– 2008 – July | தன்னம்பிக்கை

Home » 2008 » July

 
 • Categories


 • Archives


  Follow us on

  பாராட்டு விழா

  ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற திரு. வினோத் சேஷன் அவர்களுக்கு பாராட்டு விழா

  இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் 3வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்ற சாதனையாளர் திரு.சே.வினோத்சேஷன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைச் சார்ந்த வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி வளாக வள்ளுவர் அரங்கத்தில் 10.6.2008 செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

  Continue Reading »

  வெற்றிப் படிக்கட்டுகள்

  வெற்றிப் படிக்கட்டுகளில் இரண்டு படிக்கட்டுகளை வெற்றிகரமாக தாண்டி, இப்ப மூன்றாவது படிக்கட்டுல நின்னுட்டிருக்கீங்க. ஆனாலும், உங்க முத்துல ஒரு சின்ன குழப்பம், எதிர்பார்ப்பு, Curoisity எல்லாம் தெரியுது. இந்த மூன்றாவது படிக்கட்டு என்னவா இருக்கும் அப்படினு ரொம்பா தீவிரமா யோசிச்சிட்டிருகீங்களா? ம்ம். சொல்றேன். சொல்றேன்.

  Continue Reading »

  இங்கு இவர் இப்படி….

  முடியும் என்பது மூச்சானால்
  வெற்றி என்பது பேச்சாகும்!

  கோவை சவுரிபாளையம் ராஜிவ்காந்தி நகரில் நந்தினி ஐஸ்வர்யாவை சந்தித்தோம். +2 தேர்வில் இயற்பியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்ணும் – வேதியியலில் 199 மதிப்பெண்ணும் எடுத்து அசத்தியிருக்கிறீர்களே எப்படி? என்று தான் ஆரம்பித்தோம். கவிதை கலந்த பேச்சில் மிகவும் அழகாகவே பேசினார்.

  Continue Reading »

  ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்

  பத்தாம் வகுப்புத் தேர்வு முதல் சிவில் சர்வீஸ் தேர்வுவரை முடிவுகள் வெளியாகி, வெற்றி பெற்றவர்களுக்கும், சாதித்தவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கும் நேரமிது. அவர்கள் பாராட்டப்பட வேண்டிய அதே சமயத்தில் எதிர்பார்த்தை விட மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றவர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் தேவையான கருத்துக்களைச் சொல்வது தான் அதிமுக்கியமானதாகத் தோன்றுகிறது.

  Continue Reading »

  நிறுவனர் நினைவுகள்

  அகத்துக்கும் புறத்துக்கும் அழகூட்டிய அண்ணல்

  அய்யா இல.செ.க. அவர்களின் அறிவுரையைக் கேட்டு, தங்கள் வாழ்க்கைப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்ட இளைஞர்கள் ஏராளமானோர் என்று சென்ற இதழில் எழுதியிருந்தோம். இப்படிப்பட்டவர்களைத் தெரிந்து பழகிய நண்பர்களையும் தொடர்பு கொண்டோம். அவர்கள் தெரிவித்த செய்திகளை, அப்படியே இங்கே கொடுத்திருக்கிறோம். அந்த அறிவுரையும், அனுபவங்களும், இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

  Continue Reading »

  மனிதா மனிதா

  இனிய வாசகர்களே!

  வாழ்க வளமுடன், மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

  துன்பத்துக்கு காரணம் ஆசைகளே என நாம் படித்திருக்கிறோம். ஆனால் ஆசைகள் இல்லாமல் வாழ முடியாது. நம் உடலில் அசைவிருக்கும் வரை ஆசைகள் இருக்கும். ஆசைகள் இருந்தால் தான் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஆசைகள் தனக்கும் பிறருக்கும் துன்பம் தராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசைகளை விருப்பங்கள் என்றும் கூறுகிறோம்.

  Continue Reading »

  மனித சக்தியே, மகாசக்தி!

  உலகளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருவது மக்கள் தொகைப் பெருக்கம். இதன் காரணமாக வளர்ச்சியின் பலன்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. அளவான மக்கள் தொகை அச்சமற்றது, அவசியமானது. அளவு கடந்த மக்கள் தொகை பெருக்கம் ஆபத்தானது.

  Continue Reading »

  திறந்த உள்ளம்

  இலாப நோக்கமும் சுயநல நோக்கமும் ஒரு சார்பு நிலை அரசியல் சாயமும் கொண்ட பத்திரிக்கை உலகில் எந்த விதமான தேவைகளும் இன்றி உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பு கொடுத்து எங்களது இயக்க செய்திகளையும், நான் பெற்ற விருது குறித்து செய்தி வெளியிட்டமைக்கு எங்கள் நன்றி மலர்களை காணிக்கையாக்குகின்றோம்.

  Continue Reading »

  நானோ தொழில்நுட்பம்

  தன்னம்பிக்கை வாசகர்களுக்கு மீண்டும் என் வணக்கம்.

  நானோ தொழில்நுட்பம் பற்றிய அறிமுக உரையை படித்திருப்பீர்கள். தொடர் பற்றிய உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன். சரி.

  சென்ற வாரம் நாம் ஏன்? நானோ டெக்னாலஜி என்கிறோம். ஏன் பெம்டோ அல்லது அட்டோ டெக்னாலஜி என்று கூறக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கான விளக்கம் இதோ.

  Continue Reading »

  செய்வதும் – செய்யகூடாததும்

  அந்த நாட்டின் ராஜா ஒரு சட்டம் போட்டார். தினமும் காலையில் ராஜா எழுந்ததும் அவர் கண்ணில் யார் முதன் முதலில் படுகிறாரோ அவருக்கு ஒரு பரிசோ, அல்லது தண்டனையோ உண்டு.

  அன்றைய நாள் திருப்தியாக இருந்தால் முதன் முதலில் பார்த்தவருக்கு அன்று மாலை தங்கப்பரிசு கிடைக்கும்.

  Continue Reading »