Home » Cover Story » ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!

 
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!


மணி M.N.G
Author:

– முனைவர் M.N.G. மணி

நேர்முகம்: டாக்டர் செந்தில் நடேசன்

அறிவு பலவீனமுடையது. நம்பிக்கை சர்வசக்தியுடையது. அந்த நம்பிக்கைக்கு முன்னால் இயற்கையின் சக்திகள் கூட ஒதுங்கி வழி விடுகின்றன. ஆத்மார்த்தமான முன்னேற்றத்திற்கு வேர் போலிருப்பது நம்பிக்கை. மற்றவற்றையெல்லாம் நீங்கள் ஒதுக்கித் தள்ளிவிடலாம். ஆனால் நம்பிக்கை மட்டும் இருக்க வேண்டும்”
– ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

“எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற் கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
– சுவாமி விவேகானந்தர்

நம்மால் முடியுமா? என சோர்ந்து போகும் உடற்குறைபாடு உடையவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை வெளிச்சத்தை பிரகாசமாய்த் தந்து கொண்டிருப்பவர் முனைவர் M.N.G. மணி அவர்கள்.

பசுமை நிறைந்த நீலகிரி மாவட்டத்தி லுள்ள முக்கிமலை எனும் சிறிய கிராமத்தில் பிறந்து, எடக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பி.யூ.சி., இளங்கலை மற்றும் முதுகலை கணிதம், இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் படிப்பில் முதல் மாணவராக தங்கப் பதக்கம், மேலும் இரண்டு முனைவர் பட்டம், ஒன்று இந்தியாவில் – மற்றொன்று அமெரிக்காவில். அமெரிக்காவில் முனைவர் படிப்பின் போது சிறந்த மாணவருக்கான பரிசு.

2006 வரை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரியில் முதல்வராகப் பணி. அதனைத் தொடர்ந்து விவேகானந்தா பல் கலைக் கழகத்தில் ஊனமுற்றோர் மேலாண்மை மற்றும் சிறப்புக் கல்வித்துறையில் முதன்மையர் (Dean) ஆகப் பணி.

முனைவர் மணி அவர்களுக்கு பாடத் திட்டத்தினை கற்பிப்பதில் புதுமையையும், கற்பிக்கும் முறையில் தொழில் நுட்பம், ஆராய்ச்சி, மதிப்பீடு போன்ற புதிய அணுகு முறையினையும் கொண்டு வந்த சிறப்பு உண்டு. தற்போது இவர் ‘பார்வையற்றோர் கல்விக்கான சர்வதேசக் கழகத்தின்’ (International Council for Education of People with Visual Impairment – ICEVI) பொதுச் செயலராக (Secretary General) பணியாற்றி வருகிறார். இந்நிறுவனமானது யுனஸ்கோ, யுனிசெப் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு சர்வதேச அளவில் பார்வை யற்றோர் கல்விக்கென செயலாற்றி வருகிறது.

“2015க்குள் அனைவருக்கும் கல்வி” என்பதை இலக்காகக் கொண்ட இந்நிறுவனத்தில் இவரின் பணியானது உலகின் பல்வேறு மண்டல அமைப்புகளை ஒருங்கிணைத்து பார்வை யற்றோருக்கான கல்விப்பணியினை மேம்படுத்து வது ஆகும். உடல் ஊனமுற்றோர், பார்வை யற்றோர் ஆகியோர் கல்வி குறித்து விவாதிக் கவும், கூட்டங்களில் பங்கேற்கவும், மற்றும் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவும் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

மேலும் இவர் ‘பார்வையற்றோர் அனை வருக்கும் கல்வி’ எனும் பிரச்சார இயக்கத்தின் செயல் இயக்குநராகவும் (Executive Director, Education For All children with Visual Impairment – EFA-VI) உள்ளார்.

இவர் ஆசிரியர் கல்வி, உயர்கல்வி, சிறப்புக் கல்வி, கண்பார்வையற்றோர், கற்றலில் குறைபாடுடையோர், மதிப்பீட்டுக் கல்வி கற்பிக்கும் முறைகள் என்று பல்வேறு தலைப்பில் 20க்கும் மேற்பட்ட நூல்களையும் 100க்கும் மேற் பட்ட கட்டுரைகளையும் எழுதி இருப்பதுடன் ‘வியக்க வைக்கும் அபாகஸ்’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். மேலும் கண் பார்வையற்ற குழந்தைகள் எளிதில் கணிதம் கற்கக் கூடிய வகையில் ஓர் புத்தகத்தையும் வெளியிட்டிருக் கிறார். மேலும் M.Ed., M.Phil., Ph.D. படிப்பு களுக்காக 96 ஆய்வுகளை மேற்கொண்டு 23 வகையான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார்.

உடல் ஊனமுற்றோருக்கு பணியாற்றும் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மேலும் திறம்பட பல சேவைகளை செய்ய இயலும் எனும் நோக்கில் இவரால் கோவையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே யூடிஸ் அமைப்பு (UDIS Forum) ஆகும். இவ்வமைப்பில் பெற்றோர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினைச் சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ஊனமுற்றோரையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிசெய்வதன் மூலம் அவர்கள் யாருடைய சார்பும் இல்லாமல் சுயமாக வாழ வகை செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு யூடிஸ் அமைப்பானது செயலாற்றி வருகிறது. மேலும், இந்த அமைப்பின் மூலமாக தொழிற்சாலைகளில் ஊனமுற்றோருக்கான பணியிடங்களை கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியும், பார்வையற்ற மாணவிகள் கல்வி பயில கல்வி உதவித்தொகை பெற உதவியும், அவர்களின் பணிமேம்பாட்டிற்கு ஆதரவு அளித்தும் வருகிறது.

ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து உலக அளவில் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு தொண்டாற்றி வரும் முனைவர் மணி அவர் களின் சேவையால் இன்று பலரும் பல்வேறு வகையில் பயனடைந்து வருகிறார்கள். இச்சிறப்பிற்குரியவருடன் இனி நாம்…

உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு பெருமளவு உதவ வேண்டும் என்கிற சிந்தனை எழக் காரணம்?

நான் படித்தது ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில். அங்கு எனக்கு சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் பெருமளவு உத்வேகத்தை தந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தியே வடிவமானவர். சாரதாமணி அம்மையார் கருணையே வடிவமானவர். சுவாமி விவேகானந்தர் வீரத்திறன் மற்றும் அறிவு வடிவ மானவர். இந்த மூன்றுபேரையும் மற்றும் அவர்களது பண்பு நலன்களையும் நான் ஒரு சேர அங்கு ஒருவரிடம் கண்டேன். அவர்தான் வித்யாலயத்தின் நிறுவனர் திரு. அவினாசிலிங்கம் அய்யா அவர்கள். சேவை ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்து காட்டிய மகான். அவருடைய கல்விப் பணியானது மதிப்பிட முடியாதது. அவருடைய சேவை மனப்பான்மையே எனக்கு இத்துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும் உத்வேகத் தையும் ஏற்படுத்தியது. அதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது. புதிதாக நான் எதுவும் செய்யவில்லை. ஏதோ ஓர் காரணத்திற்காக மற்றவர்கள் செய்யாததை நான் செய்தேன். ஆகவே அது புதிதாகத் தெரிகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற நீங்கள் உடல் குறை
பாடு உள்ளவர்களுக்கு கல்வி என்ற துறைக்குச் சென்றதற்குக் காரணம்?

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு கற்பிப் பதில் சிக்கல் இருந்த காலத்தில் இந்தப் பாடங் களை அவர்களுக்கு போதிக்க “பயிற்றுவிக்கும் முறை” (Teaching Method) தேவைப்பட்டது.

1980ல் அபாகஸ் முறையில் கணிதத்தைச் சொல்லிக் கொடுப்பது பற்றி எனது ஆசிரியர் டாக்டர் போர்ஜியால்ட் (ஈழ். Bourgeault) “அபாகஸ் எளிய முறை” (Abacus Made Easy) என்ற புத்தகத்தைக் கொடுத்து எப்படி சொல்லிக் கொடுப்பது என்று விளக்கினார். அதன்பின்பே எனது கணித யூகத்தை வைத்து ஆய்வு செய்து “Amazing Abacus” என்ற புத்தகத்தை உருவாக்க நேர்ந்தது. இந்தப் புத்தகம் நமது நாட்டில் பல்வேறு மொழிகளிலும், சீன மற்றும் ரஷ்ய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பது, மேலும் அவர்களை மற்ற மாணவர்களுடன் இணைத்து எவ்வாறு கற்பிப்பது போன்ற கடுமையான பயிற்சிகள் டாக்டர் போர்ஜியால்ட் அவர்களால் நான்கு மாதங்கள் அளிக்கப்பட்டது. இது எனக்குள் இத்துறை மீது ஆர்வத்தை அதிகப் படுத்தியது. மேலும் இத்துறையில் உள்ள இடர்ப் பாடுகள் கண்டும், இதில் நாம் செய்ய வேண்டிய பணிகள் மிக அதிகம் இருப்பதாக உணர்ந்தும், இந்தத் துறையின் மீது ஈடுபாட்டினை நான் ஏற்படுத்திக்கொண்டேன்.

‘யூடிஸ்’ என்கிற உடல் குறைபாடு உடையவர் களுக்கான அமைப்பு உருவான விதம்?

ஊனமுற்றோருக்கு உதவுவதற்கென பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து செயல்படலாம் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த அமைப்பு. மேலும் இவ்வமைப்பிற்கு என்ன பெயரிடலாம் என யோசித்தபோது உருவான பெயர்தான் ‘யூடிஸ்’ (UDIS). ‘நீங்களும் ஊனமுற்றோரும்’ (You and the Disabled) மற்றும் ‘ஊனத்தைப் புரிந்து கொள்ளுதல்’ (Understand Disability) என்பதே இதன் விளக்கமாகும். இவ்வமைப்பானது ஊனமுற்றோரின் பெற்றோர், ஊனமுற்றோர், ஊனமுற்றோர் துறை சார்ந்த வல்லுநர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங் கள் போன்றவற்றின் கூட்டமைப்பே ஆகும்.

மேலும் இந்த அமைப்பு உருவாவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது சர்வதேச அளவில் இன்று உடல் ஊனமுற்றோருக்கு பெரும் தொண்டாற்றிவரும் ஜெர்மனியின் சி.பி.எம் (CBM) நிறுவனமாகும். உடல் ஊனமுற் றோருக்கான அவர்களது உலகளாவிய சேவையை இந்தத் தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.

