Home » Articles » மேன்மைக்கான வழி

 
மேன்மைக்கான வழி


நாகராஜ் கே
Author:

– K. நாகராஜ்

வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு. வெகு தூய்மையான வீரசாகசமான இத்தகைய விளையாட்டில் வெற்றி பெறவும், உங்கள் வெற்றி விளையாட்டைத் தொடர்ந்து விளையாடவும் உச்ச உயர் மட்டத்திலே நிலைத் திருக்கவும் தேவையான மிகச் சிறந்த மூன்று ஒழுங்கு முறைக் கட்டுப்பாடுகள்,

1. பேசுவதைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகச் செவி கொடுத்தல்.

2. ‘முடியாது’ என்று சொல்ல கற்றுக்கொள்ளுதல்.

3. இறுக்கத்திலும் இனிமையான குணத்தை வளர்த்துக் கொள்ளுதல்.
பேசுவதைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகச் செவிகொடுத்தல்

நான் சிறுவனாக இருந்த போது பேசுவதை மிகவும் விரும்பினேன். ஒரு நாள் என் அம்மா என்னை உட்காரவைத்து “ஒரு காரணமாகத்தான் உனக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு வாயும் தரப்பட்டுள்ளது. அதாவது நீ எவ்வளவு பேசுகிறாயோ அதுபோல் இருமடங்கு பிறர்பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது தான் அக்காரணம்” என்று விலக்கினார். அற்புதமான கருத்து, நான் இன்றும் அதைச் செயல்படுத்த முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஒருவருக்கு மதிப்புகொடுக்க, மரியாதை செலுத்த மிகச் சிறப்பான வழிகளில் ஒன்று அவர் கூறுவதைக் கவனமாக கேட்பது. அதன் மூலம் ஒரு ஆழமான மனித உறவை நம்மால் ஏற்படுத்திக் கொள்ளமுடியும். ஒரு சிலர் சொல்வதை நாம் கவனமாக கேட்கும் போது வெறும் காதுகளா லும், மனதினாலும் மட்டுமல்லாமல், நமது முழு உயிராலும், உடன் ஒவ்வொரு அணுவாலும் கேட்கும் போது அது அவருக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்துகிறது.

“நீங்கள் சொல்வதற்கு நான் மதிப்பளிக் கிறேன். உங்களது வார்த்தைகளைக் கவனமாக செவிமடுக்குமளவு நான் உங்கள் பால் பணிவு கொண்டிருக்கிறேன்” என்பது தான் அச்செய்தி. நம்மில் மிகச் சிலரே கேட்பதில் நல்ல திறன் கொண்டவர்களாக இருக்கிறோம். சில சமயம் பயணத்தின் போது ஏறி அமர்ந்ததி ருந்து இறங்கும் வரையில், அருகில் இருப்பவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதுண்டு. ஆனால் இடையில் ஒருமுறை கூட நமது பெயரையோ, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதையோ, நாம் என்ன செய்கிறோம் என்பதையோ ஒரு வார்த்தையேனும் கேட்டிருக்க மாட்டார்.

இதனால் நமக்கு என்ன தெரியவருகிறது என்றால் உணரும் திறன் அதாவது தம்மை சுற்றிலும் நிகழும் விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிவு என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடும் ஒன்று அவரிடம் கிடையாது.

நம்மில் பலரும் ஒருவர் பேசிமுடிக்கும் வரையில் காத்துக் கொண்டிருப்பதைத் தான் “கவனிப்பது, ” “செவிகொடுப்பது” என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதாவது அவர்கள் பேசி முடிக்கும் வரையில் நாம் எதுவும் பேசமால் காத்துக் கொண்டிருத்தல். அந்த இடைப்பட்ட நேரத்திலும், ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மற்றவர் பேசுவ தில்லை. உண்மைதான். ஆனால் இதில் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால் ஒருவர் பேசும்பொழுது மற்றவர் அதைக் கேட்பதில்லை, கவனிப்பதிலை. மாறாக தான் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று தான் மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொன்டிருக்கிறோம்.

அதாவது “உன்னால் தலையை ஆட்ட முடிந்த போது பேசாதே” என்ற கூற்றுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு தொழிலதிபராக, ஒரு குடும்பத்தின் அங்கத்தினராக, ஒரு மனிதராக இந்த விஷயத்தில் சரியாக செயல்படுவதைக் கற்றுக் கொண்டுவிட்டீர்களானால் உங்கள் திறமை விண்ணுயரப் பறக்கத் தொடங்கி விடும்.

பேசுவதைப் போல இருமடங்கு கேளுங்கள். ஒரு உலகத்தரம் வாய்ந்த காது கொடுத்துக் கேட்பவராக மாறிவிடுங்கள். பலர் உங்களிடம் சொல்ல விரும்பும் செய்திகளில் வெகு தீவிரமான ஈடுபாடும், ஆர்வமும் கொள் ளுங்கள் அதன்பின் மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் உங்களை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள், மிகமிக வேகமாய்!

“முடியாது” என்று
சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்

முக்கியம் இல்லாத ஒன்றுக்கு சரி என்று நீங்கள் சொல்லுகிற ஒவ்வொரு முறையும், முக்கிய மான வேறு ஏதோ ஒன்றுக்கு இல்லை என்று சொல்க்கொண்டிருக்கிறீர்கள்.

ஆமாம் சாமிகள் ஒருபோதும் மகத்தான எதையும் சாதித்ததே இல்லை. இல்லை முடியாது என்று சொல்லக் கற்றுக்கொள்வதில் நிறைய பயன் உள்ளது.

ஒரு கப் காபி குடித்த வண்ணம் வம்பு பேச்சு பேச விரும்பும் நண்பனுக்கு, தோழிக்கு முடியாது என்று சொல்லுங்கள். தனது எதிர்மறை சிந்தனையையும், எதிலும் நம்பிக்கை யற்ற கொள்கைகளையும் பரப்ப விரும்பும் உடன் பணியாற்றுபவருக்கு இல்லை என்று சொல்லுங்கள்.

உங்கள் கனவுகளைக் கண்டு எள்ளி நகையாடி, உங்கள் மீதே உங்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் உறவினருக்கு இல்லை என்று சொல்லிவிடுங்கள். உங்கள் வாழ்க்கைப் பணியில் செலவிடவேண்டிய நேரத்தை இழுத்து உறிஞ்சிக் கொள்ளும் சமுதாயப் பொறுப்புகளுக்கு முடியாது என்று சொல்லுங்கள்.

எல்லா மனிதர்களுக்கும் எல்லாமுமாக நீங்கள் இருக்கமுடியாது. நம்மில் மிகச் சிறந்தவர்களால் மட்டுமே அது முடியும். உங்கள் முதன்மை அம்சங்களைத் தெரிந்த கொள்ளுங் கள். உங்களின் இலக்குகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதனாக ஒரு சிறப்பான செயல்பாட்டை செய்யவும், ஒரு நல்ல தெளிவான முடிவை எடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் உணர வேண்டும். அவ்வாறு உணர்வதற்காக வரப்போகும் வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளில் என்னென்ன காரியங் களை செய்தாக வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் அவற்றைத் தவிர பிற எல்லாவற்றிக்கும் இல்லை முடியாது என்று சொல்லிவிடுங்கள் கண்டிப்பாக இதனால் உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களால் சிலர் வருத்த மடையக் கூடும். ஆனால் இதைச் சொல்லுங்கள்.

பிறரது பாரட்டைப் பெற்று அண்டி வாழ விரும்புகிறீர்களா? அல்லது உங்களது நிதர் சனமான உண்மை மற்றும் கனவுகளுக்கு ஏற்ப வாழ விரும்புகிறீர்களா? முடிவு செய்து கொள்ளுங்கள்.

இறுக்கத்திலும் இனிமையான குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜீனியர் தனது உரையில் இவ்வாறு ஒரு முறை கூறி யுள்ளார். ஒரு மனிதனின் இறுதி மதிப்பீடு என்பது சுகமான மற்றும் வசதியான சமயங் களால் அவன் எங்கே நிற்கிறான் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. மாறாக சவால்கள் மற்றும் எதிர்ப்புகள் ஏற்படும் நேரங்களில் அவன் எங்கு நிற்கிறான் என்பதைப் பொறுத்துதான் அது அமைகிறது. மிகவும் உண்மை! மனிதர் களாக நாம் என்னவாக இருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்பது சுகமான நேரங்களைக் காட்டிலும் துயரமான நேரங்களில் தான் முழுமையாக வெளிப்படுகிறது. சந்தர்ப்பங்கள் நன்றாக இருக்கும் போது யாரால் வேண்டு மானாலும் நேர்மறையாகவும், இனிமையாகவும், கனிவுடனும், பண்புடனும் இருக்க முடியும்.

வாழ்க்கை தனது தவிர்க்க முடியாத வளைவுகளில் ஒன்றை அனுப்பும் பொழுது அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்பது தான் அசாதாரணமான குணாம்சம் கொண்டவர்களை நம்மிடமிருந்து பிரித்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவர்கள் உடைந்து போவதில்லை, சரணடைவதில்லை, மாறாக தமக்குள்ளேயே புகுந்து சென்று தமது உயர்வான இயல்புகளை இன்னும் அதிகமான உலகிற்கு வெளிக்காட்டுகிறார்கள்.

எந்த ஒரு வாழ்க்கையும் மிகச் சரியாக அமைந்து விடுவதில்லை. நாம் எல்லோருமே சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பெரியவர், சிறியவர் என இந்த நிமிடத்தில் உலகில் எங்கோ ஓரிடத்தில் தமது குழந்தையின் மரணத்தைச் சமாளித்துக் கொண்டு சிறந்தவர்களால் மட்டுமே அது முடியும். உங்கள் முதன்மை அம்சங்களைத் தெரிந்த கொள்ளுங் கள். உங்களின் இலக்குகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதனாக ஒரு சிறப்பான செயல்பாட்டை செய்யவும், ஒரு நல்ல தெளிவான முடிவை எடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் உணர வேண்டும். அவ்வாறு உணர்வதற்காக வரப்போகும் வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளில் என்னென்ன காரியங் களை செய்தாக வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் அவற்றைத் தவிர பிற எல்லாவற்றிக்கும் இல்லை முடியாது என்று சொல்லிவிடுங்கள் கண்டிப்பாக இதனால் உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களால் சிலர் வருத்த மடையக் கூடும். ஆனால் இதைச் சொல்லுங்கள்.

பிறரது பாரட்டைப் பெற்று அண்டி வாழ விரும்புகிறீர்களா? அல்லது உங்களது நிதர் சனமான உண்மை மற்றும் கனவுகளுக்கு ஏற்ப வாழ விரும்புகிறீர்களா? முடிவு செய்து கொள்ளுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்