Home » Articles » 14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்

 
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்


மதியழகன்
Author:

– டாக்டர் பெரு. மதியழகன்

சென்ற இதழ் தொடர்ச்சி

மனித நேயமும் மாமனிதர்களும்

மனித நேயம் வற்றிட்ட வாழ்வு முன்னேற்ற மான வாழ்வாகாது. மனித நேயம் மங்கி வருவதன் மத்தியிலும் மங்காது ஒளிவீசும் மாமனிதர்கள் சிலர் வாழ்ந்து அழிந்தும் கொண்டும் உள்ளனர். நவகாளியில் நர்த்தனமாடிய மதவெறிதணிய தனியாளாக வெற்றுக் கால்களுடன் நடந்து சென்றாரே நம் காந்தியடிகள் மனித நேயத்திற்கு இது ஒரு சான்று.

மனித உயிர்கள் மதங்களின் வெற்றியில் மாய்ந்து போகிறசமயங்களில் எல்லாம் அங்கே மனிதம் காக்க ஓடோடிச் சென்று மனிதம் மடிந்து போகாமல் தடுத்தாட்கொள்ளுகின்ற தமிழ்மாமுனிவர், அன்பே வடிவான குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார். அவரும் மனம் குளிர மனித நேயத்தைக் கண் கூடாக சந்தித்த நிகழ்ச்சி இதோ.

ஒரு நாள் மாலைப் பொழுதில் மதுரையில் இரண்டு சமய நல்ணக்கக் கூட்டங்கள் முடித்துக் கொண்டு டி. கல்லுப் பட்டியில் ஒரு பொதுக் கூட்டம் முடித்துவிட்டு நள்ளிரவு இரண்டு மணிக்கு குன்றக்குடி நோக்கி பயணம் தொடர்கிறார். வண்டி குன்றக்குடி அருகில் நெருங்கும் சமயத்தில் திடீரென விபத்து நிகழ்ந்து விடுகிறது. அடிகளார்க்கு காயம் ஏற்பட்டு விட்டது. நடக்க இயலவில்லை. உடன் வந்த உதவியாளருக்கோ பலத்த அடி. மயக்க நிலையில் உயிருக்குப் போராடுகிறார்.

விபத்து நிகழ்ந்த அதிர்ச்சியிருந்து மீள்வதற்குள் உதவியாளரைக் காக்க அடிகளார் விரைந்து முயற்சிகள் மேற்கொள்கிறார். விபத்து நிகழ்ந்த இடம் ஓர் ஒதுக்குப்புறமான பகுதி, கும்மிருட்டு சூழ்ந்துள்ளது. வண்டி பாலத்தில் மோதி ஒருவர் அடிபட்டுக் கிடக்கும் நிலையைப் பார்த்தும்கூட எந்த வண்டியும் நிற்காமல் பயணத்தைத் தொடர்கின்றன. வருகிற போகிற வண்டிகளை வழிமறித்து உதவி கேட்டுப் பார்க்கிறார் அடிகளார். இருட்டில் அடையாளம் தெரியாத நிலையில் பல வண்டிகள் போகின்றன. ஆனால் ஒருவரும் நிறுத்தவில்லை.

சில நிமிடங்கள் ஒரு வண்டி அவர் அருகில் வந்து நிற்கின்றது. அடிகாளர் ஓடிச்சென்று உதவி கேட்கின்றார். இரத்தம் வழியக் காயம்பட்ட காலோடு நொண்டிக் கொண்டு அவர் ஓடி வருவதைப் பார்த்து அந்த வண்டிக்குள் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி. வந்து நின்ற வண்டியில் ஒரு பெண் மகப் பேற்று வலியோடு போராடுகின்றார். அந்தப்பெண் தாங்க முடியாத அந்த வலியையும் பொறுத்துக்கொண்டு உதவி யாளரையும் சுவாமியையும் காப்பாற்றுங்கள், நான் மரத் தடியில் கூட இறங்கிக் கொள் கிறேன் என்று கூறுகிறார். இதுதான் மனித நேயத்தின் உச்சமாகும்.

அடிகளாரும், உதவியாளரும் அந்த வண்டி யிலேயே மருத்துவமனை சென்று நலம் பெற்ற தாகத் தெரிவித்தார். பல விபத்துகளில்

விபத்தால் உயிர் இழப்பதைவிட, விபத்து நடந்த வுடன் மீட்பு, காப்பு முயற்சி மேற் கொள்ளாததால் தான் பல உயிர்கள் பலியாகிஉள்ளன. அந்தக் கசப்பான உண்மையை அன்றுதான் தாம் உணர்ந்ததாக அடிகளார் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது தமது அனுபவத்தைத் தெரிவித்தார். நம் ஊர் உலகமயமாவது இருக்கட்டும். முதல் மனிதமயம் ஆகட்டும்!