‘யூடிஸ்’ அமைப்பின் நோக்கம்?

உடல் குறைபாடுடைய ஒருவர் தனது வாழ்வில் அன்றாடப் பணிகளை மேற்கொள்வது முதல் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் பல்வேறு இடர்களை சந்திக்க நேரிடுகிறது. உடற் குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்திட அவர்கள் வாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகளைக் களைவது முக்கியமானதாகும்.

ஒரு காலத்தில் ஊனமுற்றோருக்கான சேவைகள் மறுக்கப்பட்டாலும் இன்று அது உரிமைப்பிரச்சனையாக மாறியிருப்பதன் மூலம் இவர்களது தேவைகளை சமுதாயம் உணர்ந் துள்ளது. சமுதாயத்தில் ஊனமுற்றோரைப்பற்றி நிலவும் தவறான கருத்துக்களை போக்கி உடல் ஊனமுற்றோர் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவது முக்கியமான பணியாகும். தற்போதைய முக்கியத் தேவை என்னவெனில் ஊனமுற்றோருக்கும் சமுதாயத்திற்கும் இடையே உறவுப் பாலம் அமைப்பதுதான். அதற்கான முயற்சியைத்தான் யூடிஸ் அமைப்பு மேற்கொண்டுள்ளது.

பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கான கல்வியில் பெரும் பங்காற்றி வரும் ICEVI நிறுவனத்தில் உங்கள் பணி குறித்து?

பார்வையற்றோர் கல்விக்கான சர்வதேசக் கழகமானது (ICEVI) 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இந்த அமைப்பானது சர்வதேச பார்வையற்றோர் குழுமத்துடன் (World Blind Union) இணைந்து 2015க்குள் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் கல்வி எனும் இலக்கினை செயல்படுத்தி வருகிறது. இதன் பணியானது பாலின பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி வழங்குதல், சிறப்பு மற்றும் பொதுக் கல்விக்கான முறையை திட்டமிட்டுக் கொடுத்தல், தொழில் நுட்ப ரீதியான உதவிகளை செய்தல், ஊனமுற்றோர் கல்விக்கான நெறி முறைகளை ஏற்படுத்துதல் போன்றவையாகும். இந்த அமைப்பின் மூலம் கல்வி குறித்த பல்வேறு ஆலோசனைகளையும் விழிப்புணர்வினையும் பல்வேறு நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் ஏற்படுத்தி வருகிறோம்.

தாங்கள் கல்வி கற்று, பணிபுரிந்த கோவை

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் குறித்து?

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் தயாரிப்பு நான் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். நான் வித்யாலயத்தில் மாணவனாக இருந்தபோது ஒருமுறை திரு அவினாசிலிங்கம் அய்யா அவர்களிடம் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து நீங்கள் அனைவரும் போராடினீர்கள். சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலையில் எங்களைப்போன்ற மாணவர்கள் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் வினவியபோது அய்யா அவர்கள் சொன்னார்கள் “அவரவர் செய்யும் வேலையை சரியாகவும், சிறப்பாகவும் செய்தாலே போதும்” என்று. செய்யும் பணியினை நேர்மையுடனும் சரியான முறையிலும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்திய வித்யாலயத்தில் என்னைத் தொடர்பு படுத்திக் கொண்டதில் பெருமைப்படுகிறேன்.

வித்யாலயத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருப்பினும் ஊனமுற்றோருக்கான சர்வதேச மனித வள மேம்பாட்டு மையத்தில் (IHRDC) பணியாற்றியது நிறைவைத் தருகிறது. பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தக தயாரிப்பு, நோட்டு புத்தகங்கள் தயாரித்தல், செவித்திறன் குறிபாடுடையோருக்கான பயிற்சி கள், மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சிகள், இயன்முறை மருத்துவம், செயற்கை அவயங்கள் தயாரித்தல், பார்வையற்றோருக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள், சிறப்பாசிரியர் களுக்கான பயிற்சிகள் என பல்வேறு பணிகளை இம்மையம் சிறப்புடன் மேற்கொண்டு வருகிறது.

இன்றைக்கு உடல் குறைபாடு உள்ளவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேறி வருகிறார்களா?

நிச்சயமாக அதிக அளவில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். ஆசிரியர் பணி, நிர்வாகம், மருத்துவம், கணினித் துறை, தகவல் தொடர்புத்துறை, சட்டவியல், பிஸியோதெரபி, இசைத்துறை, தச்சுத்தொழில், அச்சகம் தொடர்பான பணிகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஐ.ஏ.எஸ். போன்ற அரசுப் பணிகளிலும் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.

ஊனமுற்றோர் நலனுக்கு நமது இளைஞர்களின் பங்களிப்பு எந்த விதத்தில் இருக்க வேண்டும்?

இளைஞர் சமுதாயம் ஆயிரக் கணக்கில் திரண்டால் சமுதாயத்தில் ஊனமுற்றோர் பற்றிய நல்ல எண்ண மாற்றத்தை கொண்டுவர முடியும். அந்த நல்ல மாற்றத்தை ஏற்படுத்த உண்மையான முகவர் களாகிய இளைஞர்களுக்கு பின்வரும் ஐந்து கருத்துக்கள் உதவும் என்று நம்புகிறேன்.

