Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

உலகத் தமிழர்களின் பார்வை கோவையின் மீது         இன்னும் ஆழமாக பதியப்போகிறது. ஆம் 14 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதியிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்கள் கோவையில் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழுக்கே மரியாதை அளிக்கும் கொங்கு மண்டல மக்களின் மனங்களில் இச்செய்தி பெருத்த மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. கொங்கு மண்டலத்தின் பெருமை, கோவைத் தமிழின் இனிமை, நம் பண்பாடு, கலாச்சாரங் களின் உயர்வு என எல்லாமுமே உலகத்தவர்களால் பேசப்பட விருக்கிறது.

தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தி, தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க நடத்தப்படும் உலகத்தமிழ் மாநாடு சிறக்க நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அரசுக்கு உறுதுணையாய் நிற்போம். இதுவரை நடந்த மாநாடுகளை விட கோவை மாநாட்டை பல மடங்கு சிறப்பிற்குரியதாக்குவோம்.

சர்வதேச அளவில் பஞ்சாலை நகரம், தொழில் நகரம் என பெயர்ப்பெற்ற கோவை; தமிழின வரலாற்றில் நிரந்தர தனிச்சிறப்பை இம்மாநாட்டால் பெறட்டும் என்று வாழ்த்தி மகிழ்வோம்.

எழுத்தாளர்கள், வாசகர்கள், முகவர்கள், விளம்பர தாரர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்