Home » Articles » பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு

 
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு


admin
Author:

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக, பெண்கள் தொழிற்சாலைகளில் அடியெடுத்து வைத்தபோது எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. பெண்களின் பிரச்சினைகள் குறித்து, முதன் முதலில் கோரிக்கை சாசனம் ஒன்று 1866 இல் உலகத் தொழிலாளர்கள் சங்கத்தில் முன்மொழியப்பட்டது.

1870 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று நியூயார்க் நகரில், பஞ்சாலைகளில் 16 மணி நேரம் உழைத்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், வீதியிலிறங்கி 8 மணி வேலை கோரி, வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினர். அந்த தினத்தை சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக அனுசரிக்க 1910ல் கோபன் ஹேகனில் நடைபெற்ற சோஷலிஸ்ட் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், தலைசிறந்த போராளியான கிளாரா ஜெட்கின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.art-pennin1.jpg

1911இல் இந்த தினம் முதன்முறையாக வியன்னாவில் கொண்டாடப்பட்டது. 8மணி நேர வேலை என்ற பொருளாதார கோரிக்கையும் ஓட்டுரிமை என்ற அரசியல் கோரிக்கையும் முன் வைத்து உருவான உழைக்கும் பெண்கள் தினம்தான். காலப்போக்கில் உலகப் பெண்கள் தினமாக உருமாறி இன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பெண்களின் சாதனைகளை கொண்டாடும் தினமாக உள்ளது.

இறைவனின் அற்புதப் படைப்பு ஆணும் பெண்ணுக்கும், இருவருமே சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இதைத்தான் சிவம் பாதி, சக்தி பாதி என்று புராணங்கள் கூறுகின்றன. அரசியல் சாசனம் மகளிருக்கு சம உரிமை வழங்கியிருக்கிறது. “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாடினான் மகாகவி பாரதி.

உலகம் முழுதும் பல சமூக சீர்திருத்தவாதிகள் பெண்களுக்காகப் போராடினார். இந்தியாவில் ராசாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற பெருமக்கள குரல் கொடுத்தனர். தமிழகத்தில் தந்தை

இவற்றை முறைப்படுத்த ‘பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறிய உதவும் தொழில்நுட்பங்கள் சட்ட வரிசையில் முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் சட்டம்’ 1994 ஆம் ஆண்டும் ‘பாலினத்தை தெரிவு செய்தல் தடை சட்டம்’ 2002ம் ஆண்டிலும் கொண்டு வரப்பட்டது. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் இருக்கின்றனோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாத காரணததால் இது போன்ற பிரச்சனைகள் கிடையாது.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி பாலினத்தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தி கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும் என்றும், ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ள காட்டயப் படுத்தப்படுவாள், மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள் என்றும் கூறுகிறார்.

சமுதாயம் பெண்களை வீட்டில் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஒரு வேலைக்காரியாகவும், பிள்ளைகளைப் பெற்றுத் தரும் பதிவு செய்யப்பட்ட இயந்திரமாகவும் கருதுகின்றது பெண் என்பவள் காலங்காலமாக உடல் ரீதியாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். பெண்கள் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் ‘புத்திசாலிப் பெண்’ என்பதை விட ‘அழகான பெண்’ என்பதற்கே முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

‘பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்’ என பெண்ணின் பருவங்களை நமது இலக்கியங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த ஒவ்வொரு பருவத்திலும், மகளாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், தாயாய், பாட்டியாய் பல்வேறு நிலைகளில் சிறப்புகளைப் பெற்றாலும் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

குடும்ப வன்முறைச் சட்டம் 2005இல் அமலுக்கு வந்துள்ளது. மனைவியை அடித்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ சிறைத்தண்டனையுடன் ரூ. 20,000 வரை அபராதம் விதிக்கப்படும் இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை மனைவி மற்றும் வீட்டில் உள்ள மற்ற பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