1. சமுதாயத்தில் ஆக்கபூர்வமான நபர்களாக ஊனமுற்றோர் திகழ முடியும் என்ற மனஉறுதி இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.

2. எங்கும், எப்போதும் வாய்ப்புக் கிடைக்கும் சமயத்திலெல்லாம் ஊனமுற்றோரின் திறமை களை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

3. ஊனமுற்றோர் தொடர்பான கூட்டங்களிலும், கருத்தரங்கங்களிலும் தன்னார்வத் தொண்ட ராக கலந்து கொண்டு ஊனமுற்றோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

4. பார்வையற்றோருக்கு புத்தகங்களை படித்துக் காட்டியும், காதுகோளாதோருக்கு செய்தி களை தெரிவிக்கும் நபராகவும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவியாளராகவும், இயக்க நிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பாதுகாவலராகவும் இருந்து சேவை செய்யுங்கள்.

5. வேலை தருபவர்களிடம் இயன்ற அளவிற்கு உடல் ஊனமுற்றோரை பணியில் அமர்த்த உற்சாகப்படுத்துங்கள்.

மேற்கண்ட ஐந்து கருத்துக்களையும் செயலாக்கும் போது ஊனமுற்றோர் நலனுக்கு இளைஞர்களின் பங்களிப்பு நிறைவானதாக இருக்கும். இந்தக் கொள்கைளுடன் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் இளைஞர்களைக் கொண்டு இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்தி ஊனமுற்றோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

யூடிஸ் அமைப்பின் பிற செயல்பாடுகள்

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் திட்டம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உதவி யுடன் தொழிற்சாலைகளிலும் பிற நிறுவனங் களிலும் ஊனமுற்றோருக்கான பணியிடங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல்.

மார்கா ஷுல்ஸே கல்வி உதவித்திட்டம்

பார்வையற்ற மாணவிகள் பட்டப்படிப்பு, கல்வியியல் பட்டம் மற்றும் முதுகலைப் படிப்பை தொடர, கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அளித்தல்.

தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியளித்தல்

ஊனமுற்றோருக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ள பிற தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப் பினை ஏற்படுத்துதல்.

ஊனமுற்றோர் சங்கங்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சங்கங்களை உருவாக்கி அவர்களது மறுவாழ்விற்கு வழிவகுத்தல்

உடல் குறைபாடு உடையவர்களுக்காக நிறைய சேவை புரிந்து வருகிற நீங்கள் உங்கள் நூல்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

“பார்வையற்றோருக்கு கற்பிக்கும் நுட்பங்கள்” எனும் புத்தகமானது அகில இந்திய அளவில் பாட நூலாக பயிற்சி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்வியியலில் ஆராய்ச்சி, உள்ளடங்கிய கல்வி முறை, கற்றல் குறைபாடுடையோர் கற்கும் முறை, அபாகஸ் போன்றவை எனது முக்கியமான நூல்களில் சில.

மொத்தம் 21 புத்தகங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். உலக அளவில் 100க்கும் மேற்பட்ட மாநாடுகளிலும் கருத்தரங்கங் களிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் 120க்கும் மேற்பட்ட கருத்தரங்கங் களையும், மாநாடுகளையும் தலைமையேற்று நடத்தியதிலும் பெருமை கொள்கிறேன். மேலும் இந்தக் கருத்தரங்கங் களிலும், பயிலரங்கங் களிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்ததில் மன நிறைவு கொள்கிறேன்.

ICEVI என்ற உலக அமைப்பின் செயலாளராக உலகின் பல நாடுகளுக்கு தொடர் பயணம் மேற் கொண்டு வரும் தாங்கள் குடும்பத்துடன் நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள்?

நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் குடும்பத்துடன் இருக்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. எந்த அளவு உபயோகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நீங்கள் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஈடுபாட்டுடனும், குடும்பத்தின் சுக துக்கங்களில் முழுமையாகவும் பங்கெடுத்துக் கொள்வது அவசியம்.

எனது மனைவி முனைவர் இரா. சாரதா அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். மகள் நிவேதிதா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். (உயிரியல் தொழில் நுட்பம்) பயின்று வருகிறார். மகன் கார்த்திக் நரேன், கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தின் ஒத்துழைப்பு, நான் இப்பணியில் முழு மனதுடன் ஈடுபட மிகவும் உதவியாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

மறக்க முடியாத விருது இதுவென்று நீங்கள் கருதுவது?

பல விருதுகள் கிடைத்த போதும் மிக உயரிய விருதாக நான் கருதுவது வித்யாலயத்தின் 75ம் ஆண்டு நிறைவு விழாவின் போது கிடைத்த விவேகானந்தர் தேசிய விருது தான். நான் படித்த மற்றும் பணிபுரிந்த நிறுவனமே என்னை கௌரவித்து கொடுத்த விருதினை என் வாழ்வில் மறக்க முடியாத என்றும் உயரிய விருதாக கருதுகிறேன்.

