Home » Cover Story » நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்

 
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்


ராசிபுரம் S.R.V பள்ளி இயக்குநர்கள்
Author:

நான் செல்லும் ஆலயம் பள்ளிக்கூடம். அங்கு படிக்கும் குழந்தைகளே நான் வணங்கும் தெய்வங்கள்” என்பார் நேருஜி.

விசாலமான எண்ணங்கொண்ட சாதிக்கத் தூண்டும் நல்ல ஆசிரியர்களாக தங்கள் பணியை இராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கிய நண்பர்கள் ஐந்து பேரின் ஆலமர விருட்சம் தான் இராசிபுரம் S.R.V. மேல்நிலைப் பள்ளிகள்.

இப்பள்ளியின் இயக்குநர்களான திரு. சாமிநாதன். திரு. இராமசாமி, திரு. செல்வராஜன், திரு. குமரவேல், திரு. துரைசாமி ஆகிய ஐவரும் ஒன்றாக இணைந்து “நல்ல நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்” என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து முதுநிலை பட்டம் வரை நன்றாக படித்து இடைவிடாத நல்ல உழைப்பின் மூலமும் உயர்ந்த நட்பின் மூலமும் சாதித்திருக்கிற சாதனையாளர்கள் இவர்கள்.

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 40%க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளை வருடந்தோறும் உருவாக்கி வருகின்ற சிறப்பிற்குரியவர்கள் இவர்கள்.

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவரைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்க்ச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை என்றார் சுவாமி விவேகானந்தர். அக்கல்வியினை தருவதில் உறுதி பூண்டவர்களாக இருந்து செயல்பட்டு வருகின்றவர்கள்.

மூன்று கூரையில் பனிரெண்டு வகுப்புகளுடன் ஆரம்பித்து இன்று ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 20 ஏக்கர் அளவிலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஏக்கர் அளவிலும் உயர்த்திய சிறப்பிற்குரியவர்கள்.

கடந்த கல்வி ஆண்டில மட்டும் மாநிலத்தில் மூன்றாவது இடமும், நான்கு பாடங்களில் மாநிலத்தில் முதலிடமும் பிடித்த மாணவர்களை உருவாக்கியும் 241 மாணவ மாணவிகளை மருத்துவத்திற்கும், 294 மாணவ, மாணவிகளை பொறியியல் படிப்பிற்கும் செல்லக் காரணமாகவும் இருந்தவர்கள்.

மாநில அளவில் மருத்துவம், பொறியியல் நுழைத்தேர்வு, தேர்வில் முதலிடமும், மாநில அளவில் S.S.L.C யில் முதலிடமும், மூன்றாமிடமும் மாணவர்கள் பிடிக்க கல்வியைச் சிறப்பாக வழங்கி வரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

செய்யும் பணியைத் தவமாக செய்து நிறைய வெற்றி மாணவ, மாணவிகளை உருவாக்கி வருகின்றவர்களாக இருக்கும் இராசிபுரம் S.R.V. மேல்நிலைப் பள்ளிகளின் இயக்குநர்களோடு இனி நாம்…

நட்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறீர்கள்? நட்பு பற்றி உங்கள் கருத்து ?

