Home » Articles » மனிதா! மனிதா!!

 
மனிதா! மனிதா!!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

நம் நாடு முழுமையாக முன்னேற்றம் அடைய முடியாமைக்கு காரணம் நம் ஆட்சியாளர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. குறையாத விளைச்சல், தகுதியுள்ள அறிஞர்பெருமக்கள், தரும சிந்தனையுள்ள செல்வந்தர்கள், முறையாக வரி செலுத்தும் நோயற்ற குடிமக்கள், ஊற்றுநீர் மழைநீர் என்றஇரு நீர் வளம், அரணாக அமைந்த மலைகள், போதிய பாதுகாப்பு ஆகியன ஒரு நல்ல நாட்டின் இலக்கணம் என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் ஆட்சி செய்பவர்கள் நல்லவர்களாக அமையாவிட்டால் இந்தச் சிறப்புக்களால் பயன் இல்லை என்றும் கூறிவிட்டார். இதோ குறள் (எண் 740)

ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

வேந்துஅமைவு இல்லாத நாடு

நம் ஆட்சி

வேற்றுமையுள் ஒற்றுமை என்ற சிறப்புக்கு இலக்கணமாய் இருப்பது நம் இந்திய நாடு எனப் பெருமை கொள்வோம். பலவிதமான மொழிகள், தட்ப வெப்பநிலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் என மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டாலும் பாரத நாடு என்றமாத்திரமே அனைவரும் ஒன்றுபடுகிறோம். இதுதான் இந்த மண்ணின் பெருமை.

பல சிறு தேசங்களாய் இருந்த இந்தியா மீது முகலாயர்கள் படையெடுத்து, கைப்பற்றி, செல்வங்களையெல்லாம் அபகரித்து இந்த நாட்டையும் ஆண்டனர். அதன்பின் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம் முன்னோர்களிடையே பிரிவினைகளை உண்டாக்கி, ஒவ்வொரு சமஸ்தானமாய், நாடாய் கைப்பற்றி ஆண்டனர். நம் நாட்டு மூலப்பொருட்களை அவர்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று உற்பத்திப் பொருட்களாய் மாற்றிகொண்டு வந்து நம்மிடையே விற்றனர். நமது பாரம்பரியம், கலாச்சாரம், கல்வி முறைகளை திட்டமிட்டு சிறிது சிறிதாக நம் முன்னோர்கள் அறியா வண்ணம் சிதைத்தனர்.

அதனால் தான் இன்றும், சில பெரியவர்கள் ஆங்கிலேய ஆட்சியின் சிறப்புக் களைப் பேசுகின்றனர். அன்றைய குறைவான மக்கள்தொகை, அளப்பரிய இயற்கை வளம் இவற்றோடு இன்றைய நிலையை ஒப்பிட்டால் மறுக்க முடியாது. அன்று ஒவ்வொரு ஊரிலும் முக்கிய இடங்களை சர்ச், அவர்களது பள்ளி, மருத்துவமனை ஆசியவற்றுக்கு எடுத்துக் கொண்டனர். இன்றைய ஆட்சியாளர்கள் சிலர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களே ஆங்கிலேயரது ஆட்சி மேல் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

நம் நாடு ஆன்றோர்கள் நிறைந்த நாடு. ஆன்றோர்கள் என்றால் மக்களுக்கு நல்ல முன் உதாரணமாய் வாழ்பவர்கள் என்று பொருள். நம் நாடு மதச் சார்ப்பற்ற நாடு என பிரகடனப் படுத்தியுள்ளது. பாரத நாடு, இந்திய நாடு என்ற பெயரிலேயே இந்து மதம் உள்ளது. இருந்தாலும் படையெடுப்பு மற்றும் ஆட்சி முறைகளால் முஸ்லீம், கிறிஸ்துவ மதங்கள் பரவலாக்கப்பட்டு விட்டன. சிறுபான்மையினர் என்ற பெயரில் அவர்களுக்குப் பல சிறப்பு சலுகைகள் வழங்கப் பட்டு வருகின்றன.