மாணவர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது

இந்திய மாணவர்களிடம் அறிவு பலமும், பகுத்தாயும் திறனும் (Analytical Power) நன்றாகவே இருக்கிறது. எந்தத் தொழிலையும் உன்னதமாக நினைக்கும் தன்மை (Dignity of Labour), தொடர்பு கொள்ளும் திறன் (Communication) மற்றும் குறிக்கோள் வகுத்தல் (Goal Setting) ஆகியவை சேரும்போது நமது இளைஞர் சமுதாயமானது உலகில் மிக உன்னதமான நிலைக்கு வர இயலும். முக்கியமாக இந்திய கலாச்சாரத்தையும் பண் பாட்டையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நமது அடையாளம்.

ஊனத்தை வென்று சாதித்தவர்கள்

மேஜர் அலுவாலியா

இவர் தனது 26 வயதில் எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். பின்பு இந்தியா- பாகிஸ்தான் போரில் ஊனமடைந்து கடந்த 40 ஆண்டுகளாக சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வருகிறார். இந்திய மறுவாழ்வுக்கழகத்தின் (RCI) தலைவராக இருந்து ஊனமுற்றோர் நலனுக்கு அரும் பணியாற்றியுள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

‘சார்பியல் சித்தாந்தம்’ என்ற உயரிய கருத்தை உலகிற்குத் தந்த இவரால் தனது 8 வயது வரை படிக்க முடியவில்லை. எனினும் இவரின் கற்றல் குறைபாடு பௌதீகத்தின் நோபல் பரிசு பெறுவதற்கு தடைக்கல்லாக இருக்கவில்லை.

பீத்தோவன்

28 வயதில் கேட்கும் திறன் இழந்த பின்புதான் தனது பிரபலமான இசையினால் மிகப்பெரிய இசை வல்லுனரானர்.

ஜான் மில்டன்

43 வயதில் கண்பார்வை இழந்த இவர், அதன் பின்னர் தான் இழந்த சொர்க்கம் என்றஉலகமகா இலக்கியத்தை படைத்தார்.

மேலும் கோவையைச் சேர்ந்த பார்வையற்ற திரு. ரகுமான் சாந்த் பாஷா என்பவர் தனது முயற்சியாலும் தனது பெற்றோரது வழிகாட்டுதலாலும் இன்று வழக்கறிஞராக பணிபுரிகிறார்.

பார்வைக் குறைபாடுடைய திரு. தினகர், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று இந்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார்.

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணிபுரியும் திரு. சிவசாமி அவர்கள் உடல் ஊனம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்.

செல்வி சுகந்தி தனது உடற்குறை பாட்டினை பொருட்படுத்தாது கல்வி கற்று தற்போது ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றுகிறார்.

இவர்களைப்போன்று பல்வேறு துறை களில் ஊனத்தை வென்று சாதித்துக் கொண்டிருக்கும் உடற் குறைபாடு கொண்ட பலர் இருக்கிறார்கள். இவர்கள் தம்மைப் போலுள்ள உடல் ஊனமுற்றோருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், சாதனையாளர்களாகவும் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது என்கிறார் முனைவர் மணி.

 

4 Comments

 1. தங்களது கட்டுரை மிக அருமை.
  தங்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம். ஊனமுற்றோர் என்ற சொல் வழக்கத்திலிருந்து ஒழி்க்கப்பட்டு விட்டது. இனிமேல் தாங்கள் தயவுசெய்து மாற்றுத்திறனாளர் என்ற வார்த்தையினை பயன்படுத்தினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
  நன்றி.

 2. M.J. SYED ABDULRAHMAN says:

  மீண்டும் மீண்டும் வேண்டும் தன்னம்பிக்கை
  குட் நன்றி – சிறப்பு

 3. Kalpana says:

  I was born, on 29th January, 1963 and was named Kalpana, which means imagination, certainly not realizing, the aptness of my name, since we were about to experience some happenings which we had not imagined, even in our worst nightmares. I grew up as like every other normal girl, with my share of pranks. I used to be hyperactive which I still have, since I cannot bear to waste time sitting idle and twiddling my thumbs. My mother tells me, I used to simply drive her crazy with my hyperactive nature. When my sister was born, when I was six and she happened to be a slow and sedate person who was afraid of taking risks and hurting her self. She was relieved and happy that at least my sister was human like her one. She could relied and not a meteorite like me, which is shuttling down to the earth, at a neck breaking speed. Adding to my tale of woes is the fact, since my father considers only academic excellence to be the measure of success in the world, myself being an average student, irked them to no end combining with the fact that I was, a don’t care master. At least I tried to act like one.

  So, I was always ridiculed, reprimanded and never trusted, as being good at something, do something worth, while I knew this has no relevance to this story, (but this attitude is continuing even to day) that my parents were not taking me seriously, when I told them. I want to start a business, but they are forever discouraging.

  I know, I am partly to be blamed, for I have never succeeded in putting across my thoughts and convictions to my parents nor I ever succeeded in my venture to convince them but I have always tried but have been discouraged at the first failure. But, it has to be said since this is one of the basic factors, for the state I am in today. I grew up, to be a confused character, though I was always sure of my talents and do know what I wanted to do, but never developed the ability to put forth my views to others, let alone to convince them. We were growing up happily in Chennai, when a major change in our lives had happened, when my life started tumbling down, like a pack of cards or like building during an earth quack.