“உலகத்திற்கு நீ அதிபதியாக இருந்தாலும் உனக்கு ஒரு நல்ல நண்பன் இல்லையென்றால் நீ ஏழை” என்று சொல்லியிருக்கிறார்கள். நட்பு ஒவ்வொருவருக்கும் அவசியம். நல்ல நண்பர்கள் சேர்க்கை வாழ்வில் மிகப்பெரிய மாறுதல்களை கொண்டு வந்து சேர்க்கும் என்பது உண்மை! வேறு வேறு ஊரில் பிறந்து வேறு வேறு படிப்புகள் படித்து ஒரே இடத்தில் பணியில் அமர்ந்த போது உண்டான நட்பால உருவாக்கிய S.R.V. மேல் நிலைப்பள்ளிகள் இன்றைக்கு இந்தளவு வளர்ந்திருக்கிறது என்றால் நட்பின் ஆழம் தான் காரணம். ஐவர்கள் என்றுதான் பேர். ஆனால் எந்தச் சூழலிலும் தனித்தனி எண்ணங்களோடு நாங்கள் செயல்பட்டதில்லை. ஒருமித்த கருத்தோடு ஒற்றுமையாக சரிநிகர் சமமாக இருந்து செயல்பட்டு வருகிறோம். ஆரோக்கியமான நட்பு ஒருவருக்கு ஆயுள் வரை இருந்தால் அவரால் நிச்சயம் சாதித்து விட முடியும். ஆக நல்ல நட்புகள் அவசியம். இல்லையென்றால் ஏற்படுத்திக்கொள்ளுங்கள் வாழ்க்கை மேம்படும்.

2006-2007ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியின் சாதிப்புகள் குறித்துச் சொல்லுங்களேன்?

S.தக்சின் நிலோபர் (1184/1200) மாநிலத்தில் மூன்றாமிடமும், 4 பாடங்களில் மாநிலத்தில் முதலிடமும் பிடித்தார். J. கீர்த்தனா, M. இளவரசன் (1179/2000) மாவட்டத்தில் முதலிடமும், R. ஸ்ரீதர் கோபால் 2 பாடங்களில் 200/200ம், P. ப்ரவீன் இரண்டாமிடமும் பிடித்தார்கள்.

மேலும்,

1180க்கு மேல் – 3 பேர், 1175க்கு மேல் – 11 பேர், 1170க்கு மேல் – 23 பேர், 1160க்கு மேல் – 70 பேர், 1150க்கு மேல் 152 பேர், 1140க்கு மேல் -233 பேர், 1130க்கு மேல் – 596பேர், 1050க்கு மேல் -917பேர் 1000க்கு மேல் -1129 பேர்.

200/200 மதிப்பெண் பெற்றவர்கள் கணிதம் 124, வேதியியல் 26, இயற்பியல் 25, உயிரியல் 23 என மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். R.கௌதம் T. பாலமுருகன் L. ராஜா போன்ற மாணவர்கள் 3 பாடங்களில் 200க்கு 200 பெற்றிருக்கிறார்கள்.

நிறைய சாதனை மாணவ, மாணவிகளை உருவாக்கியிருக்கும் நீங்கள் இந்த கல்வியாண்டில் சாதிக்கப்போகும் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களாக சொல்ல விரும்புவது?

 • அவசியமற்ற அரட்டை, டெலிபோன் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
 • தேர்வுக்குப் போகும்போது நேரத்தை சரியாக கடைபிடித்து தேவையில்லாத பரப்பரப்பிற்கு இடம் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 • கடைசி நிமிடம் வரை பாடப் புத்தகத்தை புரட்டிக் கொண்டே இருக்காமல் தேர்வுக்கு முன்பு ரிலாக்ஸாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
 • படிப்பைப் பற்றிய அக்கறையே அதிகம் இருத்தல் வேண்டும் கவலை கூடாது.
 • எல்லாப்பாடங்களையும் நன்றாக பல தடவைகளாகவது ரிவிஷன் செய்ய வேண்டும்.
 • விடுமுறை தினங்கள நிறைய இருக்கிறதே என மெத்தனமாய் இருத்தல் கூடாது.
 • பொறுமையோடும் மன உறுதியோடும் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உழைப்புக்குத் தகுந்த பலன் நிச்சயம் கிடைக்கும்.
 • சின்னச் சின்னச் சுகங்களை கொஞ்ச நாளைக்கு தியாகம் செய்யுங்கள்.
 • கடினமான பாடங்களை, முக்கியமான பாடங்களை எழுதி எழுதிப் பாருங்கள்.
 • எந்தப் பாடத்தையும் முக்கியமில்லை என்று ஒதுக்கிவிட்டு படிக்காதீர்கள்.
 • நீங்கள் படித்ததை, பிறருக்கும் சொல்லிக்கொடுப்பதன் மூலம் மனதில் ஆழமாகவும் தெளிவாகவும் , பதிவாகக் கூடும்.

