Home » Articles » வெற்றிப் படிக்கட்டுகள்

 
வெற்றிப் படிக்கட்டுகள்


செலின் சி.ஆர்
Author:

இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த நொடியில் நாம் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறோமோ, அதில் முழு கவனத்தை யும் செலுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். கூடவே, ஒரு பட்டியலையும் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். எதற்கு இந்த அட்டவணை? நம் லட்சியத்தை அடைய நாம் கவனம் செலுத்தக்கூடிய நாட்களில் இது வரை எத்தனை நாட்களை இழந் திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்குத்தான். இப்பொழுது என்ன நிலையில், நம் வாழ்க்கையின் எப்படிப்பட்ட காலகட்டத்தில் இருக்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா?

தொண்ணூறு, நூறு வயது வரைகூட நாம் ஆரோக்கியமாக வாழலாம். அது வேறு விஷயம். ஆனால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் எழுபது வயது என்றபொதுவான கருத்தை அடிப்படையாக வைத்து இந்த அட்டவணையைக் கொடுத்திருக் கிறார்கள். நம் ஒவ்வொருவரின் வயதைப் பொருத்தும், இரண்டு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, நாம் இதுவரை எவ்வளவு நாட்களை செலவழித்திருக்கிறோம்… அதாவது வாழ்ந்திருக்கிறோம் என்பது. இரண்டாவது, தகவல். இன்னும் எத்தனை நாட்கள் மீதமிருக்கின்றன என்பது. இந்தத் தகவலைப் படித்தவுடன், நிச்சய மாய் ‘ஐயோ, இத்தனை நாட்களை நான் கடந்துவந்து விட்டேனா? இத்தனை நாட்களில் நான் என்னென்ன விஷயங்களை சாதித்திருக்கிறேன் என்ற கேள்வியும், இன்னும் இவ்வளவு நாட்கள்தானா மீதமிருக்கின்றன. இதற்குள் நாம் சாதிக்கமுடியுமா? அப்படி யென்றால் எவ்வளவு தீவிரமாக முழுமூச்சாக உழைக்க வேண்டும்…? என்றபதைபதைப்பும் உங்களுக்குள் ஏற்படப்போவது நிச்சயம்.

உங்கள் வயது 70 என்றால், நீங்கள் இதுவரை செலவழித்து விட்டது 25,550. இறைவன் உங்களை வெகுவாய் ஆசீர்வதித்திருக் கிறார். இனிவரும் ஒவ்வொரு நாளையும் நீங்கள் எப்படி பயனுள்ளதாக செலவழிக்கப் போகிறீர் கள் என்ற கேள்வியை உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

70 வயதுக்காரர்கள் மட்டுமல்ல… இந்த அட்டவணையைப் படித்து முடித்தவுடன் நாம் அனைவருமே நம்மைப் பார்த்து கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுதான், “இத்தனை நாட்களை கடந்து வந்திருக்கும் நான், எனது வெற்றிக்காக, சாதனை அடைவதற்காக இவற்றுள் எத்தனை நாட்களைப் பயன்படுத்தி யிருக்கிறேன்…” என்பதுதான்.

நான் நமது வெற்றிக்கான செயல்களின் மீது ஆழ்ந்த கவனத்தை செலுத்தியாக வேண்டிய கட்டாயத்தை இந்தப் பட்டியல் நமக்குணர்த்தும். இந்தப் பட்டியலைப் படித்துக்கொண்டே வரும் போது, நம் வயதை உள்ளடக்கிய வரி வந்தவும் நம் மனதிற்குள் ஒரு அதிர்வு ஏற்படுமே… அந்த அதிர்வு புரியவைக்கும், நாம் நமது வெற்றியின் மீது செலுத்த வேண்டிய கவனத்தின் கணத்தை. பொதுவாக இரண்டு நிமிடங்கள், ஒரு நிமிடம், ஒரு நொடியின் மீதெல்லாம் நான் கவனம் செலுத்துவதேயில்லை. ஆனால், சில அபூர்வ சந்தர்ப்பங்களில்தான் நம் கவனம் ஒவ்வொரு நிமிடத்தின் மீதும், நொடியின் மீதும் கூட பதிகிறது. பத்து மணிக்குக் கிளம்பும் இரயிலைப் பிடிக்க வேண்டும். மணி இப்பொழுது ஒன்பது முப்பது. வாகன நெரிசலில் சாலையே விழிப் பிதுங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியொரு ‘டிராஃபிக் ஜாம்”. உங்கள் கார் ஒவ்வொரு இஞ்ச், இஞ்ச்சாக ஊர்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் கவனம் முழுவதும் இப்பொழுது கடிகார முட்கள் மீதுதான். இதுவரை ஒருநாளாவது இப்படியொரு கவனத்தோடு நேரம் பார்த்திருப் பீர்களா என்பது சந்தேகம். ஒன்பது ஐம்பது… ஒன்பது ஐம்பத்தைந்து… என முட்கள் நகர நகர உங்கள் மனதிற்குள் திக்… திக்… ! மணி பத்து என்றசெய்தியை உங்கள் கடிகாரம் தெரிவித்த வுடன் எப்படிப்பட்ட பதை பதைப்பு ஏற்படும்? இன்னும் கொஞ்சநேரம் நீண்டிருக்கலாமோ என்றுகூட தோன்றும் இல்லையா?

