Home » Articles » மனிதா! மனிதா!!

 
மனிதா! மனிதா!!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

மக்களுடைய வாழ்க்கை முறை பொருளா தாரம் மற்றும் வசதிகளின் அடிப்படை யிலேயே நாடுகளை வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் எனப் பிரிப்பதைப் பார்த்தோம். மக்களின் வாழ்க்கை முறைஎன்பது இவற்றில் மிக முக்கியமானது, தேவைக்குமேல் பொருள் வளம் இருந்தும் அவைகளை உபயோகிக்காமல் இருந்தால் வெளி உலகுக்கு தெரியாது.

நம் நாட்டில் எல்லா வீடுகளிலுமே போதிய அளவு சேமிப்பு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து தேவையில்லை. இங்கொன்றும் அங்கொன்றும் வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. கேரளாவில் பல வருடங் களாய் பிச்சை எடுக்கும் ஒருவரது மனைவி அரசாங்கத்தில் பணி புரிவதாயும் மகன் இன்ஜினியரிங் கல்வி கற்பதாயும், இவரது வங்கி கணக்கிலும், ரொக்கமாயும் பல லட்ச ரூபாய்கள் இருந்ததாயும் சமீபத்தில் பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதுபோல் நம் பாரத நாட்டில் உபயோகிக்காமல் சேமித்து வைத்துள்ள தொகை பல லட்சம் கோடிகளைத் தாண்டும். இவற்றின் மூலம் நம் தேவைகள் அனைத்தையும் நிறை வேற்றி விரைவில் வளர்ந்த நாடுகளுக்கு தலைமை யேற்கும் நிலைக்கும் உயர முடியும். பாரம்பரியம் தட்பவெப்ப நிலை, உணவுப் பழக்கம், தொழில் கள், வாழ்க்கை வசதிகள் மற்றும் ஆட்சி ஆகியன மக்கள் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கும் காரணிகளாகும்.

பாரம்பரியம்

பரம்பரைப் பழக்கம், இடையில் வந்து விட்ட மாற்றத்தால் மாறாது. ஏனெனில் பல பிறவிகளாக அவை கருத்தொடராக மிக ஆழமாகப் பதிவு செய்து வந்துள்ளன. நல்ல பழக்கத்தை செயலுக்குக் கொண்டுவர சிரமப்பட வேண்டும். ஆனால் தீய பழக்கங்கள் உடனே செயலுக்கு வரும். காரணம், நம் மூதாதையர் மிருகங்கள் போல் வாழ்ந்தவர்கள் என்பதே. தொடர்ந்த கண்காணிப்பால் ஒரு சில தலைமுறைகளில் (தலைமுறை’ 20 வருடங்கள்) நற்பழக்கங்களை வேரூன்றச் செய்யலாம். இம்மாதிரி செய்யும்போதுதான் ஒட்டு மொத்த மாக நாட்டினுடைய பழக்கம் எதிரொலிக்கும்.

ஆங்கிலேயர்களது ஆட்சியின் இடைக் காலம் (ஙண்க்க்ப்ங்) வரை நம் நாட்டில் வர்ணாசிரம அடிப்படையிலேயே மக்கள் வாழ்ந்தனர். அதாவது தந்தையின் தொழிலை மகன்கள் தொடருவது. கல்வி, அதிலும் மேனாட்டுக் கல்வி சுதந்திர இந்தியாவில் பிற்பட்டோருக்கு அரசியல் நிர்ணய சட்டம் வழங்கி வரும் சலுகைகள் இவற்றால் தந்தையின் தொழிலையே செய்ய வேண்டிய நிர்பந்தம் மாறியது. கற்கும் கல்விக்கேற்ப பணிபுரியும் வாய்ப்பும், அல்லது சொந்தமாகத் தொழில் துவங்க வசதியும் உருவாக்கப்பட்டன. இதனால் கடந்த 50 ஆண்டுகளில் முன்பு சமுதாயத்தின் கீழ் தட்டிலிருந்தோர் ரங்க ராட்டினமாய் உயர்ந்து மேல் தட்டு மக்கள் எனப் பெயர் பெற்று வருகின்றனர்.