தங்கள் பள்ளி உருவான வரலாறு சுவாரசயமானது என அறிந்தோம். அது பற்றிச் சொல்லுங்களேன்?

இராசிபுரம் அண்ணாசாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் நாங்கள், “ஆசிரியப்பணி என்பது மதிப்புள்ள பணி”. இந்தப் பணியில் இருக்கிற நாம் நல்ல திறமையான மாணவர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் அனைவருமே அங்கு பணிபுரிந்தோம்.

காலையில் நேரத்திலேயே பள்ளிக்கு வருகை புரிந்து தனி வகுப்புகள் எடுத்து மாணவர்களை தேர்வில் அதிகம் வெற்றிப்பெறச் செய்ததுடன் நிறைய மதிப்பெண்கள எடுக்க வைத்தோம். நாங்கள் பணிபுரிந்த அரசு பள்ளியிலிருந்து மாணவர்களை அதிகம் மருத்துவத்திற்கும், பொறியியல் படிப்பிற்கும் தேர்வு பெறும் அளவு உருவாக்கினோம். இருக்கும் இடத்திலேயே சிறப்புடன் பணியாற்றி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோளாக இருந்தது. தனியாக பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் ஆரம்பத்தில் எங்களுக்குள் எழவே இல்லை. காலம் எங்களை பிரித்தது. ஒவ்வொருவரும் தனித்தனி அரசு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டோம். இடம் மாறுதல் தந்த மாற்றம் தான் SRV பள்ளி ஆரம்பிக்க காரணமாகியது.

ஆம்! நல்ல நட்புக்குள் பிரிவு கூடவே கூடாது. நல்ல நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் தான் கூட வேண்டும். அதற்கான வழி என்னவென்று ஆராய்ந்த போது, மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இன்டர்வியூ முறைமாற்றப்பட்டு, “Entrance” முறைகொண்டு வரப்பட்டது. நாம் எல்லோருமாக ஒன்று சேர்ந்து பயிற்சி அளித்தால் நிறைய மாணவர்களை மருத்துவத்திறகும், பொறியியலுக்கும் கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்குள் எழுந்தது. அப்போது உருவானதுதான் SRV கோட்சிங் சென்டர், SRV இம்ப்ரூவ்மெண்ட் சென்டர்.

1984ல் 13 மாணவர்களுடன் SRV கோட்சிங் சென்டரை’ உருவாக்கினோம். 13 என்கிற எண் அதிர்ஷ்டமில்லாத்து. வெற்றி தராதது என்பதை எல்லாம் தூரத் தூக்கி வீசி நம்பிக்கையோடு உழைப்பை முன் வைத்தோம். இன்று நாளும் நாளும் முன்னோக்கி வளர்ந்து வருகிறோம்.

ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நல்ல தேர்ச்சி விகிதத்தையும், மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் ஏதேனும் ஓர் இடத்தையும் தவறாது பெற்றிடுமளவு மாணவ, மாணவிகளை உருவாக்கி வருகிறீர்களே, இது எப்படி சாத்தியமாகிறது?

மக்களை பொருள் நிறைந்தவர்களாக ஆக்குவதை விட அறிவு நிறைந்தவர்களாக ஆக்குவதே பெற்றோர்களின் கடமை” என்று சொல்வார்கள். அந்தப் பெற்றோர்கள் எங்களைத் தேடி வந்து நம்பிக்கையுடன் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நாங்கள் எப்படி பொய்யாக்கிட முடியும்.