ஆனால் என் அன்பு நெஞ்சங்களே நமக்கு நமது நாட்கள் ஒருபோதும் நீட்டிக்கப்படாது. ‘கவனம்’ என்பது கூட சந்தர்ப்பத்திற்கேற்ப மாறு படும் என்பதை இப்பொழுது உணர்ந்திருப் பீர்கள் தானே? பொழுது போக்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, நமக்கு கடிகாரத்தின் மீது கவனம் செல்வதில்லை. இரயிலுக்கு நேர மாகிக் கொண்டிருக்கும்போதோ, கடிகாரத்தை தவிர வேறெதன் மீதும் நமது கவனம் பதிவதில்லை. சில சூழ்நிலைகளை நம்மால் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால், நீங்கள் வெற்றி பெறத்தேவையான சூழலை உருவாக்கிக் கொள்வதும், அதன்மீது முழு கவனத்தையும் குவிப்பதும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளே இருக்கும் விஷயங்கள்தான் என்பதை உணருங்கள்.

இரயில் புறப்படும் நேரம் நெருங்க நெருங்க உங்கள் மனதிற்குள் ஏற்படும் அதிர்வுகளைப் போன்றே, நாம் கடந்துவிட்ட நாட்களைக் குறித்து படிக்கும் போதும் ஏற்படும். காரிலிருந்து இறங்கி பறந்து சென்று உங்கள் இரயிலைப் பிடிக்க முடியாது. ஆனால், நம் வாழ்நாளில் மீதமிருக்கும் ஒவ்வொரு நாளையும் மிகவும் பயனுள்ளதாக்க உங்களால் முடியும். ஒவ்வொரு தினமும் Countdown தான். நாம் வாழ்நாளுக்காக மட்டுமல்ல. நமது வெற்றி சிகரத்தில் கால் வைக்கப்போகும் அந்த அற்புத கணத்திற்காகக் கூடத்தான்! உங்கள் வேலையின் மீது கவனம் செலுத்தமுடியாமல், மனம் அலைபாயும் போதெல்லாம்… இந்த அட்டவணையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இந்த நொடியின் முக்கியத்துவம் புரியும். நிறைய வெற்றியாளர் களுக்குப் பயன்பட்ட இந்த பட்டியல் நிச்சயம் உங்களுக்கும் உதவும்!

சரி, நமது தொழில், கடமையில் நம்மால் முழு கவனமும் செலுத்த முடியாமல் போவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன என்பதை இப்போது ஆராய்ந்து பார்ப்போமா? இரண்டு முக்கியமான காரணங்கள்தான் நம் தொழிலின் மீது கவனம் செலுத்த முடியாமல் நம்மை அல்லாட வைக்கின்றன. அவை :

1. நாம் சார்ந்திருக்கும் துறைமீது உளமார்ந்த ஆர்வம், ஆசை, காதல், அதீத ஆர்வம் இல்லாமல் இருப்பது.

2. இந்த வேலை அல்லது தொழிலை வெற்றி கரமாக செய்து முடிக்க இந்தத் துறையில் சாதிக்கத் தேவையான திறமை என்னிடம் இல்லை என நம்மை நாமே மட்டம் தட்டிக்கொள்ளும் மனப்போக்கு.

