Home » Articles » பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?

 
பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?


admin
Author:

நம் சுற்றுப் புறத்தில் நுண்கிருமிகள் (நல்லவை, கெட்டவை) எப்பொழுதும் இருக்கத்தான் செய்யும். அவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்ய மூன்று முக்கிய காரணிகள் தேவை. அவை,

1. நுண்கிருமிகளின் உணவான கழிவுகள் இருக்க வேண்டும்.

2. கழிவுகள் நொதிக்க நீர் தன்மை இருக்க வேண்டும். (Multiply)

3. நுண்கிருமிகள் இனப்பெருக்கம்

செய்ய வேண்டிய அளவில் வெப்பநிலை (Temperature)

நமது வீட்டில் கிருமிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும் இடம் நமது கழிவறையாகத் தான் இருக்கும். இங்குதான் கிருமிக்கு வேண்டிய உணவான கழிவுகளும், அது நொதிக்க தேவையான தண்ணீரும், கிருமி பெருக காற்றோட்டம் குறைந்த வெட்ப சூழ்நிலை (High temperature and high humidity) நிலவுகிறது.

நம் உடலுக்குள் நோய் கிருமிகள் வந்து குதியாட்டம் போடுவதற் கும் மேலே குறிப்பிட்ட மூன்று காரணிகள் தேவைதான். நம் உடலில் எப்போதும் 80 விழுக்காடு தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆக மூன்று காரணிகளில் ஒன்று எப்போதும் இருக்கிறது. மற்ற இரண்டு காரணிகளும் சேர்ந்து விட்டால், நமக்கு நிச்சயம் நோய் தொற்று ஏற்படத்தான் செய்யும்.

நமது உடலில் கழிவுகள் (மலச்சிக்கல், இரசாயன மருந்துகள், கெட்ட கொழுப்பு) தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இன்னொன்று உடல் உஷ்ணம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடற்கழிவுகள் தேங்கி னாலும் உடல் உஷ்ணம் அதிகமாகும். நம் உடலில் எந்தவிதமான கழிவுகள் இருக்கிறதோ அந்த விதமான கிருமி பெருக தேவையான உடல் உஷ்ணம் ஏற்படும் போது அந்த நோய் தொற்று (Infection) உருவாகிவிடுகிறது. ஆகவே அன்பர் களே! உடல் கழிவு நீங்கியும், உடல் உஷ்ணம் அதிகப்படாமல் பார்த்துக் கொண்டால் எவ்வித கிருமி தொற்றி லிருந்தும் உங்களை காத்துக் கொள்ளலாம்.

உடல் கழிவு நீங்க Crab apple

உடல் உஷ்ணம் தனிய Cherry plum

நோய் தொற்று நீங்க Rovk Rose

நோய் தீவிரம் குறைய Rescu Remedy

நண்பர்களே! மலையளவு உடல் கழிவு களை (கெட்ட கொழுப்பு ‘ உடற்கழிவு ‘ இரசாயன மருந்து கழிவு ‘ நோய் கிருமியின் கழிவு) வைத்துக் கொண்டால் மேலே சொன்ன மலர் மருந்துகள் ஓரளவுக்குத் தான் உதவும். முறையான மாற்று (Alternative Medicine) மருத்துவம் வழியாக ஆரோக்கியமாக வாழ முடியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்