தட்ப வெப்பம்

ஒவ்வொரு நாடும் பூமத்திய ரேகையின் அடிப்படையில் அடைந்த நிலைதான் அங்கு நிலவும் வெப்பம், குளிர், மழைக்கு காரணம். இதை மாற்றமுடியாது. ஆனால், உலகைப் படைத்த இறைநிலை (சூப்பர் பவர்) அந்தப் பகுதியில் வாழும் உயிரினங்கள் சிரமமின்றி வாழத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ஆனால், மக்கள்தான் நாகரீகம் என்றமுறையிலே வேறு நாட்டு பழக்கங்களைக் கடைப்பிடித்து பலவிதமான துன்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாகித் தவித்து வருகின்றனர்.

அந்தப் பகுதியில் நிலவிவரும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப வாழும் மக்களின் வாழ்க்கையால் அந்த நாடு முன்னேறும். வெளிநாட்டினரைப் பார்த்து அவர்கள் போல் நாகரீக வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்பினால் கலாச்சாரம் சீரழியும் அபாயம் உண்டு.

உணவுப் பழக்கம்

ஒரு பகுதியில் விளையும் உணவுப் பயிர் களே அந்தப் பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு ஏற்ற உணவாகும். வறட்சி காரண மாக தற்காலிக மாக மாற்று உணவுகளை எடுத்துக்கொள்ளலாமே தவிர நிரந்தரமாக உண்ணும் போது, உடலின் வெப்பநிலை மாறு பட்டு உடல் நோய்வாய்ப்படும். ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படையே உணவுதான். எனவே, உணவுப் பழக்க மாறுபாட்டால் உடல் நலம் கெட்டால் நாட்டினுடைய ஒட்டுமொத்த இமேஜ் பாதிப்புக் குள்ளாகும். ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் தகுந்தவாறு நம் நாட்டு உணவுப் பழக்கம் உள்ளது. உடல் ஆரோக்கியத் திற்கு என்ன உணவு, எவ்வளவு தேவை என்பதை அவர்களது அறிவு தெளிவாகச் சொல்லிவிடும். அதையும் மீறி ருசி வயப்பட்டு உண்டால், உடல் நலம் கெடும்.

தொழில்கள்

ஒவ்வொரு நாட்டின் தொழில்களும் உலக அரங்கில் அந்த நாட்டை வளர்ந்த நாடாக்க துணையாக இருக்கின்றன. ஜப்பான் சிறிய நாடு, குறைவான இயற்கை வளம், இருப்பினும் கடுமையான உழைப்பால், நாட்டுப்பற்றால் ஜப்பானியர்கள் தம் நாட்டை உலக அரங்கில் முதன்மை நிலைக்கு கொண்டு வந்துள்ளதை அறிவோம்.

நம் நாட்டில் உழவு, நெசவும் மீன்பிடித் தலும் இதைச் சார்ந்த தொழில்களுமே பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்தன. சுதந்திரம் அடைந்த பின் தொழிற்புரட்சி உருவாக்கப்பட்டது. இயந்திரங்கள் தயாரிப்பு என்றநிலை வந்தபின் தொழிலாளர்களின் எண்ணிக்கையும், ஓரிடத்தில் கூடி வேலைபார்க்கும் முறையும் அதிகரித்தன. இவர்களுக்கான மாத ஊழியம், பாரம்பரியத் தொழில் புரிபவர்கள் ஈட்டுவதை விட அதிகமாய் இருந்தது. வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பு வந்தது. தங்கள் குழந்தை களை நன்கு படிக்க வைத்தனர். இதனால் அவர்களது குடும்பங்கள் சமுதாயத்தில் மேம்பாடடைந்தன.