நம்மால் இந்த லட்சியத்தை அடைய முடியும் என்றநம்பிக்கையும், அடைந்தே தீர வேண்டும் என்றவெறியும், நம் தொழிலை முழு ஈடுபாட்டோடும், காதலோடும் செய்யக்கூடிய மனப்பான்மையும் இருந்தால், நிச்சயமாக நம் துறையில் நம்மால் நூறு சதவீதம் கவனத்தை செலுத்த முடியும். உங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை இன்றேஉருவாக்கிக் கொள்ளுங்கள். இன்றைய தேதியில் உங்கள் சட்டைப்பையில் பத்துரூபாய்கூட இல்லாமலிருக்கலாம். அதனால் என்ன? உங்களை ஒரு லட்சாதிபதியாக, கோடீஸ்வரராக கற்பனை செய்துபார்க்கக் கூடாதென்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? இன்றைக்கு சினிமா, எழுத்து, இசை, வியாபாரம், அரசியல், பேச்சு, விளையாட்டு… என அத்தனை துறைகளிலும் நாம் பார்க்கிற வெற்றி யாளர்கள் எப்படி உருவாகினார்கள்? பிறக்கும் போதேவா? இல்லையே…? பெரும்பாலான வெற்றியாளர்கள் எவ்வித பொருளாதாரப் பின்னணியும், குடும்பப் பின்னணியும், ஆதரவும் இல்லாமல் தங்கள் சுய உழைப்பினால் மட்டும்தானே வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதுவும், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து வந்து, அத்தனை விதமான கஷ்டங்களையும் அனுபவித்து வளர்ந்த சூழலிலிருந்து, நான் சொன்னதுபோல் உண்மையிலேயே சட்டைப் பையில் பத்துரூபாய்கூட இல்லாமல்தானே தங்கள் துறையில் நுழைந்தார்கள்? அவர்களை வெற்றி பெறவைத்தது எது? நான் குறிப்பிட்ட ‘கற்பனை, தங்கள் பிம்பம் குறித்த உயர்ந்த கற்பனை’ மட்டும் இல்லாமல் போயிருந்தால் அவர்களால் அத்தனை கஷ்டங்களையும் சகித்துக் கொண்டிருந்திருக்க முடியுமா? இல்லை மனதை ஒருமுகப்படுத்தி தங்கள் துறையில் கவனத்தைப் பதித்திருக்கத்தான் முடியுமா? ம்ஹூம்… வாய்ப்பே இல்லை.

அதேபோல் வெறும் கற்பனையோடு நின்றுவிட்ட சிலரைப்போலில்லாமல் தங்கள் முழு கவன ஒருங்கிணைப்பிற்குமான அடித் தளமாக அவர்கள் தங்களைக் குறித்த நேர்மறை பிம்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கற்பனை செய்தல் முதல் பாகமென்றால், அந்த கற்பனையைச் செயல்படுத்த முழுக் கவனத்தோடு பணிபுரிவது வெற்றியின் இரண்டாம் பாகம். அப்படி தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே நீங்கள் வெற்றி என்ற முழுமையை, பலனை அடைய முடியும். நமது மனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது குவிவதைத்தான் கவனம் என்கிறோம். இப்படி கவனம் செலுத்தும்போது… நம் மனம், உடல் உழைப்பு, திட்டமிடல், வெற்றி குறித்த சிந்தனை… இவையெல்லாமே ஒரு நேர்கோட்டின் மையத்தில் குவியும்போது, ஒரு செயல் அல்லது தொழில் துறையின் மீது குவியும்போது இயல்பாக, மிக எளிதாக வெற்றி கிடைக்கிறது. ஒரு பெரிய பிரம்மாண்டமான கட்டடத்தின் அழகை பார்த்து பிரமித்து நிற்கும் பலரும் அதன் அடித்தளத்தைப் பற்றி யோசித்தப் பார்ப்பதில்லை. காலங்களைக் கடந்து ஒரு கட்டடம் நிலைத்து நிற்கிறதென்றால், அதைக் கட்டியவன் வெறுமனே மேல் பூச்சின் மீதும், வெளித்தோற்றத்தின் மீதும் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி, வெளித்தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பல மடங்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து, கவனம் செலுத்தி அடித்தளம் போட்டிருப்பார். ஆம், நாம் வெற்றி பெறவேண்டுமென்றால், சாதிக்க வேண்டுமென்றால், நம் வாழ்நாளுக்குப் பிறகும் நம் வெற்றி நிலைத்து நிற்க வேண்டுமென்றால்… ஒவ்வொரு அங்குலத்திலும், ஒவ்வொரு அடியிலும் முழு கவனம் தேவை…!

(தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1