மனிதத்தைத் தொலைத்துவிட்டு இவர்கள் எங்கோ பறந்து கொண்டிருக்கிறார்கள்? அடிப்படையை இழந்து விட்டு ஆகாயத்தளவு உயர்ந்தாலும் அது உயர்வாகாது.

மதவெறியால் மனித நேயத்தை மாளவிடலாமா

சாதியும், மதமும் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் சவாலாக இன்றும் இருந்து வருகின்றன. சாதிக்கோட்டையை சாய்க்கப் போராடிய பூகம்பம், ஆதிக்க ஆணிவேரை அறுக்க அறிவாயுதம் ஏந்திய தந்தை பெரியார் ‘நமது முன்னேற்றம்’ என்றதலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் (பகுத்தறிவு, 1938 இதழ் 10 மலர் 3) ஒரு பகுதி இதோ.

ஒரு சாதி ஆணும் ஒரு சாதிப் பெண்ணும் கூடினால் என்ன சாதி மனிதன் பிறப்பான்? என்பது இன்னமும் ஆராய்ச்சியில் இருக்கின்றது. நம்மைப் போன்று யாராவது “என்ன அய்யா! மற்ற நாட்டார்கள் எவ்வளவோ முற்போக்கடைந் திருக்கும்போது நாம் இன்னமும் இந்த ஆராய்ச்சி யில் இருப்பது சரியா?” என்று கேட்டால் உடனே கோபம் வந்து “அட போ! உனக்கென்ன தெரியும்? நீ எவ்வளவு படித்திருக்கின்றாய்? எங்களுக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டாய். மேனாட்டு ஆராய்ச்சி இரண்டு நாளைய வாழ்வு. அது இகத்தைப் பொறுத்தது. இன்றைக்கு இருப்பவர் நாளைக்கு இருக்க மாட்டார்கள். இதெல்லாம் வாவென்றால் வரும். போவென்றால் போகும். மனிதன் எதற்காகப் பிறந்தான்? அவன் வந்த வேலையை அல்லவா அவன் கவனிக்க வேண்டும்? அது தான் ஆத்மார்த்தம், மோட்ச சாதனம்” என்று சொல் ஏதோ ஒன்றைத் தனக்கும் புரியாமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகிறார்கள். யாராவது தட்டிப் பேசினால் உடனே “தோஷம் தோஷம்” என்று கன்னத்தில் அடித்துக் கொள்ளுகிறார்கள். எனவே, நமது நாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கிறது. மற்றநாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்பதை இதிருந்து யோசித்துப் பாருங்கள். மனிதனுக்கு மனிதன் இழிவாகவும் அவமான மாகவும் கருதத்தக்கபடி, கீழ்மேல் சாதி பிரித்து பஞ்சமன் என்றும் மிலேச்சன் என்றும் சூத்திரன் என்றும் அழைக்கப்படுவதும், சக வாழ்வில் சுய மரியாதைக்கு ஈனமான நிலையில் தாழ்த்தப் பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கின் றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா?

அப்படியானால் இந்த நிலைமை இப்படியே வைத்துக் கொண்டிருப்பதால், நமது நாடு முற்போக்கு அடைய முடியுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இவைகளைத் திருத்தி இந்த வழியில் வீணாகும் செலவுகளை மற்ற நாடுகளைப் போல கல்விக்கும், ஆராய்ச் சிக்கும் தொழிலுக்கும் செலவிட வேண்டு மென்று சொன்னால், ஆத்திகம், மத தர்ம விரோதம் என்று சொல்லு கின்றார்கள். இது நாத்திகமா, மத விரோதமா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.

தீண்டாமை என்னும் விஷயத்திருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, “நாளை பார்த்துக் கொள்ளலாம், இப்போது அதற்கென்ன அவசியம், அவரசம்” என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.

சாதி மத மோதல்களால், எதிர்மறை செயல் களால் தனிமனித, சமுதாய மற்றும் நாட்டின் முன்னேற்றம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. என்பதைக் கண்கூடாக நாளும் பார்க்கிறோம். சாதிக் கலவரங்களில் எத்தனை உயிர்கள் பயிடப்படுகின்றன. எத்தனை ஊர்களில் மனிதர்கள் வீட்டோடு எரிக்கப் பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் இரயில் பெட்டியோடு மக்களைக் கொளுத்துகிறார்கள். அப்படி எரிந்ததைச் சிலர் வீடுகள் என்றார்கள், சிலர் மனிதக் கூடுகள் என்றார்கள். ஆனால் அங்கே சாம்பலானது மனிதநேயம், சவமானது நாகரிகம், வீழ்த்தப்பட்டது முன்னேற்றம்.

