Home » Articles » உன்னதமாய் வாழ்வோம்!

 
உன்னதமாய் வாழ்வோம்!


அனுராதா கிருஷ்ணன்
Author:

உன்னத நண்பர்களே! சென்ற அத்தியாயத்தில், உடலினை உறுதி செய்ய ஏழு படிநிலைகளை அறிந்து கொண்டோம். இந்த படிநிலை களுக்கு சக்தி தரும் கருவியாக உள்ள உணவினை பற்றி இப்போது பார்ப்போம். உன்னத உணவு என்பது குறைவான ஆற்றலை பயன்படுத்தி நிறைவான சத்தியை உண்டு பண்ணுவதாக அமைய வேண்டும். உணவின் தரம் நிறைவான சத்தியை அளித்து குறைவான கழிவைத் தருவதாக இருக்க வேண்டும். இவைகளே உன்னத உணவின் தகுதிகளாக இருக்க வேண்டும்.

நாம் உண்ணும் உணவிலே, உடனடி சத்தி தரும் மாவுச்சத்து (Carbohydrates) மற்றும் சீராக ஆற்றலை வெளியிடும் புரதம் மற்றும் கொழுப்புச் சத்து ஆகிய இரண்டு வகை சத்தி தரும் சத்துக்களும் சமநிலைகளில் இருக்க வேண்டும். இந்த விகிதாச்சாரம் மாறினால், சத்தி விரயமும், கழிவு தேக்கமும் நிகழும்.

நம் உடலுக்கு சத்து என்பது மாவுச் சத்து (Carbohydrates), புரதச்சத்து (Protein), கொழுப்புச்சத்து (Fat), உயிர் காரணிகள் (Vitamins) மற்றும் தாதுக்கள் (Minerals) ஆகியவை உணவு மூலம் கிடைக்க வேண்டும். ஆற்றலும் சத்தும் கிடைத்தபின் மீதமாக உள்ளது கழிவு ஆகும். இந்தக் கழிவுகள் உடலில் இருந்து முழுவதுமாக வெளியேற நமக்கு நார் சத்து (Fibre) மற்றும் தண்ணீர் (Water) தேவைப்படுகிறது. ஆக நம் உணவில் இத்தனையும் சரியான விகிதத்தில் இருந்துவிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

நாம் உண்ணும் உணவுகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று ஆற்றலும் சத்தும் நிறைவாகவும், விரைவாக செறிக்கக்கூடிய வித மாகவும், கழிவுகள் குறைவாகவும் இருக்கக்கூடிய நேர்மறை (Positive) உணவுகள். இரண்டாவது ஆற்றலும் சத்தும் குறைவாகவும், கழிவுகள் அதிகமாகவும், செறிமானம் ஆக கடினமாகவும் உள்ள எதிர்மறை (Negative) உணவுகள்.

இந்த அடிப்படையில் இங்கு கொடுக்கப் பட்டுள்ள அட்டவணையில் வேண்டிய நேர்மறை உணவுகளும் வேண்டாத எதிர்மறைஉணவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.

உன்னத உணவு என்பது குறைவான ஆற்றலை பயன்படுத்தி நிறைவான சக்தியும் சத்தும் பெற்று குறைவான கழிவை வெளிப்படுத்துவது ஆகும்.

என் இனிய நண்பர்களே! உங்கள் உணவு என்னவோ? உங்கள் உடல் நலம் அவ்வளவு. உங்கள் நோய் நிலை அவ்வளவு?

உங்கள் உணவு பழக்க வழக்கங்களை அதிரடியாக மாற்றி உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் அதிர்ச்சி ஏற்படுத்த வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக, வேண்டாத உணவு களைக் குறைத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக வேண்டிய உணவுகளை கூட்டிக் கொள்ளவும். இந்த உணவு பட்டியல் ஒரு வாரம் சுழற்சியாக நடைமுறைப் படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டடுள்ளது. முழுமையாக வேண்டிய உணவுக்கு மாறமுடியாவிட்டாலும், 80 சதவீதம் வேண்டிய உணவையும், 20 சதவீதம் வேண்டாத உணவையும் எடுத்துக் கொள்வீர்களேயானால், உங்கள் ஆரோக்கியம் நிலைப்படும்.

நீண்டகால நோய்களில் அவதிப்படும் அன்பர்களே! இந்த உணவு முறைகளை படிப் படியாக மாற்றிக் கொள்வதன் மூலம், உங்கள் நோய் தன்மை மட்டுப்பட வழி வகுக்கும். ஆனால் முற்றிலும் குணமாகிவிடாது. உங்கள் நோய் தன்மையை முற்றிலுமாக நீக்கியபின், இந்த உணவு முறைஉங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

அன்பர்களே! நண்பர்களே! எந்த நோயையும் முற்றிலும் குணப்படுத்திவிட முடியும். எவ்வாறு என்றால், இந்த நான்கு வழிகளில்:

1. நாட்பட்ட உடல் பலவீனத்தை போக்க சத்து மிக்க சுலபமாக செறிமானம் ஆகக்கூடிய துணை உணவு பொருட்கள் வேண்டும் (Alutritional Medicine) . இதன் மூலம் பல கால உடல் பலவீனத்தை சரிசெய்யமுடியும்.

2. உயிர் சத்தித் திறன் அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் மருத்துவ முறைகள் (Homeopathy, Flower Medicine etc.)

3. உடல் கழிவு மற்றும் சத்தி ஓட்டத்தில் ஏற்பட்ட தேக்க நிலைகளை அகற்றும் மருத்துவ முறைகள் (அக்குபிரஷர் மற்றும் அக்குபஞ்சர், யோகாசன பயிற்சிகள்)

4. உணவிலும், உடல் பழக்க வழக்கங்களிலும் திருத்தம் செய்வதன் மூலம்.

இந்த நான்கு ஒருங்கிணைந்த முறைகளின் மூலம், எவ்வித நோய்களையும் சுலபமாக வெல்ல முடியும். இதில் ஒன்றுமட்டும் நிச்சயம் இருக்க வேண்டும். மீட்டெடுக்கக் கூடிய அளவிலாவது உயிர்ப்புத்திறன் உடலில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், நோயிலிருந்து மீண்டுவிட முடியும். மீட்டெடுக்க முடியாத அளவு உயிர்ப்புத்திறன் மிக குறைவாக இருப்பின், இறை யாற்றாலும் காப்பாற்றமுடியாததை மனிதர் களால் காப்பாற்றுதல் முடியாது. உயிர்புத் திறன் குறையாமல் வாழ்வோம். நோயின்றி வாழ்வோம். நம்மை வாழ வைப்போம்.

செயல்முறை:

உங்களுக்குப் பிடித்தமான சுவையை குறைத்துக்கொண்டு, பிடிக்காத சுவையை அதிகப் படுத்தி உண்ணுங்கள். உங்களில் ஆறு சுவையும் சமன்பட்டு, குணமேம்பாடு அடைவீர்கள்.

அடுத்த அத்தியாயத்தில் உணவு இரசமாகும் இரகசியங்களை அறிவோம்.

இரகசியங்கள் தொடரும்…..

 

3 Comments

  1. P.YOGATHA says:

    amen. malar marunthukalai mika vum thelivaka eluthi varukirar. valthukkal.

  2. Senthil says:

    Dear Krishnan

    The article about the how the food habits affect the human health is nice to read. Keep it up

  3. soundararadjane says:

    Dear Krishnan:

    Its fantastic, keep sharing articles/thougts. It would be a great contribution to mankind

    Rgds-soundar

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1