  My father was deputed from Parent Department to other PSU. We were advised to stay back in Chennai, since I was in VIII Std at that time and as I would have to learn Hindi in place of Tamil, which was my second language in Chennai and every one felt including my School Principal, that it would be quite an upheaval one for me that stage.

  We did not listen to those warnings of our well wishers and set out on our journey to Lucknow, which later proved to be an adventure, but was a disastrous one which we regret even till this day. But we were not afraid of difficulties. We took it as a challenge and proved our mettle. But this is here fate, if you can call it so, or ignorance, which played its part in turning my life Topsy-Turvy, derailing it so badly, never able to set back on the rails again.

  It all began, when I was in class nine. Myself and sister, would be dropped at school on a scooter, by our father and since we would be seated in our classes for the major part of the day, the problems arose when we walked back home from school, after walking most part of the distance and my ankle slowly starting to twist and increased slowly over many months and finally I felt, I could not take even a step forward. Then, I had no other option, other than to stop walking, rest my foot for awhile, but as that would look odd with people around me looking at me puzzled as to why am I standing by road side and used to hire a rickshaw, for a distance of only few steps. Sometimes, the rickshaw puller would refuse to accept money, since it was only a short distance but I would feel ashamed. This went on and off. Unfortunately sometime when I walked back home with my friends my ankle would not turn twist and I can’t explain the reason for this, since I my self was searching for the reason which only made my parents to decide firmly on their mind, that all this was a figment of my imagination.

  But just imagine my plight. I used to constantly live in a fear, expecting every second a twist in my legs. But I had no way of convincing my parents that my problem was real and I was not taking it, to gain the attention of my parents or to trying divert my attention from academics. In the beginning, I found the going as there was a vast difference in the syllabuses of Chennai schools and Lucknow schools. Every time a problem propped up, a new reason would evolve again and I would be told, in no nonsense terms that instead of my worrying about situation, I better backup and letting go of my adamancy and be of my normal self again. I wanted to scream out in frustration, that there was nothing in my mind which led to this problem. But, I could not express my self clearly, which has always been my draw back. Later on this disease left me speechless. I mean I could not speak. Since by this time, all my muscles had become stiff and rigid.

  Slowly, these started deteriorating with my eyes aching but a clear report confirmed my parents views that it was all my mind doing, but later on my stand was vindicated when we went for a repeat test for detection of K.F. Rings which is a sure sign of Parkinsonism in my eyes as I had a slight squirt which I did not have since my birth, but which had developed recently. Back came the reply from the Doctor, in a split second as he said that there was nothing wrong with my eyes. It’s due to some Neurological problem. So please consult your neurologist which made me so happy, I felt at last I have been proved my self. But my self esteem and confidence had taken a bashing. Let us go back to the start of this disease as many more facts are to be revealed. Soon after the ache in the eye, my left hand started slowing down. I some how managed with one hand and last but not the least. I developed a limp in my left leg. I would be bombarded with question pertaining to my symptoms but since I had no knowledge of what was happening to me, then I used to give them a reason or excuse what ever came to my mind. There were difficult times for I knew, there was nothing wrong in my mind. The problem was something else, which I couldn’t point. Some would list out some Doctors, for consultations, whom they believed could do wonders by treating any diseases. But things would get tough for me, like having to keep up academics, also coping with my fears of my deteriorating health for which I had no explanation. Something, which I was blamed to be making it up and having to answer, those who were inquisitive enough to drill me, to satiate their curiosity also. Due to all those problems, my self esteem went into dumps and confidence fork abashing also, since I have always been a don’t care master breezing through life. I was believed to be not in the least bothered about my life and failure but no one realized it was with every ounce of my will power, I was coping and living. So going through ups and downs all sorts of trials and the tribulation, pulled up my strength mental also, of course but I completed my studies. By this time, my health situations had worsened and it was decided that a Neurologist would be consulted.

  Here, began my second phase of test of my mutual strength. The first neurologist we consulted, conducted a series of test starting from regular and simple test, like blood culture to minute and complicated ones like CT scan, but nothing came out of it. So, it was diagnosed as being psychological and I was sent to a psychiatrist, who riddled me with questions and started, successions of counseling leaving me with craters in my arms after bouts of sodium compositions injections but two months passed on with no improvement. We had to return to Lucknow where our father was working.

