Home » Articles » இன்று மகிழ்ச்சி நாள் -1

 
இன்று மகிழ்ச்சி நாள் -1


இராமநாதன் கோ
Author:

மன உணர்வே

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மகிழ்ச்சியான கொண்டாட்டம் தான். அதை மனம் உணராததால் நாம் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். காலையில் கண் விழிப்பதும் மகிழ்ச்சிதான். எத்தனை புத்துணர்வு!

காலைக் கடன் முடிப்பதும் மகிழ்ச்சிதான். அதை முடியாதவர்களின் அவதிகள் எத்தனை? காலை உணவு ருசியே ருசிதான். நாம் வழக்கமாக சாப்பிடுகிறஉணவு கிடைக்காத வேறிடத்தில் இருக்கும்போது எத்தனை சிரமங்கள்?

காலையில் வேலைக்குச் செல்வதும் மகிழ்ச்சிதான். முதன் முதலாக வேலையில் சேரும் போது எத்தனை ஆனந்தம். அதை யாரும் இப்போது பறித்துவிடவில்லையே. வேலையில் உடனிருப்பவரும் நமக்காக வேலை செய்பவர்களும் மகிழ்ச்சிக்காகத்தான். முதல் சந்திப்பின் போது எப்படி உணர்ந்தோம்?
நண்பர்களும் மகிழ்ச்சிக்காகத்தான்; அந்த நட்புக்காக எத்தனை முயற்சிகளைச் செய்தோம்? உறவுகளும் மகிழ்ச்சிக்காகத்தான்; அந்த உறவுகள் எத்தனை வகையில் துணை நிற்கின்றன. திருமணமும் மகிழ்ச்சிக்காகத்தான்; அதைப்பற்றி கண்ட கனவுகள்தான் எவ்வளவு? ஆனால் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது ஏன்? ஒவ்வொன்றின் நோக்கத்தையும் மறந்து சிக்கல்களைப் பூதாகரமாக்கி பார்க்கின்றமன உணர்வே!

– டாக்டர். கோ. இராமநாதன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2009

நாட்டு நலம்
AIEEE நுழைவுத்தேர்வு
கிராமப்புற மாணவர்களுக்கான இலவச தன்னம்பிக்கை பயிற்சிகள்
நம்பிக்கை
எங்கே உன் எழுச்சி?
இளைஞனே!
எழுச்சியின் தூறல்கள்
பயங்கர ஆயுதம்
இன்று மகிழ்ச்சி நாள் – 2
இன்று மகிழ்ச்சி நாள் -1
திறந்த உள்ளம்
முடியும் என்று நம்புங்கள்
நிறுவனர் நினைவுகள்
சாலை விபத்துக்கள்
அறிவுசார் சொத்துரிமை
அன்பு எனும் அம்பு
உன்னதமாய் வாழ்வோம்!
வழி
மனிதா! மனிதா!!
மறந்திட்டோமா?
கஷ்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்
பிறந்த ஊருக்கு பெருமையைத் தேடு
வெற்றிக்கு முக்கியத்துவமானது…
வெற்றிப் படிக்கட்டுகள்
மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சவாலைச் சாதனையாக்கு! நோபலை உனதாக்கு!!
நேரத்தை நிர்வகிப்பது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்