Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

தங்களது தன்னம்பிக்கை மே-2009 இதழில் என்னை இங்கு…இவர்…இப்படி எனும் தலைப்பில் திறனாய்வு செய்திருந்தீர்கள். இக்கட்டுரையால் உந்தப் பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விளக்க விசாரணைகள் இருந்ததோடு, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து மூவர் எனது கல்லூரியில் சேர்ந்துள்ளனர். என் நெஞ்சார்ந்த நன்றிகளை தன்னம் பிக்கை மாத இதழுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
– சோம. அருள்மொழி
நிறுவனர், சாராஸ் தனிப்பயிற்சிக் கல்லூரி
கோபிசெட்டிப்பாளையம்

ஆசிரியர் தினம் சிறப்புக் கட்டுரையாக நா.மரகதம் மற்றும் ப.முரளி அர்த்தனாரி இணைந்து ட்வழங்கிய பதினொரு அறிவுரைகள் ஆசிரியர்கள் படித்து பழக்கத்திற்கு கொண்டுவரப்பட வேண்டியவை.
– அ.சம்பத்
கோவை.

தன்னம்பிக்கை இதழைத் தொடர்ந்து நான் நூலகத்தில் படித்து வருவது என் வழக்கம். வெற்றியாளர் பலரின் கட்டுரைகள், அனுபவங் களைப் படிப்பேன். அந்த தன்னம்பிக்கை அறிவுரையை பாடமாகக் கொண்டு நானும் என் துறையில் முயற்சி செய்து வந்தேன். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணை இயக்குன ராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புகளுக்கு தங்களின் தன்னம்பிக்கை இதழும் ஊக்கம் அளித்தது என்பதில் பெருமையடைகிறேன்.
– புஷ்பாலயா தாஸ்
சென்னை.

தன்னம்பிக்கை செப்டம்பர் 2009 இதழில் ஆசிரியர் பணி அறப்பணி என்பதை டாக்டர் இராதகிருஷ்ணன் பிறந்த நாளில் கவிதையாக சம்பத் வடித்தது சிறப் பானது. நமது முதலீடுகளை எப்படி பாதுகாப்பது என்ற வழிகளை ஜி.ஆர்.சுப்பிரமணியம் நல்ல முறையில் விளக்கியுள்ளார். இதன்படி செயல் பட்டால் உயரலாம். தான் துன்பம் அடைந்தாலும் மற்றவர் வாழ்வு சிறக்க வேண்டும் என முருகன் சிந்தித்து செயல்படுவது கண்டு வியப்பு ஏற்படுகிறது.
– இரா.தியாகராசன்
இலால்குடி.

தன்னம்பிக்கையைத் தவறாமல் வாசிப்பவன் நான் ‘முயற்சி… வெற்றி…’ என்ற குறிக்கோளுடன் இளைஞர் களை – வாழ்வில் – முன்னேறத் துடிப்பவர்கட்கு வழி காட்டும் தாங்கள் தந்த செப்டம்பர் இதழில் ரெப்கோ திரு. எம். பாலசுப்ரமண்யம் அவர்களின் நேர்காணலை படித்தேன். வியந்தேன்.

புத்தகக்கடைக்காரர் சொன்னது, இவர் குக்கிராமத்தி லிருந்து படித்து முயன்று தங்கப்பதக்கம் வெள்ளிப் பதக்கம் வாங்கியுள்ளார். அப்போது அந்த கிராமத் திற்கு இரண்டே பஸ்தான். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு லால்குடியில் நடக்கும்… முயற்சி இருந்தால் தானே வரும் என்றார்! உண்மைதானே. சந்தர்ப்பங் களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு! பஞ்ச் டயலாக்! அருமை.
– ஜெயராமன்
ஓய்வு ஆசிரியர், திருச்சி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்