Home » Articles » உலக மகளிர் தினம் வாழ்த்துகள்!

 
உலக மகளிர் தினம் வாழ்த்துகள்!


நிலா
Author:

வெல்ல வா மங்கையே

வேதனையை வீழ்த்திய
சாதனைமண மங்கையாய்
எழுச்சியை பூஞ்சோலையாக்க
எழு! ஏழ்திசையும் இலட்சிய திசையே!
விந்தைகளின் சவால்கள்
விரல்நுனிகளில் நடனமாடினால்
விண்முட்டும் சாதனைகள்
கண்முன்னே கவிதை பாடும்!
நம்பிக்கை தூபமேந்தி
நம்சரித்திர வேட்கைக்கு
பூபாள ஒளியேற்றிடின்
பூ வசந்தம் முற்றமாகும்!
தடைகள் செல்லரிக்க
தகுதியின் தேன்ரசமாய்
தரணியில் உலாபோயிடின்
தாக்குதல்கள்கூட மணிமகுடங்கள்!
புரட்சி மலைக்கோட்டை
பூபாள வெண்சாரலில்
பூத்து சாதனைவாசமானால்
பூவையர்கள் வெற்றிமுரசு
வாசலை முத்தமிடும்!
மூடங்களை பூட்டிவிட்ட
முத்திரை வாசலை
முனைப்பின் கதிரொளியால்
முத்துக்களாய் விரித்திடு!
வேர்வையின் துளிகளில்
வேதனைகள் வீழ்ந்திடின்
வெற்றிக்கனிகள் பறிக்கும் தூரம்
வெகுவிரையில் பட்டொளி வீசிடும்!!

– கவிநிலா அருணா
ஜல்லிப்பட்டி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2009

பயிலரங்கம்
உலக மகளிர் தினம் வாழ்த்துகள்!
நான் ஒரு வெற்றியாளர்
தன்னம்பிக்””கை”” யால்
தன்னம்பிக்""கை"" யால்
ஈரோடு பயிலரங்கம்
உயர்வின் பாதை
நிறுவனர் நினைவுகள்
இனியொரு விதி செய்வோம்!
இன்பமாக வாழ வழி
தேர்தல் ஜனநாயகம்
உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
சாதிப்பை நோக்கிய பயணத்தில்
இங்கு… இவர்… இப்படி…
உன்னதமாய் வாழ்வோம்! செயல்விளைவு உணர்வோம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
சிந்திக்க… சிறக்க….
திறந்த உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுகள்
உடலினை உறுதி செய்!
அச்சீவர்ஸ் அவென்யூ
பயிலரங்கச் செய்தி
மனிதா! மனிதா!!
சிந்தித்தால் சிகரம் எட்டும்!
அச்சீவர்ஸ் அவென்யூ
நல்ல வண்ணம் வாழலாம்
அச்சீவர்ஸ் அவென்யூ
உன்னைக்கொடு! விண்ணைத்தொடு!!
உள்ளத்தோடு உள்ளம்