Home » Articles » இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!

 
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!


கல்பனா
Author:

– கல்பனா
தனியார் நிறுவனமொன்றில் குறைந்த ஊதியம் பெறுகின்ற தந்தை. வீட்டு வேலை செய்கிற தாயார். பிளஸ்டூ படிக்கும் தம்பி. வளமான குடும்பமல்ல அளவான குடும்பம். கல்பனாவின் குடும்பம். யார் இந்தக் கல்பனா? வசதி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே உயர்ந்த கல்வி சாத்தியம் என்று நினைக்கிற மாணவ மாணவிகளுக்கு ‘தன்னம்பிக்கை’ தரும் சாதனை மாணவிதான் கல்பனா. தனது கல்வி செலவிற்காக பெற்றவர்களிடமிருந்து பணம் தொகை எதிர்பார்க்க முடியாது எனக் கருதி மாலை நேரங் களிலும், சனி மற்றும் ஞாயிறுகளில் முழு நேரமாகவும் டுடோரியல் சென்டர்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்து அதன் மூலம் கிடைத்த தொகையில் தன் கல்விச் செலவையும் பார்த்துக் கொண்டு பிளஸ்டூ படிக்கும் தனது தம்பி (அசோக்குமார்) யின் கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டு தனது குடும்பத்திற் கும் தன்னால் முடிந்த உதவியினை செய்து வரும் மாணவி கல்பனா.

கோவை சக்தி சாலை வலியாம் பாளையம் கல்பனா தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, அவினாசி லிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை உயிர் தொழில் நுட்பத்தை பாடமாக எடுத்தார். அதனைத் தொடர்ந்து முதுகலைப் படிப்பை சஎட கலைக் கல்லூரியில் முடித்தார். படிக்கும் காலங் களிலேயே படிப்பில் சிறந்த மாணவியாக விளங்கியதுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து சாதித்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த கல்பனா பல்கலையில் படிக்கும் போது பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்ததுடன் இரண்டு முறை கருத்தரங்கிற்காக டெல்லி சென்று வந்திருக்கிறார்.

தங்கள் மகள் என்ன படிக்கிறார், எத்துறையைச் சார்ந்து படிக்கிறார் என்று கூட அறியாதவர்களாக கல்பனாவின் பெற்றோர்கள் இருந்தாலும் ஆனாலும் தங்கள் பெண் முன்னேற வேண்டும் சாதிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பியவர்கள்.

‘பணம்’ இல்லாவிட்டால் என்ன நல்ல மனம் அவர்களிடம் இருந்தது. சாதித்தே ஆக வேண்டும். அதன் மூலம் பெற்றோர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்கிற இலட்சியத் தீயை தனக்குள் வளர்க்க ஆரம்பித்தார். அதற் கேற்றாற் போல் கல்பனாவுக்கு வழி காட்டியாக அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பல பேராசிரியர்கள் அமைந்தனர். அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆராய்ச்சிப் படிப்பை (Ph.d) மேற்கொள்ள கொரியாவில் உள்ள புகழ் பெற்ற சூன்புக் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார்.

கல்பனாவின் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் ஏற்றாற்போல் கொரியாவில் உள்ள சூன்புக் பல்கலைக்கழகத்தில் யாங் சூ என்ற பேராசிரி யரின் கீழ் ஆராய்ச்சிப் படிப்பை படிக்க உதவித் தொகையுடன் கூடிய அனுமதி கிடைத்தது. இது அவரின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

வெளிநாடுகளுக்குச் சென்று படித்து தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்; மற்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள உயர்தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், பிற நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு அதை நம் நாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற துணிவு இவைகளின் காரணமாகவே கல்பனா, தாவரங்களில் பூஞ்சைகளின் செயல்பாடுகளை குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருந்தால் சாதிப்பதற்கான வழிகள் இருக்கவே செய்கிறது என்பதை நிரூபணமாக்கி யிருக்கிற கல்பனாவை போன்று மாணவ மாணவிகள் தடைகள் இருப் பினும் அதையும் தாண்டி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, உலக அரங்கில் இந்தியாவை முன்னிருத்த வேண்டும் என்பதே நம் ஆசையாகும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்