  We consulted a Doctor in Chennai, our native place. My younger sister was in school and it would affect her future. If we stay long in Chennai and we explained this to our Doctor and he allowed us to return to Lucknow and to continue my treatment in Lucknow itself. We consulted a Doctor in Lucknow Medical College, who correctly diagnosed it as Parkinson’s, Disease but also made a small mistake by not only prescribing Levadopa, increasing its quantity, rapidly, overlooking its side effects, resulting in involuntary movements being developed and muscle distortions continuing for two days, which made my parents to send my reports to a Specialized Institution which was the greatest mistake we ever did. They sent a report stating that since Parkinson’s Disease was an oldage disease and affect only after sixty, if worse come worse, it affects 50 years of age only but not before. My treatment for Parkinson’s was put to an end and the psychiatrists treatment again took over. Psychiatrists used to bombard with all types of questions. The moment I unwillingly said something, they would pounce up on it and pin me down stating it, to be the cause of my mental state. I tried my level best to convince them, but instead I was brain washed and forced to accept it what they said. Our medical treatment is rather orthodox and not ready to accept any changes with their challenges and their beliefs, but that attitude has caused me my life. We lost our way and are still trying to find it. But the psychiatric treatment made matters worse. When my mother asked a Doctor whether physiotherapy, would help, he jokingly, said, do you have lots of money to spare, if so, give it me, don’t waste it on a physiotherapist. Since your daughter has a mental block and refusing to let it go. She is also adamantly clinging on to it and is not cooperating. So no amount of physiotherapy would help because unless she cooperates, exercises will do her no good and it will only be a sheer waste of money. Only God can help her. So you pray God that he give her, some good sense, which will help her to recover but he was also wrong. Even, if I had not been able to do exercises alone by my self, someone else will be exercising my body for me, I am not saying I would have recovered, but definitely, I would have been in a better condition. Since my body would not have been surged and thus rendering me bed ridden. Even after the right diagnosis now and the right treatment having been started, my recovery is being an uphill task thereby being a very slow process, which is, not only dampening my spirit at times, sending me into dumps. I have had lots of experiences like this. Let me tell you one more. A Doctor in Lucknow suddenly said, he had a brain wave that since my parents were supporting me and I was adamant, not willing to change my mind and trying to recover, so he decided that I should be separated and kept in isolation, not allowed to see my parents, which we thought, would make me give up my obstinacy and let go my mental block and then recover completely. This was arranged in the beginning, besides giving me two electric shocks, I was kept in a private room in isolation, but nothing happened.

  So I was shifted to the general ward of psychiatry. He took the decision with his thought in mind that I would not be able to stand the dirty atmosphere and the clutter of patients. It was a horrible experience. I very well remember one incident clearly. One night I fell down from bed and broke one of my front tooth.

  But the height of negligence was, I was not taken to a Dentist, which I expected that morning. But no tone bothered, to take me to a Dentist. So, I realized I had to do something my self and begged around for a paper and pen and wrote letter to my mother, with great difficulty. The letter reached my mother, when she usually come to meet the Doctor every day to know about my progress. My mother, took the necessary steps of taking one to a dentist. One day my mother saw me being humiliated in front of others by one caretaker that was the last straw my mother could take no more and met the Doctor and despite his warnings she got me discharged and took me home. But all my experiences were not so bad. After all there were some in which I found a streak of humour if its not too much to do so. It happened while I was admitted in the Medical College Hospital in a serious condition with my muscles all over the body twisting and shaking for two days, due to over dose of Medicine, I was asked to have a blood culture done at the lab at the hospital itself, the pathologist conducted a test to check the hemoglobin count, also giving us a heart attack by casually throwing the slide on to a pile of slides, without any kind of identification mark. When we requested him, after pointing out his mistake that he had not done a test for blood culture, he rudely asked me whether I was a Doctor. When I said I was not a Doctor he told me to mind my own business. I jokingly told my mother that if in case she received any report diagnosing some sort of diseases such as Cancer or Tumors, it should not upset her as it would be definitely some one else report. We had a good laugh over it. One night I felt I was awaken in the sleep by a nurse, and my mother asked her. What was the matter. The nurse said Doctor had asked her to take my blood sample. It was past midnight. So my mother asked the nurse, to confirm with the Doctor who prescribed the test. The nurse annoyed with this interference, but my mother insisted to show the prescription and that revealed the blood sample has to be taken from another patient. We thanked the Lord. But it was the greatest mistake we did when we sent the reports to the AIIMS which sent back a report sealed my fate for worse and turned my life, derailing it, for ever. This would sometimes send me in to bouts of depression that I never allowed it to dampen my optimism.

  By this time my health started deteriorating and I was bed ridden even losing my speech. Finally we got sick and tired of Doctors so much and we decided we have had enough of them for a lift time and putting our faith, in God, believing he would show us a way and God showed us a way, through my cousin, a Doctor who suggested it could be Wilson Disease and asked us to under go test for the confirmation of Wilson Disease. Much to our surprise the test proved negative for Wilsons Disease but considering my symptoms it was diagnosed as Juvenile Parkinsons though Wilsons Disease is widely prevalent, thinking that is the reason for Wilsons Disease test to be done, according to her. I was better off before treatment I could walk at least to bathroom with support which was also last. So she suggested that we just stock and discontinue the psychiatric treatment since in the past each time I visited psychiatrist I started getting worse and finally bed-ridden. So she said that it was also happening all over again, this time, I may lose even a bit of mobility I had so she, protested. But fortunately my health started picking up and so my treatment continued. There was no feeling in my legs, I would not walk and at home, I used a wheel chair we were living on the first floor and since I could not walk, I was carried down the stairs by two of three people. In the Hospital I would be wheeled in a chair. As for the traveling part, I would be pushed from out side the door, inside and seated at the edge of the seat and someone would pull me in. This went on for a few months. I was asked to go to a psychiatrist for counseling since though I was mentally strong I was advised to be counseled just, in case as a safety measure since I had been bedridden for too long so it might have left its impact on me. But sure enough, those sessions were over since the psychiatrist found me strong enough mentally, able to handle stress of any kind simultaneously so he advised physiotherapy and I started physiotherapy treatment for an hour every day. Oh, my God you won’t be able to imagine the amount of the pain and went through in the beginning of the Physiotherapy Treatment. I would cry bitterly and my physiotherapist would joke, you must cry loudly which would bring your neighbours come running to your house enquiring what is going on here. Though this was a joke the reality was not far off.