நாட்டின் மாபெரும் தலைவர் காந்தியடி களைக் கொன்றது எது? இந்திரா காந்தியைக் கொன்றது எது? மதம் அல்லவா. இதை நம் மக்கள் அறியாமல் இருந்தால் நாடு எப்படி முன்னேற முடியும். அதனால்தான் ‘மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்கிறார் வள்ளலார்.

அன்பே சிவம் என்கிறது இந்து மதம். ஆண்டவனுக்கு ஈமான் யார்? எவர் அண்டை அயலாரின் துன்பங்களைத் தம்முடைய துன்பமாகப் பார்க்கிறாரோ அவர்தான் ஆண்டவனுக்கு ஈமான் என்று இசுலாம் கூறும். அறிவு எனக்கு இருந்தாலும், ஆற்றல் பல யான் பெற்றிருந்தாலும், மறைபொருள் யாவும் நான் கற்றறிந்த போதும் மலைகளையே பெயர்த்து எடுக்கும் அளவிற்கு வமை என்னிடம் இருந்தாலும் எரிப்பதற்கோ என்னுடலைக் கையளித்த போதும் அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லை என்கிறது விவியம்.

ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது? எத்தனை கொடூரமான குண்டு வெடிப்புகள், கோவையில், மும்பையில் தினம் தினம் காசுமீரத்தில். உலகமெங்கும் நடக்கிற சர்வதேச வன்முறை என்கிறார்களே அதற்கு மூலதனமாக இருப்பது மதமல்லவா.

இதோ சத்குரு சொல்லுகிறார், மனிதன் மதம் சார்ந்து இயங்கத் துவங்கிய வினாடியே எல்லா மோதல்களுக்கும் முற்றுப்புள்ளியாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்ட வசமாக உலகமெங்கும் எல்லா மோதல்களுக்கும் மூலகாரணமாக மதங்களே மாறிக்கொண்டு வருகின்றன. இது பலபேரின் உயிர்களைப் ப வாங்கியதோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இந்த உலகில் மிகுந்த வயையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் இப்படி நிகழ்கிற தென்றால், தங்கள் அனுபவத்தில் இல்லாததை மனிதர்கள் நம்பத் துவங்கியதுதான். ஒரு சாராருக்கு ஒரு விதமான நம்பிக்கை. மறு சாராருக்கு வேறு விதமான நம்பிக்கை என்று இருக்கிறபோது மோதல் தவிர்க்க முடியாத தாகிறது. இன்றோ, நாளையோ அவர்கள் மோதியே தீருவார்கள். சிறிது காலம் அவர்கள் தர்க்கங்களைத் தள்ளிப்போடலாமே தவிர ஒரு நாள் அவர்கள் மோதிக்கொள்வார்கள். உங்கள் வழிதான் சரியென்று நீங்களும், தன்னுடைய வழிதான் சரியென்று வேறொருவரும் நம்பிக் கொண்டிருக்கிறபோது மோதலைத் தவிர்க்க முடியாது.

அவர் மேலும் சொல்கிறார் இந்த உலகின் மேல் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால் முதல் உங்களை மாற்றிக் கொள்வதற்கு நீங்கள் தயாராக வேண்டும். நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் என்பதுதான் யோகா என்பது. உலகத்தை மாற்றவிரும்புகிறேன் என்று சொன்னால் அங்கு மோதல் தான் ஏற்படும். தன்னையே மேல்நிலைக்கு எடுத்துச் செல்வதுதான் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் முழுமையான நன்மை தருவதாக இருக்கும். இதுதான் உண்மையான புரட்சி (பாதையில் பூக்கள், 2008, பக்கம் 77 முதல் 79 வரை).

எனவே நாம் பார்க்காதவற்றையும், அனுபவத்தில் இல்லாதவற்றையும் மதத்தின் பேரால் மூடநம்பிக்கையாகக் கொண்டதால் தான் இன்று உலகத்தின் முன்னேற்றத்திற்கே பெரும் தடை ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஆன்மிகவாதி களும், பகுத்தறிவுவாதிகளும் தெரிவிப்பதிருந்தே மதமே மனித குல முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக சவாலாக இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இனி சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழும் அனைத்துத் தீமைகளையும் வென்றெடுத்து முன்னேற்றமடைய வேண்டு மானால் பகுத்தறிவின் உச்சமான மனித நேயம் போற்றுவதால் மட்டுமே முடியும். மனித நேயமே முன்னேற்றத்திற்கான மூலதளங்களின் அடித் தளம் எனலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்