Home » Articles » IIT-JEE நுழைவுத்தேர்வு 2010

 
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010


மூர்த்தி செல்வகுமாரன்
Author:

– பேராசிரியர் பி. மூர்த்தி செல்வக்குமரன்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்ற யவை

அதாவது மற்ற செல்வங்களைக் காட்டிலும் கல்வி என்பதே சிறந்த அழிவில்லா செல்வமாகும் என்பது வள்ளுவன் வாக்கு. அந்த கல்வி சிறந்த தொழிற்கல்வியாக அமைந்தால் வாழ்வு வளம் பெறும்

நாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்கல்வி நிறுவனங்களாக கருதப்படும் IIT எனப்படும் (Indian Institute of Technology)ல் 35 வகையான B.Tech, B.Pharm, B.Des, 2வகையான M.Sc. Tech, 6 வகையான M.Tech. உட்பட 60 பிரிவிற்கான படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வாக JEE (Joint Entrance Exam) அகில இந்தியாவில் நடத்தப்படுகின்றது.

பழமையான IIT களான மும்பை, டில்லி குவாலியர் கான்பூர், கராக்பூர், சென்னை மற்றும் ரூர்க்கி ஆகிய ஏழும், புதியதாக தொடங்கப்பட்ட புவனேஸ்வர், காந்திநகர், ஹைதராபாத், இன்தூர், மாண்டி, பாட்னா, பஞ்சாப், மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டும் சேர்ந்து மொத்தமாக பதினைந்து IITகளும், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் (BHU) மற்றும் தான்பாத்தில் உள்ள இந்தியச் சுரங்கவியல் பல் கலைக்கழகமும் இந்த நுழைவுத்தேர்வின் வாயிலாக மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையான கல்வித் தரத்தினை அளிக்கக் கூடிய நிறுவனங்களாக இத்தகைய IITக்கள் விளங்குகின்றன. அதற்குக் காரணம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்லூரி கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, ஆராய்ச்சிக்கென தனிப்பட்ட ஆய்வகங்கள், திறமையான பேராசிரியர்கள் இவற்றில் உள்ளனர்.

இவைகளில் தனிப்பட்ட படிப்பும் சில வற்றில் 5 வருட M.Tech. படிப்பும் இன்னும் சில கல்லூரி களில் இரண்ட படிப்பு (Dual Degree) படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.

இந்த நுழைவுத் தேர்வானது இரண்டு கேள்வித்தாள்களைக் கொண்டது. முதல் தேர்வுப்பகுதியை 2010 ஏப்ரல் மாதம் 11ம் தேதி (11.04.2010) அன்று காலை 9.00 மணிக்கும், இரண்டாவது பகுதியை அன்று மதியம் 2.00 மணிக்கும் மாணவர்கள் 3 மணிநேர தேர்வாக எழுத உள்ளனர். விடையளிக்கும் முறையானது, சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சில் மூலம் கருப்பாக்குவதாகும். கேள்விகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்கும் செல்போன், கால்குலேட்டர்கள் மற்றும் இதர பொருட்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

நுழைவுத்தேர்விற்கான வயது வரம்பு பொது மற்றம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் (GE, OBC, DS) 1985 அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகும் (25வயது), தாழ்த்தப்பட்ட, பழங் குடியினர் மற்றும் ஊனமுற்றவர்கள் (SC, ST, PD) 1980 அக்டோபர் 1ம் தேதிக்கு (30வயது) பிறந் திருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய பிளஸ்டு அல்லது அதற்கு இணையான தேர்வை முதன் முறையாக 2008, 2009 அல்லது 2010 அக்டோபர் 1ம்தேதிக்கு முன்னதாக முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 60% ஆகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 55% ஆகவும் இருக்கின்றது.

ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். கடந்த வருடங்களில் IITக்கள் அல்லது BHU வாரணாசி, ISMU தான்பாத் ஆகியவற்றில் எதிலாவது ஒன்றில் JEE மூலம் தேர்வு பெற்று சேர்க்கைக்குரிய முழுபணத்தை செலுத்தியவர்கள் எரும் இத்தேர்வை மீண்டும் எழுத முடியாது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் முறையே 15% மற்றும் 7.5% இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு 27% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிரப்பப்படாத இடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் இரண்டு இடங்கள் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்களின் வாரிசுகளுக்கு DS ஒதுக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை ஆன் லைன் மூலம் 2009 நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை அனுப்பலாம். தேர்வுக்கட்டணமாக ரூ 900யை GE / OBC / DS மாணவர்களும் ரூ 450யை மற்றும் மாணவிகளும் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப டிசம்பர் 19ம்தேதி கடைசி நாளாகும். விண்ணப் பத்திற்கு GE / OBC / DS மாணவர்கள் ரூ 1000யை யும், SC / ST / PD மற்றும் மாணவிகள் ரூ 500யையும் செலுத்த வேண்டும்.

தேர்விற்கான நுழைவுச்சீட்டை Admit Card 2010 மார்ச் 20ம் தேதிக்குள் கிடைக்கப்பெற வில்லை எனில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் தேர்வு மையத்தை தொலைபேசி வாயிலாக (IVRS No. : 044-22578223) மூலம் பெறலாம். நுழைவுச் சீட்டை மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்விற்கு பயன் படுத்த இருப்பதால் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வின் ரிசல்ட் ஆனது 2010 மே26ல் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுடைய தேர்வின் செயல்திறனை 2010 ஜீன் 3ம் தேதி வலைப்பின்னலில் தெரிந்து கொள்ள லாம். மாணவர்களின் தரப்பட்டியல் இரண்டு விடைத்தாளில் உள்ள தனித்தனி பாடப்பிரிவில் இருந்து பெறப்பட்ட கூட்டல் மதிப்பெண்ணை வைத்து கணக்கிடப்படுகிறது.

கட்டிடக்கலை (B Arch) மற்றும் வடி வமைப்பு (B Des) படிப்புகளுக்கான தனிப் பட்ட 3 மணிநேர நுழைவுத்தேர்வானது அந்தந்த கலந்தாய்வு மையத்தில் 2010 ஜீன் 10ம் தேதி நடைபெறுகிறது. கேள்வித்தாள்கள் ஆங்கிலத் தில் மட்டும் இருக்கும். இத்தேர்விற்கான மாணவர்களின் விண்ணப்பபதிவு 2010 மே 26ம் தேதி முதல் ஆன்-லைனில் நடைபெற உள்ளது.

தேர்வு உதவி மையங்கள்:

  • மாஜ் நெட் சொலுசன், பத்மாலயா டவர் காந்திபுரம், கோவை.
  • சிஸ்டம்

தேர்வு மையங்கள் :

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி பாண்டிச்சேரி உட்பட ஒன்பது மையங்கள்

இதுகுறித்து அறிய காத்திருங்கள்

அடுத்த இதழ் வரை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்