Home » Articles » இன்று மகிழ்ச்சி நாள் -3

 
இன்று மகிழ்ச்சி நாள் -3


இராமநாதன் கோ
Author:

யார் கொடுத்தார்?

பலர் கூடியிருந்த இடத்தில் பிறர் உங்களை கேலி செய்திருக்கிறார்களா? ஆம், என்றபதில் நிச்சயமாக இருக்கும். (இல்லையென்றால் நீங்கள் யாரிடமும் பழகவில்லை என்றுதான் பொருள்)
சரி, ஏன் கேலி செய்தார்கள்?

அதனால் ஏன் நீங்கள் அவமானப்பட்டீர்கள்?

பதிலுக்கு வருமுன் இன்னொரு கேள்வி.

உங்களை எப்போதாவது சிலர் பாராட்டியிருக்கிறார்களா?

ஆம், என்று நிச்சயம் சொல்ல முடியும்.

அப்போதெல்லாம் மனம் குளிர்ந்து மகிழ்ந்திருக்கிறீர்களா?

நிச்சயமாக ‘ஆம்’ தான்.

இந்த இரண்டையும் மொத்தமாகப் பார்த்தால் பிறர் கேலி செய்தபோது அவமானப்பட்டது; பிறர் பாராட்டும்போது மகிழ்ந்தது – இரண்டுமே பிறர் செய்ததாக எண்ணி விடாதீர்கள்.

உங்க மனம் தான் அதை கேலியாக எடுத்துக்கொண்டது. (அவர்கள் தெரியாம உளர்றாங்கனு எடுத்திருந்தா உங்களுக்கு அவமானமா இருந்திருக்காது) அதேபோல பாராட்டும் போது உங்க மனமே அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டது.

ஆக அவமானமும் பாராட்டும் பிறர் செய்ததைப் போல இருந்தாலும் நமக்குக் கொடுத்தது நம் மனமே.

– டாக்டர். கோ. இராமநாதன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment