Home » Articles » ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!

 
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!


சம்பத்குமார் மா
Author:

ஆசிரியப் பணிதனையே ஆர்வமுடன் ஏற்றமகன்
ஆட்சிப் பணியில் உயர்பதவி வகித்த மகன்
சர்வபள்ளி எனும் ஊர் தந்த மகன்
சாதனைகள் பலபுரிந்து வாழ்ந்த மகான்!
இவர் பிறப்பை போற்றும்படி நாமும் ஓர் தினமாக
சிறப்புடனே கொண்டாடி மகிழ்கின்ற காரணத்தால்
நம் சிறப்பும் நாடுபோற்றஉயரும் என்று
பொறுப்புடனே நற்பணிகள் செய்தல் நன்று!
அர்பணிப்பு குணத்துடனே ஆற்றினாலே
ஆசிரியப்பணி என்றைக்கும் அறப்பணியே!
அதன்பொருளை தவறாக உணர்ந்ததாலே
அப்பணியோ என்றும் அரைப்பணியே!
இயல்களிலே உள்ளவற்றைச் சொன்னாலே
போதுமென்றநிலையில்பலர் இருப்பதாலே
பிள்ளைகளும் அதில்பாதி படிப்பதாலே
இன்றைக்கும் இப்பணி அரைப்பணியே!
தன்னம்பிக்கை உணர்வுதனை ஊட்டுவதாலே
தளர்ந்தவன்மனம் அதனால் மாறுவதாலே
தடையின்றி மதிப்பெண்பெறஎண்ணுவதாலே
தலைமையிடம் நாம்பெற்றோம் தரணியின் மேலே!
புலனடக்கம் தனையேதான் வலியுறுத்தி
புழுப்போல மாறாமல் அவனைத் திருத்தி
புகழ்தனையே பெற்றிடப் பல வழிகள் சொல்லி
புகழ்பலவே பெற்றிடுவோம் நாமும் நாளும்!
மீள்திறன் கொண்டோரின் திறனறிந்து
ஏற்றபடி பயிற்சிகளைக் கொடுப்போமாயின்
ஏத்தும்படி மதிப்பெண்ணும் பெறுவார்கள்
ஏளனம் செய்தோரை பின்னே தள்ளுவார்கள்!
திறன்குறைந்த பிள்ளைகளின் திறனறிந்து
திறம்படவே பயிற்சிகள்பல கொடுப்போமாயின்
தேர்வினிலே தேர்ச்சியும் பெறுவார்கள்
தேவையற்றசெயல்களையும் விடுவார்கள்!
சிறப்பாக தேர்வுகளை எழுதினாலே
சிறந்ததொரு மதிப்பெண்ணும் பெறலாமென்று
நல்லுறையை நாமெடுத்துச் சொல்வோமானால்
நம்பெருமை உயர்ந்திடுமே நாளும் நாளும்!
படிக்கின்றபிள்ளைகளுக்கு முன்மாதிரியாய்
பாங்குடனே நாமும் இருப்போமாயின்
பாரில் அவர்களும் தலைநிமிர்ந்து வாழ்வார்கள்
பலரும் நமை மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள்!

நண்பனாய், நல்ஆசானாய், வழிகாட்டியாய்
எந்நிலையானாலும் அந்நிலையின் பொருளுணர்ந்து
ஏற்றபடி நற்கருத்தை நாமும் சொன்னால்
ஏற்றுக்கொள்ளும் அவன் மனமும்
ஏற்றம்பெறும் அவன் வாழ்வும்!
சங்கடங்கள் வந்துசேரும் இப்பணியை ஆற்றுவதால்
சான்றோன் என்று பிறர்நம்மை போற்றுவதால்
தூற்றிடுவோர் சொல்லினையே
தூரம்தூக்கி எறிந்துவிட்டு
ஆற்றிடுவோம் நம்பணியை ஆண்டவனின் பாதம்தொட்டு!
தேர்ச்சிபெறவைப்பதுதான் வேலை என்று
எண்ணுவதோ என்றைக்கும் நல்லதன்று
பாடந்தனை நடத்தினாலே போதும் என்று
பாதிபேர் நினைக்கின்றார்கள் பாரில் இன்று!
இந்நிலைதான் மாறிடுமோ நாளைக்கு என்று
ஏங்கிடுவோர் எத்தனையோ பேர்கள் இன்று
ஏக்கந்தனை தணித்திடுவோம் நாமும் என்று
சூளுரையை ஏற்றிடுவோம் இக்கணமே இன்று!
இத்தகயை கருத்தெல்லாம் எந்தனது கருத்தென்பேன்
இந்நிலைக்கு எனைஉயர்த்தியது என் ஆசான்கள் என்பேன்!
ஏற்புடையதாயிருப்பின் ஏற்றிடலாம் மகிழ்வுடனே!
ஏற்றதல்ல என்றாலே தள்ளிடலாம் இக்கணமே!
எக்கருத்தை யார்உரைப்பின் அக்கருத்தின் பொருளுணர்ந்து
அக்கரையுடன் அனைவருமே இப்பணியை ஏற்போமாயின்
என்றைக்கும் ஆசிரியப்பணி அறப்பணியே!
அதுவேதான் நம் அனைவருக்கும் முதற்பணியே!
– மா. சம்பத்குமார்
முதுநிலை விரிவுரையாளர், வேதியியல்
நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி
மேட்டுப்பாளையம்.

 

1 Comment

  1. Egypt says:

    What an awesome way to explain this-now I know erveytinhg!

Leave a Reply to Egypt


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1