Home » Articles » விடாது போராடு!

 
விடாது போராடு!


நிலா
Author:

உறுதியின் வீரவாளை
உன் தகுதியின் போருக்கு
உரிமையுடன் ஏந்தி
உரக்கப் போரிடும்
எழுச்சியின் தோள்களில்
ஏற்றத்தின் தோரணையாக்க
எதுவரினும் எதிர்த்தே
ஏறுநடை போடு!
புரட்சியின் முழக்கம்
புவிதனில் முழங்கிட
புதுமனிதனாய் மாறி
புதுநடை காட்டு!!
வீரத்தின் கரவொலி
தீரமாய் வலம்வர
திக்கெட்டும் கிழக்காய்
திகழ்ந்திட துணைகொடு!!
நம்பிக்கை சரவெடி
நாளும் வெடிக்க
முயற்சி தீப்பொறிக்கு
முனைந்து நின்றிடு!!
மூடக் கோட்டைக்குள்
மூடிய சகுனங்களை
முடங்கியே புதைத்திட
விடாது போரிடு!!
-கவிநிலா, ஜல்லிப்பட்டி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2008

திறந்த உள்ளம்
உடலுக்குப் பயிற்சி! உள்ளத்திற்கு மகிழ்ச்சி!
நிறுவனர் நினைவுகள்
வெற்றிப் படிக்கட்டுகள்
நானோ தொழில்நுட்பம்
ஆடைதரும் அன்பு உறவு
ஓசையின்றி பேசும் மொழி
இளைஞனே இப்போதுதான் வேலையில் சேர்ந்தவனா நீ?
மனிதா மனிதா
நேர்மை, ஆர்வம்! தொழிலில் உயரம்!
மறுக்காத மனம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
இதுதான் வாழ்க்கை
முடியாதது என்பது முயலாதது மட்டுமே!
விடாது போராடு!
உள்ளத்தோடு உள்ளம்
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
புவி உன் கையில்
எண்ணம் தன்னில் தன்னம்பிக்கை
உழைப்பே உயர்ந்த செல்வமாகட்டும்!
கலாச்சாரம் எங்கே?