Home » Articles » உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்

 
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்


செந்தில் நடேசன்
Author:

கொடுக்கப்பட்ட வேலையை, குறித்த காலத்தில் முடிப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவருக்கும், நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு குழுக்களுக்கும், குழுவை வழிநடத்தும் தலைவர்களுக்கும் அந்தக் குழுவை சார்ந்த ஒரு நபருக்கும் கொடுக்கப்பட்ட சவால் என்றேசொல்லலாம்.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரச் சூழ்நிலையில் தனிமனிதனில் ஆரம்பித்து பெரிய நிறுவனங்கள் வரை காலக் கடிகாரத்துடன் ஒரு பந்தயம் நடத்தி கொண்டு உள்ளது.

கொடுக்கப்பட்ட வேலையை கொடுக்கப்பட்ட கால அளவில் எந்த தனிமனிதன், அல்லது நிறுவனம் திறமையாக செய்து முடிக்கிறதோ அதை வெற்றி பெற்றநிறுவனம் என்றும், தனிமனிதனை வெற்றியாளர்கள் என்று உலகம் பாராட்டுகிறது. இதனால் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைகிறார்கள்.

இந்த குறிப்பிட்ட காலக் கெடுவில் வேலைகளை முடிப்பது என்பது எப்படி வெற்றியாளர்களுக்கு வெற்றி பெறும் நிறுவனங்களுக்கு சாத்தியமாகிறது? இந்த வெற்றியின் இரகசியத்தை தெரிந்தவர்களை நாம் சாதனையாளர்கள் என்கிறோம்! இதை எப்படி செயல்படுத்துவது இதன் வழிமுறைகள் என்ன?

1. ஒரு குழுவை வழிநடத்துபவராக நீங்கள் இருந்தால் நீங்கள் உடன் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வேலை கொடுக்கும் முன் தெளிவான நிர்ணயிக்கப் பட்ட கால அட்டவணையை கொடுக்க வேண்டும்.

2. வேலைக்கான கால அட்டவணை தயாரிக்கும் போது அனைத்து உறுப்பினர்களின் வேலை யில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்.

.3. வேலைக்கான காலத் திட்டம் தயாரிக்கப் பட்ட பின்பு அதில் அனைத்து உறுப்பினர் களையும் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

4. ஒவ்வொரு உறுப்பினர்களும், கொடுக்கப் பட்ட கால அட்டவணைப்படியும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றுகிறார்களா என்பதை தொடர்ச்சியாகக் கவனிக்க வேண்டும்.

5. காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் எப்போதும் அபாய ஒலியை ஒவ்வொரு உறுப்பினர்களிடமும், அதனை நிர்வகிக்கும் குழு தலைவருக்கும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், இது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்.

6. காலக் கெடு எப்பொழுதும் நம்மை ஒருமுகப்படுத்தி வேலையை துரிதமாக்கும் முழு ஈடுபாட்டுடனும் செய்யத் தூண்டும்.

இந்த காலகெடு சொல்வதற்கு எளிதாக இருக்கும் ஆனால் ஒவ்வொரு நாளும் சாதனையாளராக துடிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும், ஒவ்வொரு குழுவும், வெற்றி பெறநினைக்கும் ஒவ்வொரு நிறுவனமும் இதை நிறைவேற்றப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி!

இதோ சில குறிப்புகள்

நிறைவேறக்கூடிய நேர அட்டவணையைத் தயாரித்தல்!

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் உங்கள் வேலைகளை முடிக்க முடியவில்லை என்றால் எந்த ஒரு மனிதனும் தன்னம்பிக்கையை இழந்து விடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே முடிந்தவரை நடைமுறைக்குச் சாத்தியப் படுகின்ற வேலை அட்டவணையைத் தயார் செய்யுங்கள். இதில் உங்களுக்கு ஏற்படும் இடையூறுகள், வெளிப்புறத்தில் இருந்து வரும் இடையூறுகளை (தெரிந்ததும், தெரியாததும்) கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.

முழு மனத்துடன் வேலை செய்யும் மனப்பான்மையை ஊக்குவித்தல்

நீங்கள் ஒரு குழுவை வழிநடத்துபவராக இருந்தால், நீங்கள் முதலில் வேலையில் முழுக் கவனத்தில் ஈடுபடவேண்டும். மேலும் உங்களுடன் இருக்கும் அனைவருக்கும் முழு மனதுடன் வேலை செய்யும் மனப்பக்குவத்தை உருவாக்க வேண்டும்.

காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்

நீங்கள் முதலில் முன்மாதிரியாக இருந்து காலத்தில் அனைத்து வேலைகளையும் செய்து உங்களின் உறுப்பினர்களுக்குக் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். பிறகு அதை கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும்.

நேர நிர்வாகம் கடைப்பிடிக்காமல் இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்

காலத்தில் கொடுத்த வேலையை முடிக்கா விட்டால் உங்ளை நம்பி வேலையை கொடுத் தவர்கள், உங்கள் மீது உள்ள நம்பிக்கையை இழப்பார்கள், இது பெரிய நஷ்டம். இதனால் ஏற்படும் பாதிப்பு உங்கள் வருங்கால வளர்ச்சிக்குப் பெரிய தடையாக இருக்கும்.

உங்களுடன் இருக்கும் உறுப்பினர்களுக்கு உங்கள் மேல் உள்ள நம்பிக்கை குறையும். அடுத்து வரும் புதிய வேலைகளில் அவர்களின் முழு ஈடுபாடு குறைந்து விடும்.

வெற்றி பெரும் ஒவ்வொரு தனிமனிதனும், குழுவும், நிறுவனமும், திட்டமிட்ட நேர அட்டவணையை எப்பொழுதும் தயாரித்து வைக்க வேண்டும். அப்படி தயாரித்தப் பின்பு, அதை முழுமையாக, முழு மனதுடன் அனைத்து உறுப்பினர்களும் செயல்படுத்த வேண்டும்

இதை செய்தவர்கள் வெற்றியாளர்கள், செய்ய முயற்சி செய்பவர்கள் முன்னேறுபவர்கள், இதை கடைப்பிடிப்பவர்கள் ……………….. உங்களுக்கே தெரியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்