Home » Articles » தேர்வு என்றால் திகிலா

 
தேர்வு என்றால் திகிலா


தங்கவேலு மாரிமுத்து
Author:

– தங்கவேலு மாரிமுத்து

மாணவர் பக்கம்

பள்ளி என்றாலே தேர்வுகள் வரத்தான் செய்யும். அதற்காக திகில் அடையலாமா?

மாணவர்களே நான் ஆசிரியர் அல்ல. ஆனால் நல்ல மாணவனாய் இருந்தவன். நிறைய மதிப்பெண்கள் வாங்கியவன். உங்கள் பயத்தைப் போக்க, பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்க சில குறிப்புகள் தரலாமா?

உங்கள் ஆசிரியர்கள் தரும் அளவுக்கு என்னால் குறிப்புகள் தரமுடியாது தான். ஆனாலும் நான் ஒரு சுயமுன்னேற்ற ஊக்கு விப்பாளன் என்பதால், எனது யோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் சிலயோசனைகளை வழங்குகிறேன்.

காலத்தை மூன்று வகையாகப் பிரியுங்கள்.

1. கடந்தகாலம்

பள்ளி திறந்த ஜுன் மாதம் முதல் நேற்று முடிந்த நவம்பர் வரை, ஆறு மாதங்களை, நூற்றி எண்பது நாட்களை, அலட்சியம் செய்து கடந்து வந்து விட்டீர்களா? போனது போனதுதான். அதற்காகக் கவலைப்பட்டு காரியத்தைக் கெடுத்துக் கொள்ளலாமா? அந்த உறுத்தல் இருந்தால் போதும்.

2. எதிர்காலம்

மு ஆறு மாதங்கள் வீணாய்ப் போனாலும், இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. நூற்றி இருபது நாட்கள் இருக்கின்றன. அந்த நூற்றி இருபது நாட்களுக்கு இன்றுதான் முதல்நாள்.

மு வீணாகிவிட்ட நூற்றி எண்பது நாட்களை ஈடுகட்ட, வரப்போகும் நூற்றி இருபது நாட்களுக்கு வலிமையை ஏற்றுவது என்று விரதம் பூணுங்கள். இவைகளையும் வீணாக்கி விடக்கூடாது என்று உறுதி கொள்ளுங்கள்.

மு பணத்துக்கு பெரிய மதிப்பு உண்டுதான். ஆனால் படிப்புக்கும் நல்ல மதிப்பு உண்டு. அதையும் மறக்காதீர்கள்.

மு இன்று உங்கள் பெற்றோருக்கு நீங்கள் தோள் கொடுக்காவிட்டாலும் நாளை, உங்கள் பெற்றோருக்குப் பிறகு, உங்கள் குடும்ப நிலையை உயர்த்தப்போகும் பொறுப்பு உங்களுக்குத் தானே இருக்கிறது. அதற்கு படிப்பு என்பது அடித்தளமல்லவா? இந்த எண்ணம் இருக்கவேண்டாமா இதயத்தில். இத்தனையும் நெஞ்சில் இருந்தால், எதிர்காலம் உங்களை ஏமாற்றி விடாது.

3. நிகழ்காலம்

இதுதான் இன்று உங்கள் கையில் இருக்கும் சொத்து. இது தான் நிஜம். இதையும் கோட்டை விட்டால், ஒரேயடிகாக குறட்டை விட வேண்டியது தான்.

என்ன செய்யலாம்? இழந்து விட்ட கடந்த காலத்தை எப்படி ஈடுகட்டுவது?

மு தினமும் மூன்று மணிநேரம் படியுங்கள் என்று ஆசிரியர் அறிவித்தால், இன்று முதல் நீங்கள், தினமும் ஆறு மணிநேரம் அதற்கு மேலும் படிப்புக்காக செலவிடுங்கள். (Double Time)

மு அந்த ஆறு மணிநேரத்திலும், ஏதோ பேருக்கு உட்கார்ந்தோம் படித்தோம் என்று மேலோட்டமாகப் படிக்காமல், கண்கள் புத்தகத்தில் இருக்க, கவனம் எங்கோ அலைய, படிக்காமல், சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்து, தவம் செய்யும் முனிவனைப் போல் ஆழ்ந்து படியுங்கள். (Double involvement)

மு நூறுபேர் தேர் இழுத்தால், அதில் ஐம்பது பேர் வடக்கயிற்றை சும்மா தொட்டுக் கொண்டிருப்பார்கள். அது மாதிரி இல்லா மல், படிப்புக்கான உங்கள்முயற்சி, மிகமிகத் தீவிரமாக, மிகமிக உக்கிரமாக இருக்க வேண்டும். ஒரே கோணத்தில் இல்லாமல் பல கோணங்களில் இருக்க வேண்டும்.

மு படிப்பது, வாய்விட்டு சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது, சுருக்கி எழுதிப் பார்ப்பது, படித்ததை நண்பனுக்குச் சொல்லித்தருவது, பழைய கேள்வித் தாள்களை வைத்து, கால அவகாசம் வைத்து பதில்களை எழுதிப்பார்ப்பது, முக்கியமான ஃபார்முலாக்களையும், சமன் பாடுகளையும் எப்போதும் கண்ணில் படும் படி சுவரில் எழுதி வைத்து அடிக்கடி பார்த்து, மனதில் பதிய வைத்துக் கொள்வது…… (Double effort)

மு உங்கள் வகுப்பில் முதல் மார்க் வாங்கும் மாணவன் உங்கள் நெருங்கிய நண்பனாகவே இருந்தாலும், மனதுக்குள் அவனை, போலியாகவாவது மனதில் கறுவுங்கள்.

“நான் வாங்கிக் காட்றேண்டா முதல்மார்க்” என்று தனி அறைக்குள்.

உரக்கச்சொல்லி சபதம் போடுங்கள். தினம் தினம் சொல்லுங்கள். (Double focus on the target)

மு கற்க கசடறக் கற்க என்பதற்கொப்ப, என்ன படித்தாலும் அதில் எள்ளளவும் சந்தேகம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (Double dear)

ஆக, மூன்று காலங்களிலும் நிகழ்காலம் தான் உங்கள் சொத்து.

இதையும் அலட்சியத்தால், ஆணவத்தால், அறியாமையால், விளையாட்டுத்தனமாக வீணாக்கி விடாதீர்கள்.

தலைக்குமேல் வெள்ளம் என்று தளர்ச்சி யடையாமல், தலைக்கு மேல் இருப்பது பொறுப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். புத்துணர்ச்சி பிறக்கும்.

இன்று முயன்றாலும் வென்று காட்டலாம்.

(தொடரும்)

 

1 Comment

 1. B.SHIVAKUMARAN says:

  Dear Sir
  you gave wonderful advice to the students. It is very useful for them.
  Now the students will think about the past, plan and implement in the present and surely they will get success in the future exams.
  Thank you
  B.SHIVAKUMARAN
  TEACHER
  UNITED ARAB EMIRATES

Post a Comment