Home » Articles » நமக்குள் நாம்

 
நமக்குள் நாம்


மாதவன்
Author:

நாம் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள் மட்டுமல்ல, ஆளப் பிறந்தவர்கள், சாதிக்கப் பிறந்தவர்கள். இவை வெறும் வாசகங்கள் அல்ல முற்றிலும் உண்மை. அன்றாட வாழ்வில் குடும்பம், நிதி பற்றாக்குறை, உடல்நலம் என்று பல காரணங்களால் நம் ஆற்றலும் உற்சாகமும் நமக்கு சாதனைகளுக்கும், சந்தோஷத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இவைகளையும் மீறி நம்மில் பலர் தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, சிலர் மது அருந்துவது, இன்னும் பல வழிகளில் தற்காலிகமாக உற்சாகத்தை தேடுகின்றனர். உண்மையில் உற்சாகம், உற்சாக மனோநிலை வெளியில் இல்லை. எல்லாம் நமக்குள்ளே மனதில் இருந்து எழும் சோக, மற்றும் சந்தோஷ எண்ணங்களால் நாம் உற்சாகம் அல்லது உற்சாகம் குறைந்து காணப்படுகிறோம். இந்த மனதை இயக்குவது யார்? நாம் தானே.

நமக்கு எப்பொழுதும் உற்சாகம் தரும் விதமாக நம் மனதை நாம் இயக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் பல சாதனைகளைப் படைக்கலாம். இது நமக்கு முற்றிலும் சாத்தியம். நம் மனதிற்கு செல்லும் தகவல்களே நம் எண்ணங்களாக மாறுகின்றன. பின்பு செயல்களாக மாறுகின்றன. நம் மனதிற்குள் தொடர்ச்சியாக சொல்லப்படும் வாசகங்கள், செல்லும் தகவல்கள் மனதில் பதிவாகின்றன. இந்த அடிப்படையில் என் தமிழ் மண்ணில் பிறந்த அனைவரும் உற்சாகமான மனநிலை பெறவேண்டும். குறிப்பாக எல்லோரும் சாதிக்க வேண்டும் என்றஎண்ணத்தில் நான் உருவாக்கிய பயிற்சி இது.

பயிற்சியின் பெயர் வாழ்க்கையின் வெற்றி வாசல்

நம் உற்சாகம், வெற்றி, சாதனைகள் தொடங்கும் இடம் இங்கே. தினமும் காலை எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்து கொண்டு கண்களை மெதுவாக மூடவும். (மனதில் எந்த எண்ணங்களையும் ஓடவிட வேண்டாம்)

தியானம் செய்வது போல் அமர்ந்துகொண்டு கட்டைவிரல், நடுவிரல் இரண்டையும் சேர்த்து இந்த வாசகங்களைச் சொல்லவும்.

1. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க (2 முறை)

2. இந்த வையகம் வாழ்க வளமுடன் (2 முறை)

3. வெற்றி தரும் எண்ணங்கள், வெற்றி தரும் சிந்தனைகள், வெற்றிதரும் செயல் கள் இதுவே என் உயிர் மூச்சு (3 முறை சொல்லவும்)

மேலே குறிப்பிட்டுள்ள இந்த வாசகங்களை பொறுமையாக, கவனத்துடன் மனதுக்குள் சொல்லவும். தொடர்ந்து கீழே உள்ள இந்த வாசகங் களையும் கவனத்துடன் சொல்லவும்

4. என் மனம், என் அறிவு, என் ஆத்மா, நீங்கள் மூவரும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள். இந்த மூன்று நண்பர்களின் உதவியால் என் வாழ்க்கையில் நான் காண்பது வெற்றி (2 முறை)

5. உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

6. வாழ நினைத்தேன் வாழ்கிறேன். வழியா இல்லை பூமியில். ஆழக் கடலும் சோலையானது ரசித்து ரசித்து வாழ்கிறேன். கண்ணில் தெரியும் எனது எண்ணம் வெற்றி பெற்று வாழ்கிறேன். கருத்தில் வளரும் எனது கனவு வெற்றி பெற்று வாழ்கிறேன். எனது எண்ணம் என்னை அனைத்து வெற்றி பெற்று வாழ்கிறேன். வாழ நினைத்தேன் வாழ்கிறேன். வழியா இல்லை பூமியில் ஆழ கடலும் சோலையானது ரசித்து ரசித்து வாழ்கிறேன்.

8. நல்ல நல்ல எண்ணங்களை எண்ணி நான் அடைந்தது அடைந்தது வெற்றி.

நல்ல நல்ல எண்ணங்கள் என்றால்

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்;

கடமை இருந்தால் வீரனாகலாம்;

பொறுமையிருந்தால் மனிதன் ஆகலாம்;

இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம். இந்த நல்ல நல்ல எண்ணங்களை எண்ணி நான் அடைந்தது அடைந்தது வெற்றி. சின்னஞ்சிறு தடைகளை உடைத்து நான் அடைந்தது அடைந்தது வெற்றி.

8. அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை எனது உடமையடா

ஆறிலும் சாதிப்பேன், நூறிலும் சாதிப்பேன்

என் எண்ணம் காண்பது வெற்றியடா

9. மனிதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பெறவேண்டும்

கனவு உண்மையாக வேண்டும்

கைவசம் ஆவது விரைவில் வேண்டும்

பெரிய கடவுள் காக்க வேண்டும்.

ஓம் ஓம் ஓம்.

10. எண்ணற்ற கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து “தாமஸ் ஆல்வா எடிசன்” இன்றளவும் நம்மிடையே சாதனை யாளராக இருக்கிறார். தனி மனித சாதனையாய் ‘தஸ்ரம் மஞ்சி’ ஒரு மலையை உடைத்தார் முயற்சி, நம்பிக்கை அவர்களுக்குச் சாதனையைத் தந்தது. இந்த பயிற்சியும் எனது முயற்சியும் என் எண்ணங்களில் எழுச்சியை தந்தது வெற்றியை தந்தது.

என் எண்ணங்களில் ‘வெற்றி எனதே, வெற்றி எனதே’ என்று இரண்டு முறை சொல்லவும்.

இந்தப் பயிற்சியில் உங்களுக்குப் பிடித்த வாசகங்களை, பாடல்களை, ஓய்வு நேரங்களில், பேருந்து ரயில் பயணங்களில், உங்கள் விருப்பப்படி மனதில் சொல்லிக் கொள்ளலாம், பாடிக்கொள்ளலாம்.

வாழ்க்கையும் நமது தான்; வெற்றியும் நமது தான். வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்!

எல்லோரும் வாழ்க வளமுடன்!

 

1 Comment

  1. Gopalakrishnan says:

    The good and the best words which are recollected by Mr.Mannai Madhavan, for every yuman being in their daily routine life these exercise will elevate to grow their future.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1