Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

செப்டம்பர் 09 மாத தன்னம்பிக்கை இதழ் படித்தேன்.

இங்கு…. இவர்….. இப்படி….. என்ற பகுதியில் திரு. முருகன் அவர்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்கள், எதிர் நீச்சல் போட்டு அவர் இன்றுள்ள நிலைக்கு முன்னேறியது. ஏழைகளுக்கு தனது அமைப்பின் வழியாக செய்து வரும் சேவைகள் பற்றி படித்தேன். உள்ளத்தில் சேவை மனப்பான்மை இருந்தால் ஓர் ஏழைத் தொழிலாளி கூட பல ஏழைகளுக்கு உதவ முடியும் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. கொங்கு மண்டலத்துக்கே சொந்தமான உபசரிப்பு, விருந்து அளித்தல், உதவிசெய்தல், பிறர் மகிழ்ச்சியில் தான் மனநிறைவு அடைதல் போன்ற குணங்களைக் கொண்ட திரு.பி முருகன் அவர்களின் அமைப்பு மேலும் வளர வாழ்த்துக்கள்.
– ஓ. கண்ணன், ஈரோடு.

நவம்பர் 2009 இதழில் நிறுவனர் டாக்டர் இல.செ.க அவர்களின் மனைமாட்சி பற்றிய விளக்கம் அறிவுப் பூர்வமானது. கணவன் அல்லது மனைவி குடும்பத்தை ஓர் உணவு விடுதி போல் கருதக் கூடாது என்றும், வாழ்க்கை ஒர் அறிய கலை என்றும் விளக்கியது அருமை. மேலும் சுகுமார் ஏகலைவ் அவர்களின் நேரத்தை நிர்வகிப்பது எப்படி? என்ற கட்டுரையும் அருமை. நன்றி,

– அ. பிரமநாயகம், கோவை

‘முடியும் என்று நம்புங்கள்’ என்ற தலைப்பில் அளித்த திரு. எ.த. சுப்பிரமணியம் (மதுரை) அவர்கள், தந்த கட்டுரையானது முடியாது (Impossible) என்று வாய்ச்சவடால் கூறும் சோம்பேறிகளுக்கு தரும் சரியான சாட்டை அடியாகும்.

– சே. தில்லைமணி, கோவை.

“தன்னம்பிக்கை” இதழ், இன்னும் மனிதநேய செய்தி களையும், கிராமப்புற வளர்ச்சி, சமூகநல செய்தி களையும் அதிகளவில் வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

– ஸ்ரீ ரங்கா பப்ளிகேஷன்

சென்னை

நவம்பர் மாத தன்னம்பிக்கை” அழகு. “சாலை விபத் தினை தடுக்கும் முயற்சியாக தந்தருளிய விழிப் புணர்வு பாராட்டுதலுக்குரியது.”விலை மதிப்பில்லாத நமது உயிரினைக் காத்திட, இதில் நமது பங்களிப்பு என்ன…? இதயம் இதழை புரட்டும் முன் வினா தொடுத்தது உண்மை.

மக்களின் நலனில் அக்கறை தரும் தன்னம்பிக்கைக்கு நெஞ்சார்ந்த நன்றி.…

– தெ.க. நந்தகோபால்

குருநல்லிபாளையம்.

படைப்பாளிகளின் விருட்சங்கள்
பார்மீது ஒளிவீசிட
கொங்கு மண்டலத்தின்
கொடையின் மாண்பாய்
சிறுவாணித் தண்ணீரோடு
சிறப்பான இதழ்மணமும்
அருந்தமிழின் தேன்சுவைக்கு
அமுதூட்டும் புதுமைப்பெண்ணே நீர்!
தன்னம்பிக்கை சிறகால் தளிர்வடையும் மனதிற்கு
தங்கப் பல்லக்கின் தளர்சோலை நீர்!
வீசுகின்ற தென்றலாய்
விரிகின்ற ஒண்டமிழாய்
இதயங்களின் உயிரோட்டமாய்
இன்னும் பல சாதனைகளை
இதழ் காண
வணங்கி வாழ்த்துகிறோம்!!!
– கவிநிலா அருணா
தளி, ஜல்லிப்பட்டி

நவம்பர் மாத தன்னம்பிக்கை இதழில், ‘நேரத்தை நிர்வகிப்பது எப்படி? – என்ற கட்டுரையில் பொன்னான நேரத்தை வீண் செய்யமாமல் நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு பயனுள்ள வகையில் மாற்றியமைப்பது என்பதனை கட்டுரையாளர் நயம்பட எடுத்துரைத்திருந் தார். ‘சவாலை சாதனையாக்கு… நோபலை உனதாக்கு!” நேர்முகம் மூலம் நோபல் தமிôர் டாக்டா வெங்கட் ராமன் ராமகிருஷ்ணனின் அறிவியல் ஆர்வமும், அயராத உழைப்பும் அவர்க்கு அரிய நோபல் பரிசினை பெற்றுத் தந்தது என்பதனை அறிய முடிந்தது. நிறுவனர் நினைவுகளில், ‘குடும்பம் என்பது சுமையல்ல, நம்மை நெறிப்படுத்தி சரிப்படுத்தும் இடம்தான் குடும்பம்’ – இல.செ.க. நவின்றதை, தூசி தியாகராசன் கட்டுரையின் வாயிலாக அறிந்த போது, டாக்டர் இல.செ.க. மாண்பாளர் மட்டுமல்ல சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதையும் உணர முடிந்தது. இன்னும், சென்ற மாத இதழில் வெளிவந்த மன வள, உடல் நல கட்டுரைகள் அனைத்தும் அருமை.
– எம். முகம்மது பாரூக்
சீர்காழி.

தங்களின் வெளியீடான தன்னம்பிக்கை மாதஇதழ் படித்தேன் பல கருத்துக்கள் உள்ளடங்கிய தொகுப்பாகும். நீண்ட நெடுங்கால தொலைநோக்குப் பார்வையை மையமாகக் கொண்டு எழுதப்படும் விதம் மிகவும் அருமை. இயற்கை மருத்துவக் குறிப்புகள், விமர்சனக் கடிதங்கள் மற்றும் நகைச்சுவை துணுக்குகள் போன்றவற்றையும் சேர்த்து வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
– ந.த. பழனிச்சாமி
கணேசபுரம், கோவை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment