Home » Articles » அச்சீவர்ஸ் அவென்யூ – 2

 
அச்சீவர்ஸ் அவென்யூ – 2


தங்கவேலு மாரிமுத்து
Author:

ஃப்ரட் ஸ்மித்

கொஞ்சம் வசதியான குடும்பம்தான். ஆனாலும் அப்பாவை நான்கு வயதிலேயே இழந்தவர். படிப்புக்குப்பின் இராணுவ சேவை. அதற்குப்பின் பிஸினஸ். பிஸினஸ் பண்ண பணம், பெரும்பகுதி கடன்தான். என்ன பிஸினஸ்? அதுவரை அமெரிக்காவில் யாரும் செய்யாத பிஸினஸ். விமான பார்சல் சர்வீஸ். ஆரம்பித்த வருடம் 1973.

முதல்நாள் பத்து விமானங்கள் பார்சல்களுக்காக காத்திருக்க, வந்ததோ இரண்டே பெட்டிகள். மண்டை காய்ந்து விட்டது. ஆனாலும் மறுநாள் மிகத் தெளிவாகி விட்டார். பிஸினஸ்னா அப்படித்தான். ஆம், முதல் அடி இவரை முடக்கிப் போடவே இல்லை. முதல் வருடம் முழுவதும் பட்ட நஷ்டமும் இவரை முடக்கவே இல்லை. தொடர்ந்த உழைப்பு, புதுப்பது யுக்திகள், வெற்றி இவரைத் தேடி வந்தே விட்டது.

200க்கும் மேற்பட்ட நாடுகள், லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், மூவாயிரம் கோடி டாலர்கள். இதுதான் இவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் பார்சல் சர்வீஸின் இன்றைய நிலை. காரணங்கள் : ஊழியர்களுக்குக் கொடுத்த ஊக்கம், வாடிக்கை யாளர்களை வசப்படுத்தும் திட்டங்கள், தோல்வி கண்டு துவளாத பொறுமை. அவ்வளவுதான் என்கிறார் ஸ்மித்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment