– 2009 – June | தன்னம்பிக்கை

Home » 2009 » June

 
 • Categories


 • Archives


  Follow us on

  இளைஞர்கள் இதயத்தில் எழுச்சி நிலா

  மு. நாகபாண்டி
  தமிழ் விரிவுரையாளர்,
  ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா
  கலை அறிவியல் கல்லூரி, கோவை.

  மண்ணில் பிறக்கும் அனைத்து மனிதனும் வீட்டிற்கோ நாட்டிற்கோ ஏதாவது பயன் தரும் விதத்தில் தன்னுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் சோம்பேறித் தனத்தினாலும் தள்ளிப் போடுதலினாலும் சாதிக்க வேண்டியதை மறந்து போகிறான். அப்படி மறந்து போகின்றவர்களின் இதயத்தை தூசுதட்டுவது மிக முக்கியப் பணியாகும். இது எல்லோருடைய கடமையும் கூட…..

  Continue Reading »

  உன்னதமாய் வாழ்வோம்! உயிர் இரக்கம் பெறுவோம்!!

  என் இனிய தன்னம்பிக்கை அன்பர்களே! உங்களுக்கு இந்த முறை கடவுளின் அற்புத பரிசு ஒன்றை இரகசியமாக சொல்ல விரும்புகிறேன். கடவுள் கொடுக்கும் பரிசை இன்முகத்தோடு, பெற்றுக் கொள்வோமா? அல்லது வெறுப்போடு வேண்டாம் என்று மறுப்போமா? அப்படி என்ன அந்தப் பரிசு என்கிறீர்களா? அது தான் வலி (pain). வலி கடவுளின் அன்புக் கொடை

  Continue Reading »

  வெற்றிப் புதையல்….

  ….. கடற்கரை மணலில்
  காணக் கிடைப்பது இல்லை வெற்றி!
  அடி மணலில்
  ஆழப் புதைந்திருப்பதே வெற்றி!
  தடைகளாய் கற்களும்

  Continue Reading »

  எழுந்து வா!……

  மனிதா உலகம் இருண்டு விடவில்லை!
  நீதான் உன் கண்களை மூடிக்கிடக்கிறாய்!
  உன் இமைகளை இலக விடு!
  உன் கண்களை திறந்துபார்!

  Continue Reading »

  அ…ஆ..

  “மண்ணை” மாதவன்
  சென்னை

  “அ” என்றால் அன்பு.

  அன்பு ஒரு மனநிலை

  தொலைக்காட்சியில் ஒருமுறை “மனோதத்துவ” நிபுணர் ஒருவரின், பேட்டியை பார்த்து கொண்டு இருந்தேன் Depression என்ற மன அழுத்தம் எதனால் வருகிறது என்று ஒரு கேள்வி?

  Continue Reading »

  இசைந்து இசைந்து

  துள்ளித் துள்ளி குதிக்கும் மனதை
  அடக்கி வைக்க வேண்டும் – தினம்
  “தூய நினைவை” சேர்த்துச் சேர்த்து
  துயரம் போக்க வேண்டும்!

  Continue Reading »

  நிறுவனர் நினைவுகள்

  – தூசி. தியாகராசன்

  பண்ணைக்கும் பரிசோதனைச்சாலைக்கும் பாலமாய்த் திகழ்ந்தவர் – டாக்டர் இல.செ.க.

  “விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டீ’ என்று, ஐம்பது வருடங்களுக்கு முன்பே, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடி வைத்தார். அம்மிக்கல்லையும், ஆட்டுக்கல்லையும் நமது அம்மாக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த “கற்காலம்’. அந்தக் காலத்திலேயே, “மிக்ஸி, கிரைண்டர் போன்றஇயந்திரங்களை விஞ்ஞான முறையில் கண்டுபிடித்து, வீடுகளிலே பயன்படுத்துவேன்” என்று தீர்க்க தரிசனத்தோடு பாடியிருந்தார் கலைவாணர். அந்தப் பாடலின் மையக்கருத்து என்னவென்றால், விஞ்ஞானம் என்பது சோதனைக்சாலையிலே மட்டும் இருந்தால் போதாது. அது நம் சோறாக்கும் வீட்டுக்கும் வரவேண்டும்; அதனால் மக்கள் பயன்பெற வேண்டும் என்பது தான்.

  Continue Reading »

  இன்று மகிழ்ச்சி நாள்

  வாழ்க்கையின் தடை

  நமக்கு எல்லாரிடமும் ‘கல கல’னு பேசுவதற்கு ஆசை தான். ஆனால், ஆனால் அதை எப்படி ஆரம்பிப்பது?

  என்னென்ன பேசுவது? அவர் என்ன நினைப்பார்? ஒருவேளை பிடிக்காமல் வெறுப்பாகிவிட்டால்?

  Continue Reading »

  புல் கூட நமை வீழ்த்தும்

  கண்மூடிப் படுத்திருந்தால் கனவில் கூட
  கவலைகளை நாம்போக்க முடிந்தி டாது
  விண்மீது பறப்பதற்கே ஆசை கொண்டு
  வெறுங்கையை வீசிநின்றால் நிகழ்ந்தி டாது

  Continue Reading »

  மாற்றத்தின் மறுஉருவம் வெற்றி

  – ஆர். முருகேசன் M.A., M.Phil., Ph.D.,
  மனநல ஆலோசகர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்

  முளைக்க மறுக்கும் விதை, உணவாக மறுக்கும் தானியங்கள், உருவாகாத கருமுட்டை, வளர மறுக்கும் கரு, உடல் மற்றும் மன ரீதியில் வளர மறுக்கும் மனிதன், வளர மறுக்கும் தாவரங்கள், விலங்குகள் இப்படி புதிய புதியதாக மாறமறுக்கும் உயிரினங்கள், பொருட்கள், செயல்கள் நிறைந்த உலகை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாற்றம் இல்லாத

  Continue Reading »