Home » Articles » பயமற்று இருப்பாய்

 
பயமற்று இருப்பாய்


விஜயபாரதி
Author:

மயக்கத் துயிலைக் கலைத்து
முயற்சி யாகம் நடத்து
நயமாய் உடலை வளைத்து
பயிற்சிப் பயிரை வளத்து
உயரத்தை பிடிக்கப் புறப்பட்டு
வியக்கும் படியாய் நில்லு
முயலின் வேகம் எடுத்து
இயலும் வரைக்கும் செல்லு
பயத்தைத் தூர ஓட்டிவிட்டு
புயத்தை உயர்த்திக் காட்டு
தயக்கத்தை கழற்றி விட்டுவிட்டு
இயக்கத்தை தொடர்ந்து ஓட்டு
புயலைப் போல சுழன்று
துயரக் கடலைக் கடந்து
பயணத்தை முடிக்க விரைந்து
பயமற்று இருப்பாய் நிறைந்து.
கவிஞர் விஜயபாரதி, திருப்பூர்


Share
 

1 Comment

  1. This is just the kind of thing I’ve been searching for! Wonderful and thankyou!

Post a Comment


 

 


September 2008

திறந்த உள்ளம்
இளைஞனே சுய தொழில் செய்பவனா நீ
கடமைதான் வாழ்க்கை
கவலையைப் புறந்தள்ளுங்கள்
வெற்றிப்படிக்கட்டுகள்
சோதனைகள் கடந்தால் சாதனை
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு
மனிதா! மனிதா!
பணவீக்கத்திற்கு பாட்டி வைத்தியம்
தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்
தோல்வியில் நீ துவளாதே!
சிந்தனைத்துளி
வாழ்வின் சிறப்பு
பயமற்று இருப்பாய்
இதுதான் வாழ்க்கை
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 முறைகள்
பெண் சுதந்திரம்
உள்ளத்தோடு உள்ளம்
தமிழை நேசி
நிறுவனர் நினைவுகள்