Home » Articles » அச்சீவர்ஸ் அவென்யூ

 
அச்சீவர்ஸ் அவென்யூ


தங்கவேலு மாரிமுத்து
Author:

ஐக்கியா என்று ஒரு ஐரோப்பிய நிறுவனம். முப்பது நாடுகளுக்கு மேல் கிளைகள். அரை லட்சத்தை தாண்டிய ஊழியர்கள், ஆயிரம் கோடிகளுக்கு மேல் விற்பனை. இதன் நிறுவனர்தான் இங்வர். ஸ்வீடன் நாட்டுக்காரர்.

இத்தனையும் இவர் பெற்றோர் வழி வந்ததல்ல. ஐந்து வயதிலிருந்து ஆரம்பித்த உழைப்பு கொடுத்த பரிசு.

ஆம். நடைபாதையில் கண்ட சாமான்களைப் போட்டு விற்றார். கொஞ்சம் காசு சேர்ந்ததும், ஐக்கியா கடையைத் தொடங்கினார். ஃபர்னிச்சர்களில் அதிக லாபம் வருகிறது என்பதைக் கண்டறிந்தார். அவைகளை மட்டுமே வாங்கி விற்றார்.

விலை, பயன்பாடு, டிஸைன் இவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்தமாய் வாங்கி, மற்ற கடைக்காரர்களைவிட குறைந்த லாபத்துக்கு விற்றதால் விற்பனை கூடியது. ஆனால் மற்ற கடைக்காரர்கள், இவருக்கும் எதுவும் விற்கக்கூடாது என்று உற்பத்தியாளர்களுக்குப் போட்ட அன்புக்கட்டளையும் இவரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.

பிரச்சனையே இவருக்கு புதிய வழியையும் காட்டியது. ஆம். தானே ஃபர்னிச்சர்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டார். விளைவு? லாபம் பல்மடங்காகிவிட்டது. வியாபாரம் விரிந்தது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்