  I had to undergo speech therapy too but Parkinson affects only older people, but mine who was a rare case at that time, which is being seen nowadays as reports of people getting affected by Parkinson’s by very early age also. How I wish that this concept could have been considered then, as my life would have been better now.

  I am now being told we were on the right path. We were happy that at last I could be cured and but we rejoiced too soon. Though it was a happy moment for us to get to know which disease, I was suffering from we, especially my self, were dejected when we were told that since this is a progressive disease and has no cure in the distant future. It could only be arrested the stage, it is in at the time of diagnosis and of course there will be improvement to a certain extent. This disappointed me to no end but u consoled my self something is better then nothing. While prescribing the medicine Doctor warned that there would be a deterioration in my health and after some time it will start up again. But we had not bargained for what happened we were simply stunned by this.
  I lost sensation in both legs below from my hip onwards. I felt, they were two pieces of cloth hanging from my waist downwards. This was the state of affairs for about three to four months are may be more since I have last count of those days as it passed through in a blur.

  Mother was ready to bite of heads off those who crossed her way the reason being, she felt that we had jumped from the frying pan to the fire. As my father was already over burdened with my treatment he could not afford to spend anymore. So I decided to take it in my hands. I started singing and reading loudly which has helped me a little bit though it is not enough.

  I also have other problems which makes my life unbearable but which I am going through patiently with the hope that things would improve one day. But some problems like constipation, indigestion, frequent urination started and I am not able to express my feelings and many times I am misunderstood by them.

  All these years, of suffering and the in take of highly potent medicines, have taken its toll on my health, which has made me so thin that any bones can be seen with out any x-ray. My teeth have protruded, which also has made me look like a skeleton though I have improved, I am still dependant. So, I am constantly worried about my future after my parents, how an I going to live? Who will take care of me? Sometimes, I feel it would be better if I die before them. This dark reality hurts me to no end day and night. I have no respite from it. But since just fearing would take me no where, so I push it away out of my reach but it never far from me. Also on this long struggle, I have realized a truth, like a slap on my face, that after my parents no relative or friends will take care of me. I will be dropped with no means of living. So in order to keep myself occupied and also to earn a living, I am trying to convert my talent in painting and writing and also engaging in a business in designing clothes, so as to support my self. These qualities which has been my hobbies in the past some thing to which I did not pay much attention earlier.

  All these years of illness has destroyed my talents, but definitely it has not affected my talents, but since my hands were affected in every way, when I started sketching, painting and writing in the beginning. I could not sketch for more than five or ten minutes. My hands used to ache and tremor would start and my drawing would be out of proportion and drawing would end up in cartoon. It was an uphill task to draw perfectly even now, it takes me a long time to draw perfectly also, it is still difficult for me to drawings and much more difficulty paint, minutely which I am trying to perfect. Same in the case of my writing my hand writings is not clear so I have to write clumsily and take rest in between. So my parents doubt my ability to desiring clothes which quite natural for them to be skeptical. But I am trying to convince them and also arrange for money to invest in my business. I want to do my paintings and publish my writings, but so far no one has come forward to help me out, but I have not lost hope. One day I will achieve my aim. I have so many dreams but the most important one, he is that I should get completely cured and become my self again, I have lost half of my life already, I do not want to live the rest of my life burdened with this disease. I have asked God why me? I am being punished for no fault of mine. I know I am asking too much but I want to be compensated for what I have lost. I have heard about Research is going on about Stem Cells Therapy, which is yet to be successfully carried out.

  I am keeping my fingers crossed and hoping for a miracle and give me a ray of hope. Please help me by finding a cure. Hoping I will get a positive answer quite soon. Before concluding I must make a declaration from the bottom of my heart in spite of my bad luck, I have a few blessing too like wonder full parents, who have taken care of me battling against all odds and a host of relatives who had been supporting and I should not forget to mention good friends who have stood by us in our needs, I must be grateful to all others. Otherwise I would be a ungrateful wretch. So with my deepest gratitude to all mentioned above, I conclude my biography which I hope will prove to be an eye opener also may be inspire some one to find a solution to this disease so that people like me can benefit from it.
  – S. JANAKI (alias) KALPANA
  Address for Correspondence
  No. 28, Beta Block, Jai-Hind Apartments,
  175 -A, Velachery Main Road,
  Gowrivakkam, Selaiyur Post,
  Chennai – 600 073.
  Email : kalpanasreenivasan2012@gmail.com
  padsreeni@yahoo.co.in

 4. இளங்கோ says:

  இலங்கையில் விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்கு கற்பிப்பவர்களுக்கான சிறந்த பயிற்சிகளை வழங்கக் கூடியவர்கள் இல்லாதுள்ளது. தங்களைப் போன்றவர்கள் வட இலங்கைக்கு வருகைதந்து பயிற்சிப் பட்றைகளை நடாத்தவேண்டுமென விரும்புகின்றோம். தங்களை வரவேற்க வட மாகாண கல்வித்திணைக்களம் தயாராக உள்ளது.
  நன்றி.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்