இன்று உலக அளவிலான பொருளாதாரச் சரிவால் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தேவைகள் குறைந்து, உற்பத்தியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் பல தொழிற் சாலைகளில் ஆள்குறைப்பும் சில மூடப்படுவதும் ஆன நிலைமைகள் தொடர்கின்றன. பஞ்சு, நூல் இவைகளின் விலைகள் எதிர்முகமாக இருப்ப தாலும் மின் தடையாலும் தொழிலாளர்கள் பற்றாக் குறையாலும் நூற்பாலைகள் வீழ்ச்சி நிலையில் உள்ளன. உழவுத் தொழில் என்பது இன்று வானம் பார்த்த நிலையாகிவிட்டது. முதலீட்டுச் செலவை ஈடுகட்டுமளவு கூட சில சமயங்களில் விளைச்சல் இல்லாததால் உழவுத் தொழிலும் ஆர்வமின்றி புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை உருவாகியுள்ளது.

வாழ்க்கை வசதிகள்

இதை இரு வகையாகப் பிரிக்கலாம். பொருள் சார்ந்ததது (Economic) ஒரு வகை, கண்டுபிடிப்புகள் இரண்டாவது வகை. வளர்ந்த நாடுகளில் பல ஆண்டுகட்கு முன்பே உபயோகப்படுத்தப்பட்ட பல பொருட்கள் அதன்பின் பல ஆண்டுகள் கழித்துதான் வேறு பல நாடுகளில் உபயோகத்துக்கு வந்தன. தாமதமாய் பெற்றநாடுகள் வளர்ந்து வரும் நாடுகளாகும். உதாரணமாய் கம்ப் யூட்டர், செல்போன் போன்றவைகள் உலக அரங்கில் கண்டு பிடித்து உபயோகப் படுத்தப்பட்ட பல ஆண்டுகள் கழிந்தே நம் நாட்டில் கிடைத்தன.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத் தில் செலவுக்கும் அதிகமாய் வரவு இருக்கும் போதுதான் இம்மாதிரி வாழ்க்கை வசதிகளில் முழு கவனம் செலுத்தமுடியும். அவ்வாறின்றி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ள நிலையில் அந்நாடுகள் வாழ்க்கை வசதிகளில் கவனம் செலுத்த முடியாது. மக்களது மனோபாவம் தான் ஆட்சியாக மலர்கிறது. சிறு உதாரணம் மூலம் இதில் தெளிவடையலாம்.

எந்த நாட்டில் மக்கள் நியாயமாக தங்களது வணிகத்தை அமைத்து நடத்துகிறார்களோ, அந்த நாட்டில் உபரி வருவாய் இருக்கும். எங்கு மறைப்பது, கறுப்பு பணம், இரண்டு வகையான கணக்குகள் பராமரிப்பது போன்றவை உள்ளதோ, அங்கு பற்றாக்குறைதான் நிலவும்.

‘இருக்கு ஆனா… இல்லே’ என்றகதை தான். பலரிடமும் பணம் இருக்கும், ஆனால் அதை வெளிப்படையாக அனுபவிக்க முடியாது. ஏனெனில், அது கணக்கில் காண்பிக்காதது. இருந்தும் இல்லையென்று கூறி வாழ்வர். அதிகமாகிவிட்டால், வேறுயாராவது பெயரில் பினாமியாக சொத்து சேர்ப்பார்கள். எப்படி வந்ததோ, அப்படியே அவை காணாமல்போகும்.

எனவே, கூடுதலான வருவாய் இருக்கும் நாடுகள் தான் சமூதாய மேம்பாட்டுக்கு, வாழ்க்கை வசதிகளின் மேம்பாட்டுக்குத் திட்டமிட்டு செயல்பட முடியும். நம் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் மாபெரும் முன்னேற்றநிலையை நோக்கி நாம் சென்றுகொண்டுள்ளோம் என்பது தெளிவாகும். இந்தியா முழுவதும் முக்கிய சாலைகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல தொலைத் தொடர்பில் குறிப்பிட்டுச் சொல்லுமளவு முன்னேறி வருகிறோம். சுதேசி பொருட்களை வைத்து தயாரித்த பல ஏவுகணைகள், செயற்கைக் கோள்கள் உள்ளிட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம். முழுமையான முன்னேற்றம் காணாத நிலைக்கான காரணம்…

(காத்திருப்போம்)

 

1 Comment

  1. otakoothan says:

    very useful article. it is so good.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1