– 2008 – June | தன்னம்பிக்கை

Home » 2008 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    முடியும் என்பதே மூச்சாகட்டும்

    ஒரு காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு என பல விதமான பறவைகள் எல்லாம் வாழ்ந்து வந்துச்சாம். இவையெல்லாம் ஒற்றுமையா ஒரு குடும்பம் மாதிரி இருந்த தாம். தினந்தோறும் மாலையில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் சிங்க ராஜா தலைமையில் கூடி, அன்றைய நிகழ்ச்சிகள் பேசி மகிழுமாம். அந்த ஆலமரத்து விழுதில் ஒரு சிலந்தி இருந்ததாம்… அந்த சிலந்தி கூட்டம் கூடியதும் கீழ வந்து,

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    இளைஞர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பேற்றுக்கொண்டவர்

    அய்யா இல.செ.க. அவர்களின் மனநிலை மனதில், ஆற்றவொண்ணா ஆதங்கம் ஒன்று. எப்போதும் குடிகொண்டிருந்தது. சமூக நலனில் அக்கறையுள்ள மனிதர் எவர்க்கும் உள்ள ஆதங்கம், அவ்வப்போது மேல் மனதுக்கு வந்துவிட்டால், இருப்புக் கொள்ளாமல் இருப்பார்; தன் நிலையிற் பிறழ்ந்து தவிப்பார்; அடுப்பு உலையில் மீனாய்ப் பதைப்பார்; அடுத்துள்ளவரிடம சொல்லிக் கொதிப்பார். அந்த ஆதங்கம் என்னவென்றால்,

    Continue Reading »

    வெற்றிப்படிகட்டுகள்

    ‘விடாமுயற்சி’ என்ற மந்திர வார்த்தையோடு சென்ற இதழில் தொடரை முடித்திருந்தேன். இல்லையா! இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரிக்காத தன்னம்பிக்கையாளர்களே இல்லை என்று சொல்லலாம். உலகத்திலிருக்கின்ற ஒவ்வொரு வெற்றியாளர்களும், மனதர்களும், ஒவ்வொரு அணுவுமே விடா முயற்சியால் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். முன்னேறவும் முடிகிறது.

    Continue Reading »

    வேரில் பழுத்த பலா

    கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதியுள்ள நாட்டுப்புறக் கதைகள் நூலிலிருந்து ஒரு சுவையான கதை!

    தூர பிரதேசத்திற்கு போயிருந்த ஒருவன், அங்கே ஒரு பணக்கார வீட்டில் பெண் கேட்டான். அவர்கள் ‘உனது சொத்து விவரம் என்ன?’ என்று கேட்டனர். அதற்கு அவன் ‘எனது வீட்டிற்குள்ளேயிருந்து சூரியோதயமும் பார்க்கலாம்’ என்றான். அஸ்தமனமும் பார்க்கலாம்’ என்றான். அதற்கு அவர்கள் அவ்வளவு பெரிய வீடா’ என்று மலைத்தனர்.

    Continue Reading »

    மனிதா! மனிதா!

    ஜோதிடமும் மனித வாழ்வும்!

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன். மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

    தெரிந்தோ தெரியாமலோ நம் பெரும் பாலானோர் வாழ்வில் அவரவர் ஜாதகங்களை வைத்து ஜோதிடர்கள் விளையாடி விடுகின்றனர். என் அலுவலகத்தில் பல வருடங்கட்கு முன் உடன் பணிபுரிந்த நண்பர் வீட்டில் ஜாதகம், திருமணப்பொருத்தம் பார்த்து ஒரு திருமணம் நடைபெற்றது. மிக அருமையாக ஜாதகம் பொருந்தியிருப்பதாய் கூறினர். ஜோடிப் பொருத்தமும் Made for each other என்று கூறும் வகையில் அமைந்து விட்டது.

    Continue Reading »

    முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்!

    ஒவ்வொரு மனிதனுக்கும் பால்யம், இளமை, முதுமை என்று மூன்று நிலைகள் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் பசி எடுத்தால், அல்லது உடம்புக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் அழுவதும், விளையாட்டு காட்டினால் சிரிப்பதுமாக இருக்கும். கவலையற்ற நிலை. இளம் வயதில் ஆடி, ஓடி, சம்பாதிக்கும் காலத்தில், சுறுசுறுப்பும், துடிதுடிப்புமாகக் காலம் ஓடிக் கொண்டிருக்கும்.

    Continue Reading »

    இவர் இங்கு இப்படி

    முடியும் என படித்தார்.
    +2 தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்….

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 3-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வில் 5 லட்சத்து 87 ஆயிரத்து, 994 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியிருந்தார்கள். இதில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றார்கள். மாணவர்களை விட மாணவிகள் 6 சதவிகிதமும் கூடுதலாக தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார்கள்.

    Continue Reading »

    ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்

    கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் இந்த வாழ்க்கை. அதில் எதிர்நீச்சல் போடுவதற்கு தேவைப்படும் ‘கை’-யைத் தான் ‘தன்னம்பிக்கை’ என்கிறோம். அது தனக்குள்ளேயே இருப்பது. அதனால்தான் அதற்கு ‘தன்’னம்பிக்கை’ என்று பெயர். ஒரு சொற்பொழிவைக் கேட்பதன் மூலமாகவோ ஒரு புத்தகத்தை, கட்டுரையை படிப்பதன் மூலமாகவோ, நம்மை ஊக்குவிக்கும் ஒருவருடனான சம்பாஷணையின் மூலமாகவோ, புதிய புதிய சிந்தனைக் கதவுகள் திறக்கின்றன. அதன் வாயிலாக ஏற்கனவே நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை நாமே தரிசிக்கிறோம்.

    Continue Reading »

    பண்புகளும் திறமைகளும்

    எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் சொன்னது அவ்வை. எழுத்து இல்லாத மொழிகள் கூட உலகில் உண்டு. ஆனால் எண்கள் இல்லாமல் கணிதமே இல்லை. கணிதம் இல்லையென்றால் வர்த்தகம் இல்லை; தொழில் இல்லை; பொருளாதாரம் இல்லை; ஏன், உலக இயக்கமே இல்லை.

    Continue Reading »

    திட்டமிட்டு செயலாற்று!

    ‘திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம்’ இது குடும்பத்தை வளப்படுத்தும் வாசகம் மட்டுமல்ல, வாழ்வை வளப்படுத்தும் வாசகமும் கூட ஒரு செயலுக்கான திட்டத்தை சரியாக தீட்டி முடித்தாலே பாதி செய்து முடிந்து விட்டதாகப் பொருள். வாழ்வு அதன் போக்கிலேயே அமைந்துவிட்டால், விரும்பும் வகையில் நடத்த திட்டத்தை அமைத்துக்கொள்ளும் முயற்சிக்கும் பெயர் திட்டமிடல்.

    Continue Reading »