Home » Articles » பார்வை

 
பார்வை


மாதவன்
Author:

ஒளிபடைத்த கண்ணினாய் வா – வா – வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா – வா – வா”

கண்களில் ஒளி இழந்தாலும் உறுதி கொண்ட நெஞ்சினால் சாதித்த மனிதர்கள் போற்றத்தக்கவர்கள். வட மாநிலம் ‘குரகான்’ என்ற ஊரில் ‘சோமாபட்நாய்க்’ என்ற பெயர் கொண்ட பள்ளி மாணவன் இருந்தார். பிறவியிலேயே இவருக்கு 2% தான் பார்வை. இவரால் சாலைகளை மற்றவர்கள் உதவி இல்லாமல் தனியாக கடக்க முடியாது. இரவு நேரங்களில் பார்வை தெரியாது. குறிப்பாக அவர் வகுப்பில் இருக்கும் ‘கரும்பலகை’ அதில் உள்ள எழுத்துக்கள் அவர் கண்களுக்குத் தெரியாது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இவர் 93% மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்தார்.

‘2 படிக்கும்பொழுது இவருடைய கண் பார்வை மிகவும் மோசமடைந்தது. வினாத் தாளில் உள்ள கேள்விகளைப் படித்து பதில் எழுத முடியாத சூழ்நிலை. வினாத்தாளில் உள்ள கேள்விகளைப் படித்துச் சொல்ல ஒரு நபர் உதவ வேண்டும் என்றார் சோமாபட்நாய்க். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ‘2 தேர்வில் 90% எடுத்து தேர்ச்சி அடைந்தார். இவருடைய வருங்கால லட்சியம் படித்து (IAS) மாவட்ட ஆட்சியராக பணியாற்றவேண்டும் என்பது.

மருத்துவர்கள் இவரைப்பற்றி கூறும் பொழுது இன்னும் சில நாட்களில் மீதமுள்ள கண் பார்வையை இவர் இழப்பார் என்று. அதற்கு சோமாபட்நாய்க் கூறிய பதில் என் பார்வையை நான் இழந்தாலும் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை நான் எப்பொழுதும் இழக்கமாட்டேன் கணினியில் என்ற மென் பொருள் மூலமாக நான் கல்வி கற்பேன். உற்சாகத்தோடு வாழ்வேன் என்கிறார் தீர்க்கமாக.

ஜூனியர் ஒலிம்பிக்ஸ் போட்டி நடந்து கொண்டு இருந்தது. பல விளையாட்டுப் போட்டிகள் பரவலாக நடந்தாலும் Polevalut Jumping என்று சொல்லக்கூடிய கம்பு ஊன்றி தடை தாண்டுதல் போட்டி நடக்கும் இடத்தைச் சுற்றி மக்கள் உற்சாகத்தோடு கூடி இருந்தனர். ‘ரிச்சர்ட் ஸ்டோன்’ என்ற பெயர் அழைக்கப் பட்டு ஒரு இளைஞர் ஓடிவந்து கம்பு ஊன்றி தாண்டினார். அவர் தாண்டிய உயரம் 17.6 அந்த போட்டியில் அதுவே முதலிடம். அவர் விருது வாங்க வந்த பொழுது அங்கு கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டு அவருக்கு விருது வழங்குவதைத் தடுத்தனர். காரணம் இதற்கு முந்தைய சாதனை 17.6. அந்த சாதனையை ரிச்சர்ட் ஸ்டோன் முறியடிக்க வேண்டும் என்பது பார்வையாளர் களின் விருப்பம். ரிச்சர்ட் ஸ்டோனுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஓடி வந்து கம்பு ஊன்றி தாண்டினார். அவர் தாண்டிய உயரம் 17.7. படைத்தார் புதிய சாதனையை சில நிமிடங்களில் ரிச்சர்ட் ஸ்டோனுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பார்வையாளர்களில் பலர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பார்வையாளர்கள் ரிச்சர்ட் ஸ்டோனை இவ்வளவு உற்சாகப்படுத்த என்ன காரணம்? ஏனென்றால் ரிச்சர்ட் ஸ்டோன் பிறவியிலேயே தன் பார்வையை இழந்தவர். பத்திரிக்கையாளர்களுக்கு ரிச்சர்ட் ஸ்டோன் அளித்த பேட்டியில் அவர் கூறியது :

நிருபர் : ரிச்சர்ச் ஸ்டோன் உங்கள் கையில் இருக்கும் கம்பு உங்கள் கண்களுக்கு தெரியாது. தடை கம்பி உங்கள் கண்களுக்கு தெரியாது. நீங்கள் தாண்டிய பிறகு விழும் இடம் உங்களுக்கு தெரியாது. பின்பு இந்த சாதனை எப்படி சாத்தியம்?

ரிச்சர்ட் ஸ்டோன் அதற்கு கூறிய பதில் முதலில் என் மனதை கம்பிக்கு அப்பால் தூக்கிப் போடுவேன் பிறகு என் உடலைத் தூக்கிப் போடுவேன்.

அன்பர்களே சற்று கூர்ந்து கவனித்தால் ரிச்சர்ட் ஸ்டோன் கூறிய இந்த பதிலின் சூட்சுமம் நமக்கு புரியும்.

பிறவியிலேயே கண் பார்வையை இழந்த நிலையிலும் ரிச்சர்ட் ஸ்டோன் இந்த விளையாட்டை தேர்ந்தெடுத்தது அதற்காக அவர் செய்த அர்பணிப்பு, முயற்சி, பயிற்சி அவரை சாதிக்க வைத்தது. நம் வாழ்க்கையில் நாம் உற்சாகம் பெற, சாதிக்க நம் ஓய்வு நேரங்களில் ரிச்சர்ட் ஸ்டோன் கூறிய இந்த பதிலை நம் மனதுக்குள் சொல்லி பார்ப்போம். அவருடைய சாதனையை எப்பொழுதும் மனதால் நினைத்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனின் மனமும் உறங்கிக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி, ஓர் ஆசை, ஓர் லட்சியம் அதை உசுப்பிவிடும் வரை.

வெற்றியும் சாதனையும் நமக்கு நிச்சயம்.

 

1 Comment

  1. Gopalakrishnan says:

    Excellent message Mr. Mannai Madhavan! Definitely this motivation message will touch and motivate everyone’s heart.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்