Home » Cover Story » இன்றைய சிந்தனையும் செயலுமே நாளைய வாழ்க்கை

 
இன்றைய சிந்தனையும் செயலுமே நாளைய வாழ்க்கை


சாந்தகுமார் T
Author:

நேர்முகம்: என். செல்வராஜ்

– ‘கீர்த்திலால்ஸ்” குரூப் ஆஃப் கம்பெனி
திரு. T. சாந்தகுமார்

உயர்ந்த இலட்சியம், உயர்ந்த எண்ணம், இடைவிடாத உழைப்பு இவை யாவும் ஒன்றாகும் போதுதான் வாழ்க்கையில் வசந்தம் என்பது தென்பட ஆரம்பிக்கும். நாடும் ஏடும் ஒருவரை அல்லது ஒரு நிறுவனத்தை உயர்த்திப் பேசி பாராட்டுகிறது என்றால் அது ஒரு இரவில் கிடைத்த வெற்றி என்று சொல்லிவிட முடியாது. பல நாட்கள், மாதங்கள் வருடங்கள் அயராது உழைத்த உழைப்பாலும், கொடுக்கும் பொருளின் தரத்தாலும், சமுதாயத்தின் மீது அவர்கள் காட்டும் அக்கறையாலும் தான் முடியும்.

அப்படியொரு சிறப்பை பெற்றதும், பல வகையான நம்பிக்கைகளும், ரசனைகளும் கொண்ட தென்னிந்தியாவின் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடந்த எழுபது வருடங்களாக ப்ரீமியம் வைரம், தங்க நகைகள் தயாரிப்பதில் சிறந்து விளங்கி வரும் நிறுவனம் கீர்த்திலால்ஸ் தங்கம் மற்றும் வைர ஜுவல்லரி.

1939ஆம் ஆண்டு திரு. கீர்த்திலால் காளிதாஸ் மேத்தா அவர்களால் கோவை ராஜ வீதியில் துவக்கப்பட்ட நிறுவனம் தான் “கீர்த்திலால் காளிதாஸ்” தங்க வைர ஜுவல்லரி. ஆரம்பத்தில் இருந்தே வாடிக்கையாளர்கள் மீதும், கொடுக்கும் பொருளின் தரத்தின் மீதும் தனிக்கவனம் செலுத்தியதோடு மட்டுமில்லாமல் காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பில் தனக்கென

தனி முத்திரையை பதித்தவர் திரு.கீர்த்திலால் காளிதாஸ் மேத்தா அவர்கள்.

இதயத்தில் நேர்மை இருந்தால் நடவடிக்கைகளில் அழகு புலனாகும் என்பார்களே, அப்படியொரு அழகு வெளிப் பட்டது அவர்களின் தயாரிப்பில் உருவான ஆபரணத்தில் மற்றும் அதை வாங்கி அணிந்து கொண்ட வாடிக்கையாளர்களின் உள்ளப் பூரிப்பில்.
தாம் விரும்புவதைச் செய்யக்கூடியவர்கள் வல்லவர்கள், தாம் செய்யக்கூடியதைச் செய்ய விரும்புவர்கள் அறிவாளிகள் என்பார் ஏ.வி.இஃப்லாண்ட் என்ற அறிஞர்.

விரும்பியதை செய்யக்கூடியதில் வல்லவராகவும், தாம் செய்யக் கூடியதைச் செய்வதில் அறிவாளி யாகவும் திகழ்ந்த திரு.கீர்த்திலால் காளிதாஸ் மேத்தா அவர்கள், தொழிலாளர்களோடு தொழி லாளராக கலந்து ஒவ்வொரு பணியையும் நேரில் சென்று நின்று, கவனித்து புதுமை களை படைக்க அடித் தளம் அமைத்தார். விளைவு ஷோரூம் விரிவு பெற்றது. வியாபாரம் வளர்ச்சி அடைந்தது.

