Home » Articles » உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!

 
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!


அனுராதா கிருஷ்ணன்
Author:

அன்பான தன்னம்பிக்கை நண்பர்களே! உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆனந்தம் அடைகிறேன். இந்த முறை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள சில பொக்கிஷ மான அனுபவங்களை அழகிய பூச்செண்டு களாகத் தொகுத்து கொண்டு வந்துள்ளேன். ஒவ்வொரு பூச்செண்டும் உங்களுக்குள் ஒரு அன்பான, அமைதியான, ஆரோக்கியமான, ஆனந்தமான, சுதந்திரமான அனுபவத்தை உண்டாக்கும் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகம் கிடையாது.

அன்பர்களே! நண்பர்களே! உங்கள் அகமும் முகமும் இப்பொழுதுதான் மலர்ந்த தாமரை போல் எப்போதும் இருக்கத்தானே ஆசை? ஆனால் நம் நிலைமை எப்போதும் அப்படி இருப்பதில்லை தானே? நாம் தேடும் அன்பான அமைதியான, ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கை எங்கே? எப்படித் தேடிக் கொள்வது என்று தெரியுமா? நண்பர்களே! வாழ்க்கையை நாம் நமக்கு வெளியே (பிரச்சனைகளுக்குள்ளே) தேடித் தேடியே வாழ்க்கை சிக்கல்களுக்குள் சிக்குண்டு சுதந்திரத்தை பறி கொடுத்து சூழ்நிலைகளின் கைதிகளாக வாழ்கின்றோம். என்பது தெரியுமா? உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா? நாம் தேடும் இந்த நான்கும் நமக்கு வெளியே இல்லை நமக்கு உள்ளே தான் இருக்கின்றன.

இதைத்தான் மகான் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்

“மனிதர்கள் வாழ்வின் புறச்சூழலை சரியாக உருவாக்கவே
முயற்சிக்கிறார்கள். ஆனால் வாழ்வின் தரம் உள் சூழலை
அடித்தளமாகக் கொண்டே அமைந்திருக்கிறது”
என்று கூறுகிறார்.

அன்பர்களே! நம் வெளிச்சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நம் உட்சூழல் பாதிப்படையாமல் இருத்தலே உன்னதமாய் வாழ்வதாகும். நாம் நமது வெளிச்சூழலால் உட்சூழல் பாதிக்கும் விதமாக அமைத்துக் கொள்வோமேயானால், நாம் பலவிதமான சிக்கல்களுக்கு ஆளாகி அவற்றில் இருந்து மீளத் தெரியாமல், திண்டாடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை என்றாகிவிடும். இப்படி வாழ்பவர் கள்தாம் “வாழ்க்கை என்பது போர்க்களம், அதில் போராடி ஜெயிப்பதே வாழ்க்கையின் நோக்கம்” என்று உணர்ச்சிவயமாக வாழ்ந்த அனுபவத்தால் அஞ்ஞானியாகக் கூறுவர்.

அன்பான வாசகர்களே! ஒரு ஞானி கூறுவதும் உண்மை. சராசரியாக வாழும் சமானியன் கூறுவதும் உண்மைதான். இவை யாவுமே அவர் அவர் அனுபவத்தில் ஆண்டவையாகும். உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அன்பு வேண்டும், அமைதி வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் நிச்சயமாக நீங்கள் வாளெடுத்து போர்க்களம் போக மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா? நீங்கள் விரும்பும் உன்னத வாழ்க்கை உங்களுக்குள்ளேயே உயிர்ப்புடன் இருப்பதை உங்களுக்கு அனுபவபூர்வமாக உணர்த்தவே இந்த தொடர் எழுதப்படுகிறது. நாம் உன்னதமாக வாழ கீழ்க்கண்ட சில அடிப்படையான அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

1. இறைநிலை உணர்தல்

2. உள்நிலை அல்லது தன்னை உணர்தல்

3. செயல் விளைவு புரிந்துணர்தல்

4. விருப்பு வெறுப்பு விடுதல்

5. சமநிலை பேணுதல்

6. உயிர் உடல் இணக்கம்

7. உடல் நலன் காத்தல்

8. உன்னத வாழ்க்கைக்கான உணவுகள்

9. உடற் கழிவு நீக்கம்

10. உயிர் திரள் (Specific gravity) அதிகரித்தல்

11. செயல் திறன் மேம்பாடு

12. வான் வசப்படுதல்

13. பிராண சக்தி கட்டுப்பாடு

14. தேக வெப்பக் கட்டுப்பாடு

15. உடல் நீர் பராமரிப்பு

16. திடப்பொருள் மேலாண்மை

17. பொருளாதார சுதந்திரம்

18. காலத்தை வென்றெடுத்தல்

19. முழுமையை உணர்தல்

20. உன்னதமாய் வாழ்தல்

ஆகா! கிளம்பிட்டாங்கய்யா! இன்னும் ஒருமுறைஅறிவுரைகள் சொல்ல என்று மிரள வேண்டாம். காரண அறிவை மட்டுமே சார்ந்திருக்கும் போதனைகள் தர்க்கரீதியாக பார்க்கப்படுவதால் வாக்குவாதம் தான் மிஞ்சும். நாம் அப்படியல்ல! உயிர் உணர்வால், அனுபவபூர்வமாக உணர்ந்த சில அற்புத இரகசியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே முனைகின்றேன். இவைகளை உயிர்ப்புடன் பருகி அனுபவித்து மகிழுங்கள்.

மலர் மருந்து : அன்பர்களே! எப்படிப்பட்ட குழப்பமான வெளி சூழ்நிலைகளிலும் தெளிந்த நீர் ஓடை போல் உங்கள் மனம் செயலாற்ற”வைட் செஸ்நட்” (white chestnut) என்றமலர் மருந்து உதவும்

– இரகசியங்கள் தொடரும்


Share
 

1 Comment

  1. Govind says:

    migavum suwarasyamaaga aarambha maagirathu katturai todar.
    todarunggal. aavalodu ethirpaarkiren. nandri.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்