இன்று வளர்ந்து வரும் நாடாக உள்ள நம் இந்திய நாடு ஆரம்ப காலத்திலிருந்தே மிகச் சிறந்த நாடாக விளங்கியது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ விபரம்;

உலகில் முதன் முதலில் அணைகட்டி நீரைத் தேக்கி உபயோகித்தவர்கள் இந்தியர்கள்; செஸ் விளையாட்டைக் கண்டு பிடித்தவர்கள் நம் நாட்டினர்; மருத்துவத்தில் அறுவை சிகிச்சை முறையை செயலுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்தவர்கள் நம் பாரத நாட்டவர்; கணிதம், வான சாஸ்திரம் அனைத்தையும் உலகுக்கு வழங்கியவர்கள் நம் இந்திய நாட்டினரே. ரேடியோவைக் கண்டு பிடித்தவர் நம் நாட்டு விஞ்ஞான டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ். ஆனால் அவர் தன்னால் கண்டு பிடிக்கப்பட்டது என்று பறைசாற்ற விரும்ப வில்லை.

ஆண்டவனால் கொடுக்கப்பட்ட அறிவின் மூலம் கண்டுபிடிக்கும் எல்லாம் ஆண்டவனையே சாரும்; “தனிமனிதனுக்கு அதன்மீது எந்த உரிமையும் கிடையாது; அதன் மூலம் தனி மனிதன் செல்வம் ஈட்டக் கூடாது” என்றார். அதனால் உலகுக்கு ரேடியோவைக் கண்டு பிடித்தவர் இவர் என தெரியாமல் போய்விட்டது.

உலகப் பொருளாதாரம், விஞ்ஞானம், ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை வகித்தவர்கள் தான் நம் நாட்டினர் என்பதால் பெருமைப்படுவோம். ஏராளமான இயற்கை வளங்களும், இளைஞர் பலமும் இருந்த போதிலும் தற்சார்பு என்ற நிலையை ஒவ்வொரு இந்தியரும் அடைய இயலாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவைகளைக் களையெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று என்னதான் நடக்கிறது?

ஆட்சியாளர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நியாயமாக, நேர்மையாக நடக்க இயலவில்லை. மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டுகள், அஸ்ஸாமில் தீவிரவாதிகள், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங் களில் நக்ஸலைட்டுகள், வேறுசில மாநிலங்களில் தொழிற்சங்கள் மற்றும் மண்ணின் மைந்தர்கள் வலுவாகி ஆட்சிக்கு இடையூறுகள் செய்தாலும் ஆன்மீகம், இறையுணர்வு நாட்டு மக்களின் ஆழ்மனதில் கொலு வீற்றிருப்பதால் நாம் தலை நிமிர்ந்தே உலக அரங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறோம்.

பெண்களின் பங்கு

நம் நாட்டில்தான் பெண்களைத் தெய்வங் களாக இன்றும் வழிபட்டுக் கொண்டிருக் கிறோம். குழந்தையாக, சகோதரியாக, தாரமாக, தாயாக என பல உறவுகளிலும் பெண்கள் தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்து வருவதால் தான் கலாச்சாரம் இன்றும் சீரழியாமல் உள்ளது.

உயர் பதவிகள், பணிகள், பொறுப்புகள் என்ற நிலையிலும் தம் நிலை மறவாமல் குடும்பத் தலைவியராய், இல்லத்தின் ராணியாய் இருந்து வருகின்றனர். சிற்சில இடங்களில் ஒரு சிலர் விதிவிலக்காய் செயல்படலாம்; அவர்களை ஒதுக்கி விடுவோம்.