அக்கால கட்டத்தில், ஒரு புதிய முயற்சியை ஆரம்பிக்கும்போது உங்களுக்கு என்ன தேவை? எந்த இலட்சியத்தை அடைய வேண்டும் என்பதை உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு ஆரம்பித்தால், வெற்றி தோல்வி என்னும் பாதிப்புகள் நம்மை எதுவும் செய்யாமல், முன்னேற்றத்தை மட்டுமே நோக்கிச் செல்லத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கும் என்பார்களே அதுவாய் கீர்த்திலால்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார் திரு. ப. சாந்தகுமார் அவர்கள். வேளாண் படிப்பை படித்து முடித்த இவர் என்றாலும், தங்க வைர விற்பனையில், தயாரிப்பில் தன்னை இணைத்துக் கொண்ட பின்பு முழு மூச்சாக அதில் கவனம் செலுத்தினார். இன்று உலகின் மூன்று கண்டங்களிலும், 56 நாடுகளிலும் பரவி நிற்கிறது கீர்த்திலால்ஸ் நிறுவனம்.

நெப்போலியன் ஹில் சொல்கிறார் “வெற்றி பெற்றுள்ள சாதனையாளர் அனைவரும் இரண்டு விசயங்களில் கவனமாக இருக்கிறார் கள். ஒன்று தங்கள் தன்னம்பிக்கையை நம்பு கிறார்கள். இரண்டு, நேர்மையான பாதையிலேயே செல்கிறார்கள்!!

வாடிக்கையாளர்களிடம் ஏற்றதாழ்வு இன்றி அனைவருக்கும் சமமான முக்கியத் துவத்தை கொடுத்து இம்மியளவும் தரத்தில் குறைபாடு ஏற்பட்டு விடாதவாறு கைதேர்ந்த வடிவமைப் பாளர்களைக் கொண்டு நகைகளை உருவாக்கு வதில் கவனத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தார்.

தங்கத்தை வாங்கி உருக்கி வடிவமைப்பதில் கொஞ்சம் திருப்தியின்மை ஏற்பட ஆரம்பித்த வுடன் நேரிடையாக சுரங்கங்களிலிருந்து வைர நகைகளைப் பெற்று வடிவமைத்து தருவதில் இன்றைக்கு முன்னோடி என ‘கீர்த்திலால்ஸ்’ நிறுவனம் பெயர் பெற காரணமானார்.

தொழிலாளர்கள் / அலுவலர்கள் இவர் களின் கடின உழைப்பில் தான் ஒரு நிறுவனம் சிறந்து வளர்ந்தோங்குகிறது. அப்படிப்பட்ட நல்ல உழைப்பாளர்கள் எங்களுக்கு கிடைத் தார்கள். அதனாலேயே வளர்ந்து வருகிறோம் எனப் பெரிதும் தொழிலாளர்களைப் பாராட்டு கிறார் திரு. ப. சாந்தகுமார் அவர்கள். அதே சமயம் அவர்களின் நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் தொழிலாளர் களைப் பார்த்தபோது நாம் அறிய நேர்ந்தது.

நாளை, நாளை என்று சோம்பேறிகள் மட்டும்தான் சொல்வார்கள். இன்றைய நாளின் அருமையை உணர்ந்தவர்கள் இதோ! உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ உழைப்பைக் கொடு! உயர்வைப் பெறு!! என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறவர் இவர்.

தற்போது வாடிக்கையாளர்களே தான் அணிந்து கொள்ள விரும்பும் நகைகளில் தங்களுக்கு தேவைப்படுகிற வடிவமைப்பை உருவாக்கிக் கொள்ளும் வசதியை பெங்களூர், கொச்சின் உள்ளிட்ட இடங்களில் உருவாக்கி அசத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உலக அளவில் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஹாங்காங், டோக்கியோ உள்ளிட்ட நாடுகளில் மாபெரும் தங்க வைர கண்காட்சிகளை நடத்தி வாடிக்கையாளர்களிடையே அதிகளவு பிணைப்பையும், நல்லுறவையும் ஏற்படுத்தி வருகின்றார்.

