Home » Articles » நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

 
நேரத்தை நிர்வகிப்பது எப்படி?


சுகுமார் ஏகலைவன்
Author:

– சுகுமார் ஏகலைவ்

நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்கப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.

நேற்று என்பது செல்லாத காசோலை.

நாளை என்பது பிராமிசரி நோட்டு.

இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.

எனவே, இன்றைய நேரத்தை எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.

1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)

ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத் தையும் செயல்வாரியாக, அட்டவணைப் படுத்துங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
அ. பயனுள்ளவை
ஆ. அன்றாடச் செயல்கள்
இ. பயனில்லாதவை

உங்கள் 24 மணி நேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செலவழிக்கப் பட்டிருக்கின்றது என்பதை கண்கூடாக அறிய முடியும். அவற்றைக் குறைத்து பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்துங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது.

2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்
(Time Wasters)

நேரத்தை வீணடிக்கும் செயல்களுக்கு இரண்டு காரணங்கள் : நீங்கள் மற்றும் மற்றவர்கள்

அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. ஒத்திப்போடுதல் (Procrastination)
2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை
3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்

ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. அன்றாட அலுவல்களில் மற்றவர்களுக்காக தேவைக்கதிகமான நேரம் செலவழித்தல்.

2. விருந்தினர், சுகமின்மை, மின் தடங்கள், மற்றும் பல.
3. பிறர் செய்யும் தவறுகள்
4. சூழ்நிலை

உகந்த நேரம் (Preferential / Prime Time)

ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதிகாலையாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களைச் செய்தால் அது சிறப்புப் பெறும்.

காலந்தவறாமை (Punctuality)

கால தாமதம் நமது நேரத்தை மட்டுமின்றி, மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாமதம் ஏற்படாது. மேற்கத்திய நாடுகளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத்துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவருக்குள்ள தகுதிகளில் முக்கியமானது.
நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)
உங்கள் வேலைகளை 4 வகையாகப் பிரியுங்கள்.

1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)
இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்

2 செய் வேண்டிய வேலை (Need to do)
அடுத்த சில நாட்களில் முடிக்க வேண்டிய வேலைகள் – முக்கியம்
ஆனால் அவசரமில்லை.
3. செய்ய விரும்பும் வேலை (Like to do)
உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேலைகள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.

4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)

வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்றநீண்ட நெடிய உரை யாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.

நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள்

1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தைகளை யாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.
4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரியாக உங்கள் செயல்களைப் பதிவு செய்யுங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.
6. கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமாக, உரிய நேரத் தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்
வெற்றி உங்கள் வீடு தேடி வந்து வாழ்த்தும்.

நேரத்தை – திட்டமிடுங்கள்! – பயன்படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!

 

12 Comments

 1. senthil says:

  நீங்கல் குடுத்த தகவல் நன்று. மீகவும் நன்றி

 2. Sampath, South korea says:

  Worth reading

 3. Ramprakash says:

  payanulla thagaval.

 4. sathik says:

  மிகவும் பயனுள்ள தகவல். உங்கள் தளம் அறியப பெற்றது மிக்க மகிழ்ச்சி.

 5. mubarak says:

  நல்ல பல பயனுள்ள தகவல்கள்
  நன்றி

 6. R.Dinesh kumar says:

  பயனுள்ள தகவல் நன்றி !!!!!!!……….

 7. R.Dinesh kumar says:

  பயனுள்ள தகவல் நன்றி!!!!!.

 8. pandiyn says:

  thalaiva super

 9. pandiyan says:

  சுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி .. இந்த பயனுள்ள தகவலை எங்களுடன் ஷேர் பண்ணியதுக்கு மிகவும் நன்றி நன்றி ….

 10. sumathi narayayan says:

  Thanks.

 11. k.palanisamy says:

  very useful.

Post a Comment


 

 


November 2009

நாட்டு நலம்
AIEEE நுழைவுத்தேர்வு
கிராமப்புற மாணவர்களுக்கான இலவச தன்னம்பிக்கை பயிற்சிகள்
நம்பிக்கை
எங்கே உன் எழுச்சி?
இளைஞனே!
எழுச்சியின் தூறல்கள்
பயங்கர ஆயுதம்
இன்று மகிழ்ச்சி நாள் – 2
இன்று மகிழ்ச்சி நாள் -1
திறந்த உள்ளம்
முடியும் என்று நம்புங்கள்
நிறுவனர் நினைவுகள்
சாலை விபத்துக்கள்
அறிவுசார் சொத்துரிமை
அன்பு எனும் அம்பு
உன்னதமாய் வாழ்வோம்!
வழி
மனிதா! மனிதா!!
மறந்திட்டோமா?
கஷ்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்
பிறந்த ஊருக்கு பெருமையைத் தேடு
வெற்றிக்கு முக்கியத்துவமானது…
வெற்றிப் படிக்கட்டுகள்
மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சவாலைச் சாதனையாக்கு! நோபலை உனதாக்கு!!
நேரத்தை நிர்வகிப்பது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்