இன்று உலகின் பல நாடுகளிலும் பெண்களின் நிலையைப் பரிசீலித்தால் ஸ்வீடன் நாட்டில் தஅந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 85 லட்சம். உரிமை என்றஅதீத சுதந்திரத்தால் பெண்கள் ôன் பெண்கள் அதிக உரிமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பணி புரிபவர்களில் பாதிக்கு மேல் பெண்கள்தான். ஆனால் அங்குதான் அவர்கள் மிகவும் கேவலமாக, கீழ்த்தரமாக நடத்தப்படுவதாய் செய்திகள் மூலம் அறிகிறோம். தம் இயல்பு நிலையை மறந்து, பொருளாதார தற்சார்பு நிலையால் தம் மனம் விரும்பும்படி வாழ்ந்து வருகின்றனர். விளைவு, சுமார் 65 சதவிகித பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல், விரும்பிய ஆணுடன் உறவு கொண்டு வாழ்கின்றனர். பிறக்கின்ற குழந்தை களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றனர். ஆண்களிடம் அடியும், உதையும் பெற்று சித்திரவதைக்கு உள்ளாவதாய் அறிய முடிகிறது. காரணம் என்ன? அவரவர் இயல்பு நிலையை மறந்து செயல்படும்போது வரும் விளைவுகள் தான் இவை.

பெண்களை கவர்ச்சியாகப் பார்ப்பதால் எழுதுவதால் எழுந்துள்ளவையே இந்நிலை. மேற்கத்திய நாடுகளில் கருத்தரிக்கும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு மணமாகாத பள்ளி செல்லும் மாணவியர் என்றபுள்ளி விபரம் அச்சப்பட வைக்கிறது. அந்நாட்டு கலாச்சாரம் என்று ஒதுக்கிவிட முடியாது.. அந்தக் கலாச்சாரம் பிடித் துள்ளது என ஒரு சிலர் இங்கு செயல்பட ஆரம் பித்தால். . . நம் நாட்டின் நிலை எப்படி இருக்கும்?

கவலைப்பட வேண்டியதில்லை. நம் பாரத நாடு பண்புள்ள நாடு. இப்போதும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் பெண்கள் தம் இயல்பு நிலையிலிருந்து மாறுப்பட்டு செயல்படுவதும், ஓரினச் சேர்க்கை என்ற இயற்கைக்கு முரணாக வாழ்வதும் நடந்து கொண்டிருப்பதை அறிவோம். நம் நாட்டின் ஞானியர், சமுதாய சிந்தனையார்கள் ஆன்மீக சிந்தனையாளர்கள், பக்தி மார்க்கத்தினர் முதலியோர் அவ்வப்போது சரியாகவே கண்காணித்து செயல்பட்டு வருகின்றனர்.

மரியாதை

உலக அளவில் பெண்களுக்கு மரியாதை எதனால் கிடைக்கிறது? கவர்ச்சியாலா? உரிமை யாலா? அரசியலாலா? என்று பல கோணங்களில் ஆராய்ந்தனர்.

கவர்ச்சியால் மரியாதை வராது; மன அமைதி கெடும் என்பதை ஸ்காண்டி நேவியன் நாடுகளான ஸ்வீடன், டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளின் பெண்களால் அறியமுடிகிறது. உரிமையால் மரியாதை கிடைக்காது. மன வேதனைதான் அதிகரிக்கும் என்பதற்கும் ஸ்வீடன் சிறந்த உதாரணம். அரசியல் என்று எடுத்துக் கொண்டால் இருவகையாக அணுகலாம். சுயமாக அரசியலில் ஈடுபடுவது, நிர்ப்பந்தத்தால் ஈடுபடுவது.

சுயமாக அரசியலில் ஈடுபட்ட பலர் மிகச் சிறந்த நிலையை அடைந்து, நல்ல முன் உதாரணமாக விளங்கினர்; இன்றும் நன்கு சேவையாற்றி வருகின்றனர். நிர்ப்பந்தம் காரணமாக அரசியலுக்கு வந்த பெண்களில் மிகப் பெரும்பாலானோர் கோபிக்கவில்லை; காரணம் அவர்கள் வீட்டு ஆண்மக்களின் தலையீடு. பாரத நாடு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை வசதி அடிப்படையில் உலகின் கண்களுக்கு வளர்ந்துவரும் நாடாக இருக்கலாம்; ஆனால் பண்பாட்டின் அடிப்படையில், கலாச் சாரம் மற்றும் ஆன்மீகத்தின் அடிப்படையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.

– தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்