கானோபஸ் சொல்கிறார், “வெற்றிக்கான மூன்றுபடிகள் 1) உடல் ஆரோக்கியம், 2) மன ஆரோக்கியம், 3) இறைவனை முழுமையாக நம்பிச் செயல்படும் ஆன்மீக ஆரோக்கியம்.

ஆன்மீகத்தை பொறுத்தவரையில் தெய்வ உருவச்சிலைகளுக்கு தேவையான அத்தனை ஆபரணங்களையும் மிகச்சிறந்த முறையில் துல்லியமாக வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்புக்கேற்ப அமைத்துத் தருவதில் இன்றைக்கு சிறந்த நிறுவனமாக ‘கீர்த்திலால்ஸ்’ உயர்ந்து நிற்கிறது.

திருப்பதி வெங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன், மதுரை சுந்தரேஸ்வர் மீனாட்சி, சிருங்கேரி சாரதாம்பாள், சபரிமலை ஐயப்பன், அமெரிக்க மேரிலேண்ட் ஸ்ரீ சிவ விஷ்ணு என பல்வேறு ஆலயங்களில் ‘கீர்த்திலால்ஸ்’ கை வண்ணம் நம்மை தொழவைத்து வருகிறது என்பது கண்கூடு.

உலகில் அற்புதங்களை உருவாக்கும் அதிசய, அரிய உணர்ச்சி ஊக்க உணர்ச்சியே! பெண்களாகிய உங்களாலும் தொழிலைக் கற்று சம்பாதித்து பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்க முடியுமென்ற நம்பிக்கையைக் கொடுத்து, தொழில் சார்ந்த பயிற்சிகளை முறையாகக் கற்றுக் கொடுத்து இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று அவர்கள் குடும்பம் சிறந்தோங்க காரணமாகி யிருக்கிறோம் என்பதை எண்ணும்போது மனதுக்குள் ஒரு திருப்தி எழாமல் இல்லை என்றார் திரு. ப. சாந்தகுமார்.

Women Empowerment நிறைவாக எங்களுக்கு கோவையில் கிடைக்கப்பெற்றதால் உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவு “விஸ்பார்க் ஜுவல்லரி மேனுபாக்சரர்ஸ்” நிறுவனத்தை கோவையில் உருவாக்கியிருக்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் நகைகள் பல வகையான சோதனைகளுக்கு உட்படுத்திய பின்னரே கிளைகளுக்கு அனுப்பப் படுகிறது. கீர்த்திலாலின் ஒவ்வொரு கிளையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற டிசைனர்கள் இருக் கிறார்கள். 3 dimensional animation மூலம் நகைகள் நன்கு வடிவமைக்கப்பட்டு நகையின் எடை, வடிவம் என எல்லாவகையான நுண்ணிய வேலைப்பாடுகள் நன்கு கவனிக்கப்பட்டபின் விற்பனைக்கு வருகிறது என்றவர்,

நன்மை செய்ய நமக்கொரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதனை காலம் தாழ்த்தாது உடனே செய்து விட வேண்டும். “பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமீப காலத்தில் 3 கோடி செலவில் “உஷா கீர்த்திலால் மேத்தா கன்வென்ஸன் சென்டர்” ஒன்றை உலகத்தரத்தில் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். மேலும், கல்விக்காக நிறைய பண உதவிகளை செய்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல், கோவை, மதுரை, திருச்சி, சென்னை, பெங்களூர், ஹைதரபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் பூங்கா பராமரிப்பின் மூலம் சிறந்த சுற்றுப்புற சூழலை உருவாக்கி வருகிறோம் என்றார்.