நோபெல் பரிசு பெற்ற அமர்தியசென் “மாயமாகிப் போன பெண்கள்” (Missing Women) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். இச்சமுதாயம் பெணகள் மீது காட்டும் பாரபட்சம் மற்றும வன்முறைகளால் உலகெங்கிலும், சுமார் 10 கோடி பெண்கள் மறைந்து மாயமாகிப் போகிறார்களாம்! பாலியல் ரீதியான வன்முறைகளைத் தாண்டி, காதல் வயப்படும் பெண்கள் மீது பெற்றோர் தொடுக்கும் கௌரவக் கொலைகள்(Honour Killing), வடமாநில கிராமங்களில் விதவையாகவோ, தனியாகவோ வாழும் முதிய பெண்மணிகளின் சொத்தை அபகரிக்க, அவர்களை “சூரியக்காரி” என்று முத்திரை குத்திக் கொலை செய்வது (With Hunting), ஆகிய குற்றங்களும் கவலைக்குரியதாக உள்ளன.

‘ஆணும் பெண்ணும் சமம்’ என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். அது கூடாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களின் தரத்தை தாழ்த்தாமல் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே உண்மையான மேம்பாடாக இருக்கும்.

உலக எழுத்தறிவு அற்றவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாவர். நாட்டின் வளர்ச்சி தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள் எழுத்தறிவின்மை காரணமாக முழு ஆளுமை வளர்ச்சி பெறவில்லை. எனவே முதல் பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரு ஆண் கல்வி கற்றால் ஒருவர் கல்வி பெற்றதாக அர்த்தம். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றதாக பொருள்.

மக்கள் தொடர்பு சாதனங்கள் பாலியல் சாதனங்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகளை, படங்களைத் தவிர்த்தல் வேண்டும். பெண்கள் பற்றி ஒட்டுமொத்த சமூக மதிப்பு உயரும் வகையில் அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் வெளிப்பட வேண்டும். பாலியல் உணர்வுகளுக்குப் பதில் சமூக சிந்தனை மேலோங்க வேண்டும். வாழ்வில் ஒரு தாயாக, தாரமாக, சகோதரியாக, தோழியாக உள்ள பெண் சமுதாயத்திற்கு சம அந்தஸ்து வழங்கும்போதுதான் உண்மையான சுதந்திரத்தை, அங்கீகாரத்தை பெற முடியும்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்ச மனப்பான்மையை ஒழிப்பதற்கும், பெண் குழந்தையின் முன்னேற்றத்திற்கும் இடையூறாக உள்ள தடைகளை தகர்க்கும் நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும். பெண்களின் மேம்பாடு சமுதாய மேம்பாடு. சமுதாய மேம்பாடு நாட்டின் மேம்பாடு. நாட்டின் மேம்பாடு நம் அனைவரின் மேம்பாடு. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பெண்ண்டிமையைச் சாடி, ‘பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமைற்றிடும் காணீர்’ என வீரமுழக்கமிட்டு பெண்கல்வியின் முக்கியத்துவத்தை போற்றிய மகாகவி பாரதியின் வரிகளை நினைவில் நிறுத்தி செயல்பட்டால் பாரதி கூறியது போலவே ‘நிமிரந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிமிர்ந்த ஞானச் செருக்கோடும்’ பெண்கள் உலா வரக் காணலாம்.

தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நாட்டு நலப்பணித்திட்டம் (NSS – National Service Scheme) இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக பணியாற்றும் ஒரே ஒரு பல்கலைக் கழகத்தை தேர்ந்தெடுத்து அதன் ஒருங்கிணைப்பாளருக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2005-2006ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மாநில விருது (சிறந்த NSS ஒருங்கிணைப்பாளர் விருது) பாரதியார் பலகலைக்கழக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய இக்கட்டுரையின் ஆசிரியர் திரு. பி.கே. மனோகரன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. விருதினைப் பெறும் அவரை தன்னம்பிக்கை பேரன்புடன் வாழ்த்துகிறது.

– மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்

Tags: ,

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!