதே பாணியில் ஓர் இளைஞர் தன் உறவினர்களையே கொலை செய்தார். பத்துபேர் சேர்ந்து செய்யும் வன்முறையை திரைப்படத்தில் வரும் காட்சி ஒரு மனிதனின் மனதில் பதிய செய்து விடுகின்றது.

இருட்டிலிருந்து வெளிச்சம்

கடந்த காலங்களில் நடந்தவை பற்றி நாம் கவலைப்படவேண்டாம். வாருங்கள் இன்று முதல் நாம் வெளிச்சத்திற்கு வருவோம். நம் சிந்தனைகளை மாற்றுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.

அன்பர்களே நீங்கள் (F.M.) ரேடியோவில் எப்பொழுதும் பாடல் கேட்பவரா? உங்கள் சிந்தனையை மாற்றி யோசியுங்கள். நீங்கள் பாடல் கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது உங்கள் மனம் பாடலை ரசிக்கும் தாளம் போடும் நான் சொல்லும் இந்த விஷயத்தையும் சேர்த்து சிந்தியுங்கள்.

ரேடியோவில் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கும் ஆணோ, பெண்ணோ, அவர்கள் குரலை ரசியுங்கள், தொகுத்து வழங்கும் விதத்தை கூர்மையாக ரசியுங்கள். உங்கள் மனத்திற்குள்ளேயே “நானும் ஒருநாள் இதே போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவேன்” என்று கூறிக் கொள்ளுங்கள். அந்த விரம்பரத்திற்கு நீங்களே குரல் கொடுங்கள். அங்கு வெளிப்படும் உங்கள் திறமைகள் இதனால் ரேடியோ கேட்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை. உங்கள் சிந்தனையில் ஓர் மாற்றம் தான். மாற்று சிந்தனைக்கு உயிர் கொடுக்க துவங்குங்கள். உங்கள் நேரத்தின் அருமை உங்களுக்கே தெரியும். இந்த யோசனையில் பலர் வெற்றியும் அடையலாம். தோல்வியும் அடையலாம். தோல்வி அடைந் தாலும் அது வெற்றிதான். ஏனென்றால் நீங்கள் முன்பு இருந்த நிலையில் இருந்து இப்பொழுது சற்று உயர்ந்திருப்பீர்கள் (காலத்தின் அருமை தெரிந்த பின்பு வாழ்க்கையில் உயர்வுதானே)

இளைஞர்களே தினமும் நீங்கள் குளித்து முடித்தவுடன் சுத்தமான இடத்தில் அமைதியாக உட்கார்ந்து ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து வைத்து மூக்கு நுனியில் கவனத்தை செலுத்தி உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை மூச்சுக் காற்றோடு கலந்து சுவாசித்து சிறிது நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வையுங்கள். பிறகு மெதுவாக மூச்சுக் காற்றை வெளியில் விடுங்கள். சுவாசமே இல்லா மல் சில நொடிகள் இருங்கள். இப்படியே தினமும் இந்த தியானத்தை தொடர்ந்து செய்யுங் கள். இந்த தியானத்தில் உங்கள் நேரத்தை உயர்த்திக் கொண்டே செல்லுங்கள். இது உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

தொலைக்காட்சி மற்றும் சினிமா பார்க்கும் அன்பர்களே!

யாரோ படமெடுக்கிறார், யாரோ இயக்கு கிறார், யாரோ பாடல் எழுதுகிறார், யாரோ நடிக்கிறார் (இது தொலைக்காட்சி தொடர்களுக்கும் பொருந்தும்). நம் ஒவ்வொருவருடைய தனிமனிதனுடைய 3 மணிநேரம் (நாம்
திரைப் படம் பார்க்கும் நேரம்) தொடர்கள் பார்க்கும் நேரம் ஒரு திரைப்பட இயக்குநரை உருவாக்கியுள்ளது.

பல கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகர்களை உருவாக்கியுள்ளது. திரையரங்க உரிமையாளர்களை வாழ வைத்திருக்கின்றது.

இப்படி நம் 3 மணிநேரம், பலரை வாழ வைக்கும் பொழுது நாம் நம் வாழ்க்கையில் முன்னேற என்ன? செய்ய வேண்டும் என்று தினம் 1 மணி நேரம் சிந்தித்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? இந்த சிந்தனை நமக்குள் வந்தாலே போதும் நாம் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டோம்.
வெளிச்சத்திலிருந்து வெளிச்சம்

வருடத்தின் கடைசி மாதத்தில் நாம் சம்பாதித்த பணத்திருந்து மூன்றில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கை ஏழை எளியோர், அனாதை இல்லங்கள் பிறருக்கும் நேர்மையான முறையில் உதவும் கல்வி மையங்கள், அன்னதானம் இப்படி நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வோம். குறிப்பாக அன்னதானத் திற்கு உதவும் பொழுது, பொருளாக கொடுப்பது நல்லது. இப்படி எல்லோரும் பொருளாக கொடுத்தால் தான் தரமான அன்னதானம் சாத்தியம்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை

அன்பு இல்லாதவர்களுக்கு
இரண்டு உலகமும் இல்லை.

இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்த (காலம்) நேரத்தின் மீது அன்பு கொள்வோம். அருளையும், பொருளையும் இந்த உலகத் திலேயே நாம் வாழும் காலங்களில் பெறுவோம்.

 

6 Comments

 1. Gopalakrishnan says:

  Excellant. Each issue of Mr. Mannai Madhavan’s article is not only motivating to us, as well as it is increasing our will power.

 2. Optim S.Prabu says:

  Simply great. every points are very unique and viewed in third angle. Every one has to read, think, realize and take care of these points, surely they will get pure.
  Thank you so much…

 3. அற்புதமான கட்டுரை. வாழ்த்துக்கள்.

 4. M.J. SYED ABDULRAHMAN says:

  சூப்பர் சார்
  வாருங்கள் இன்று முதல் நாம் வெளிச்சத்திற்கு வருவோம். நம் சிந்தனைகளை மாற்றுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.
  நன்றி – சிறப்பு

 5. M.J. SYED ABDULRAHMAN says:

  டியர் சார் – மிக மிக அற்புதமான தியானம்!
  அமைதியாக உட்கார்ந்து ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து வைத்து மூக்கு நுனியில் கவனத்தை வைத்து சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வையுங்கள். பிறகு மெதுவாக மூச்சுக் காற்றை வெளியில் விடுங்கள். சுவாசமே இல்லா மல் சில நொடிகள் இருங்கள். இப்படியே தினமும் இந்த தியானத்தை தொடர்ந்து செய்யுங் கள். இந்த தியானத்தில் உங்கள் நேரத்தை உயர்த்திக் கொண்டே செல்லுங்கள். இது உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
  நன்றி – சிறப்பு கவனம்!

 6. M.J. SYED ABDULRAHMAN says:

  நன்றி சார்,
  டியர் சார் – மிக மிக அற்புதமான தியானம்!
  அமைதியாக உட்கார்ந்து ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து வைத்து மூக்கு நுனியில் கவனத்தை வைத்து சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வையுங்கள். பிறகு மெதுவாக மூச்சுக் காற்றை வெளியில் விடுங்கள். சுவாசமே இல்லா மல் சில நொடிகள் இருங்கள். இப்படியே தினமும் இந்த தியானத்தை தொடர்ந்து செய்யுங் கள். இந்த தியானத்தில் உங்கள் நேரத்தை உயர்த்திக் கொண்டே செல்லுங்கள். இது உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
  நன்றி – சிறப்பு கவனம்!

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்