“நாம் என்ன தொழிலைத் தேர்ந்தெடுக் கிறோமோ அந்தத் தொழிலில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் நன்கு கற்றுத்தேர்ந்து அதன்மூலம் நம்முடைய வாடிக்கையாளர்களை முழு திருப்தி செய்ய வேண்டியது தலையாய கடமை” என்பதை உணர்ந்து செயல்பட்டாலே செய்யும் தொழிலில் யாவரும் வெற்றி பெறலாம் என தொழிலின் வெற்றி இரகசியத்தை இளைய தலைமுறைக்கென்று அவர் சொன்னபோது நாம் நம் பங்கிற்கு வேகமாக செயல்படுகிற இளைய தலைமுறை சிறு தடைகள் வந்தாலும் சோர்ந்து போய்விடுகிறார்களே, அதிலிருந்து அவர்கள் மீள வழிசொல்லுங்கள் என்றோம்….

தொடங்குகிற செயல் எல்லாமே வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது. சிறுசிறு தடைகள், இழப்புகள் ஏற்படத்தான் செய்யும். தன்னை சார்ந்து வருகின்ற வெற்றி / தோல்வி எல்லாமுமே நமக்கு கிடைக்கிற பெரிய அனுபவங்கள். அவை மூலம் தவறுகளை சரிசெய்து தனக்கென்று அமைத்துக் கொண்ட காரியத்தை இடைவிடாமல் செய்யும் பக்குவ மன நிலையை வளர்த்துக் கொண்டால் இன்றைய தோல்வி நாளைய வரலாற்றுச் சாதனையாகும் என்றார்.

வாழ்க்கையின் ஆரம்பத்தில், இடைப்பட்ட காலத்தில், இறுதிக்காலம் என எல்லாக் காலக் கட்டங்களிலும் நம்மோடு இருக்க வேண்டியது தன்னம்பிக்கை. இது இருந்தால் போதும் நிச்சயம் ஒவ்வொருவரும் சாதிக்க முடியும். தன்னம்பிக் கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எங்கும் எதிலும் உயர்ந்து நில்லுங்கள் என்பதே நாம் சொல்லும் செய்தியாகும் என்றார்.

நம்பிக்கைதான் உடலைக் கடப்பதற்கும் மலைகளை அளப்பதற்கும் உதவியாக இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் இன்றைய சிந்தனையையும் செயலையும் ஒன்றாக்குங்கள். நாளைய வாழ்க்கை உங்களுக்கானதாக மாறிவிடும். வாழ்த்துக்கள்! என்ற அவர் விடைபெற்றபோது,

சிறந்த வாழ்க்கை என்பது வெறும் வார்த்தைகளால் அமைவதில்லை; அது அற்புதமான செயல்களால் உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது.

– என். செல்வராஜ்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2009

நிறுவனர் நினைவுகள்
சமச்சீர் வளர்ச்சி சாத்தியமா?
நம்பிக்கை
திறந்த உள்ளம்
பிறருக்காக படிக்காதே! உனக்காக படி!!
தகர்ந்து விட்ட தடைகள்
வெற்றி ‘ குழப்பமில்லா குறிக்கோள்
வெற்றி ' குழப்பமில்லா குறிக்கோள்
அறிவுரைகள் ஜாக்கிரதை!
வெற்றிப் படிக்கட்டுகள்
தன்னம்பிக்கை என்னும் பேராற்றல்!
சிறகு முளைத்த பூக்களாய் நாம்… சிந்திப்போம் சில நொடிகள்…
மனிதா! மனிதா!!
மனிதகுல உயர்வுக்கு, மகத்தான ஏணி!
ஞானி
வருத்தப்படாதே…
ஆரோக்கியமான சில உணவு வகைகள்
ஏற்பது உயர்வு
முடிசூடு
அச்சீவர்ஸ் அவென்யூ
சிந்தை உயர்வாக…
தொழிலில் பணச்சிக்கல் வராமல் இருக்க…
இன்றைய சிந்தனையும் செயலுமே நாளைய வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்