Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

தளிர் நடையுன் தொடங்கிய
தன்னம்பிக்கை இதழ்
தளராத நம்பிக்கையால்
20 வது ஆண்டு விழாவில்
வாசகர்களின் தன்னம்பிக்கையின்
வாயிலாக நூறு ஆண்டுகள்
மேலும் வளர்க என அன்புடன்
வாழ்த்துகிறேன்.
– அ. பிரமநாயகம்
அபிராமி நகர், குனியமுத்தூர், கோவை.

வாழ்க்கையில் வெல்லத் தேவையான தன்னம்பிக்கையை, ஒவ்வொரு வெற்றியாளர்களையும், அவர்களின் கடின மான வெற்றிப் பாதைகளையும் நமக்கு தெரியப்படுத்தி, ஒவ்வொருவரின் மனதிலேயும், தனி உத்வேகத்தை வளர்த்து வரும் நமது தோழனைப் போல நமக்கு உந்துதலை அளித்துக் கொண்டிருக்கும் ‘தன்னம்பிக்கை’ நாளிதழுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம் என்பதில் சிறிதும் தவறில்லை.
இளைஞர்களே உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கு மானால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பது விவேகானந்தரின் பொன்மொழியாகும். அதற்கிணங்க குறிக்கோளுடைய வாழ்க்கைக்குத் தேவையான ‘தன்னம்பிக்கை’யை வளர்க்க உதவி புரிந்து வரும் நாளிதழுக்கும், அனைத்து சான்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
– வே. காயத்ரி

எஸ்.ஆர். நகர், ஜோதிபுரம், கோவை
“பேராசிரியர் டாக்டர் எஸ். சதாசிவம் அவர்களின் வெற்றியும், பொறுப்பும் நம்மிடமே” நேர்காணல் மூலம் வாசகர்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை தந்து உதவியதற்கு நன்றிகள்.
– சே. தில்லைமணி
கோவை.

இங்கு… இவர்… இப்படி… பகுதியில் முன்னோடி உழவர் திரு. ஆர். பெருமாள்சாமி ஐயா அவர்களை பற்றிய செய்தியைப் படித்தேன். ஒரு விவசாயி ஆகிய எனக்கு பெரிதும் நம்பிக்கையூட்டும் செய்திகள் நிரம்பிய இக்கட்டுரை என் மனதை கவர்ந்தது. எனவே நான் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள காளியாபுரம் என்ற கிராமத்தில் இருந்து 140 கி.மீ. பயணம் செய்து அவரை சத்தியமங்கலத்தில் உள்ள அவரது காமதேனு கல்லூரியில் சந்தித்து நானும் அவர்போல் வாழ்வில் முன்னேற யோசனைகளை கேட்டேன்.

அவருடனான சந்திப்பு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. என்னை போன்றவாசகர்களுக்கு இது போன்று பயனளிக்கும் கட்டுரைகள் பலவற்றைவெளியிட கேட்டுக் கொள்கிறேன். கட்டுரை தந்த ங. நம்பிராஜன் அவர்களுக்கு நன்றி.
– டி. குணசேகரன்
உடுமலைப்பேட்டை.

“தன்னம்பிக்கை” இதழ் 20வது ஆண்டு விழா பற்றிய தொகுப்புச் செய்திகள் மிகவும் விரிவாகவும், படித்து அறிய வேண்டியதாவும் இருந்தது.
ஒரே விழாவில் பத்துக்கு அதிகமான சிறந்த அறிஞர்களை கொண்டு நடத்திய விழா தமிழ்நாட்டில் இது ஒன்றாகத் தான் இருக்கும். நேரில் காண முடியாதவைகளையும், கேட்க வேண்டிய கருத்துக்களை தெளிவாக படித்து அறிய உதவிய தன்னம்பிக்கை மாத இதழுக்கு மிகவும் நன்றி.
– கண்ர்ய் ந. கனகசபை
தாதம்பேட்டை, தா.பழுர், அரியலூர்.

மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டுமாயின் நாம் மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை, மற்றவர்கள் கடுமையாக நடந்து கொண்டால் நமது பங்கு, அதனை எப்படி எதிர்கொள்வது என 17 வகையான கருத்துக்களை எ.த. சுப்பிரமணியம் கூறியது அனைவரும் பின்பற்ற வேண்டியதாகும்.
– இரா. தியாகராசன்
இலால்குடி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1