ஒவ்வொரு மாணவ, மாணவிகளையும் அவர்கள் படிக்கும் பாடத்தில் திறமைசாலியாக உருவாக்கிட முதலில் ஆசிரியர்கள் – மாணவர்கள் என்கிற இடைவெளியை மறக்கச் செய்து, ‘தங்கள் பிள்ளைகள்’ என்கிற உணர்வை ஆசிரியருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இடையே முதலில் ஏற்படுத்துவோம்.

வழக்கமான பள்ளி பாட நேரங்களுடன் காலையில் ஒரு மணிநேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் தனி வகுப்புகளை தினந்தோறும் நடத்துகிறோம். இந்த தனி வகுப்பில் அன்றைக்கு படித்த பாடத்தில் இருந்து எழுதி, எழுதி பார்க்கும் போதுதான் மனதில் அது நன்றாகப் பதியும் என்பதால் தனிவகுப்புகளில் எழுத்துத் தேர்வு என்பது தவறாமல் கடைப்படிக்கப்பட்டு வருகிறது.

குழு விவாதம் அன்றாடம் நடக்கும். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஒவ்வொரு மாணவ, மாணவியும் எந்தெந்த பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து அந்தப் பாடப்பிரிவு சார்ந்த ஆசிரியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று அந்த மாணவ மாணவிகளின் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு தேர்வுத் தாள்களையும் ஆராய்ந்து மதிப்பெண் குறைந்து போனதற்கான காரணங்களை கண்டறிந்து தவறுகளைச் சரிசெய்து அந்த மாணவ மாணவிகளுக்குள் உள்ள தனித் திறமைகளை வெளிக் கொணர்கிறோம். ஒவ்வொரு பாடத்திற்கு தனித்தேர்வுகள் வைத்து முழுமையாக ஒரு பாடத்தில் உள்ள அத்தனை கேள்விகளுக்குரிய பதில்களையும் படிக்கச் செய்துவிடுகிறோம்.

நிறைய தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்களையும், இந்தப் பள்ளியில் சாதித்தவர்களையும், பிற சாதிப்பாளரகளையும் மேற்கோள் காட்டி சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறோம்.

சுகாதாரமான இருப்பிட வசதி; சுத்தமான, ஆரோக்கியமான உணவு, உடை; மன அமைதிக்கு பள்ளியின் உள்ளேயே ஆலயம் என எல்லா வகையிலும் மாணவர்களை திருப்தி படுத்தும் விதமாக பள்ளியை உருவாக்கியிருக்கிறோம்.

உங்களுக்குள்ளே நிறைய திறமை இருக்கிறது. அதை சரியாக வெளிப்படுத்தி வெற்றிபெற உங்களால் முடியும். வெளிப்படுத்துங்கள். சாதிக்கலாம் என்று தான் கல்வியைப் போதிக்கிறோம். சரியென்று நம்பிக்கையோடு படிக்கிறார்கள். எல்லோருமே வெற்றி பெறுகிறார்கள். எங்களுக்கு அவர்களால் நல்ல பெயர் கிடைக்கிறது. பெருமைப்படுகிறோம்.

பேராற்றல் படைத்த ஆசிரியப் பெருமக்களால் தான் பேராற்றல் கொண்ட மாணவ, மாணவியரை உருவாக்கிட முடியும். அந்தப் பேராற்றல் படைத்த ஆசிரியப் பெருமக்களை நீங்கள் எப்படி தயார்படுத்துகிறீர்கள்?

தமிழகத்தில் உள்ள அனைத்து B.Ed, கல்லூரிகளிலிருந்தும் திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான அளவு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து பள்ளியில் பணியில் அமர்த்துகிறோம்.

எங்கள் பள்ளியில் மேல்நிலைக் கல்வியைப் பொருத்தவரை ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறைந்தது இருபத்தைந்து ஆசிரியர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் “ஓரியண்டேஷன் கோச்சிங்” என்று சொல்லக்கூடிய கோச்சிங் உண்டு.

‘Subject’ ஆசிரியராக இருந்தால் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி எடுப்பது, எதுபோன்று எடுத்தால் உபயோகம் தரும், எந்த மாதிரியான பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவது, ஒரு பாடத்தை என்ன வேகத்தில் நடத்துவது இப்படி நிறையச் சொல்லித் தருவதுண்டு. மேலும் ஒரு பாடத்தை ஆறு பிரிவுகளாக (6 Units) பிரிக்கச் சொல்வோம்.

அதில் ஒரு பிரிவுக்கு (1 Unit) 26 மணிநேரம் ஒதுக்கி பாடத்தை நடத்தி தேர்வு வைக்க வேண்டும். தேர்வு வரும்போது ஓய்வாக இருக்கும் ஆசிரியர்கள் அடுத்த பிரிவு பாடத்தை மாணவர்களுக்கு நடத்த தயார்படுத்திக் கொள்ளவேண்டும. இப்படி ஒவ்வொரு பிரிவாக பாடம் நடத்தப்படவேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

முக்கியமாக எங்கள் பள்ளியில் 1 வருட அனுபவமுள்ள, 5 வருட அனுபவமுள்ள, புதிதாக வந்த ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகளாக வைத்துக்கொண்டு முதன்மை நிலை ஆசிரியர்களை முதலில் பாடம் எடுக்கச் செய்வோம். அவர்கள் நடத்துகிற பாடத்தை அடுத்தடுத்து நிலையில் உள்ளவர்கள் கவனிக்க வேண்டும். பின்பு அவர்கள் நடத்தும்போது மற்ற நிலையில் உள்ளவர்கள் முதன்மை நிலையில் உள்ளவர்கள் என எல்லா நிலையிலும் உள்ளவர்கள் கவனிக்க வேண்டும். இதில் யார் சரிவர எடுத்திருக்கிறார்கள், யார் எடுக்கவில்லை என்பதை அறிந்து அவர்களை ஊக்கப் படுத்துவோம். இப்படி எல்லோரும் ஒருங்கிணைந்து ஆற்றலை சரிசமமாக வெளிப்படுத்தி பாடத்தை போதிக்கிற முறை எங்கள் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் எங்களுக்கு கிடைத்த வரங்கள்! இந்நேரத்தில் அவர்களை வாழ்த்திப் பெருமிதம் அடைகிறோம். இந்தப் பள்ளியின் நிர்வாகிகளான நாங்கள் ஐந்து பேரும் வந்தோம் போனோம் என்று எப்போதும் இருந்ததே இல்லை. காலையில் இருந்து மாலை முழுவதும் பள்ளியின் பணியில் இருந்து கொண்டுதான் இருப்போம். ஆசிரியரோடு ஆசிரியராக நாங்களும் பாடம் எடுப்போம். அவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய பெற்றிருக்கிறோம்.

படிப்பில் சாதித்த வைக்கின்ற தாங்கள் விளையாட்டிலும் சாதிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கிறீர்களா?

பஞ்ச்வாலிட்டி, டிசிப்ளின், எய்ம் இந்த மூன்றும் நிரம்பப் பெற்ற மாணவர்கள்தான் எங்கள் பள்ளிக்கு வருகிறார்கள். திட்டமிட்ட இலக்கோடு படிக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். அதேபோல விளையாட்டுத் துறையிலும் நல்ல ஆற்றல் உள்ளவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். எங்கள் பள்ளியில் விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை தடகளம், கராத்தே, செஸ் போன்ற போட்டிகளில் ஜோனல், இன்டர் நேஷனல் வரை சென்றவர்கள் உள்ளார்கள். 11 ம் வகுப்பில் விளையாட்டுத்துறையில் செலுத்துகிற மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு வருகிறபொழுது அவர்களே படிப்பில் தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

-தொடரும்.

கிருத்திகா சந்திரசேகர்

நான் 1996-98 ஆம் ஆண்டுகளில் SRV பள்ளியில் பயின்று 1200க்கு 1167 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். கோவை மருத்துவக் கல்லூரியில் MBBS முடித்தேன். தற்போது அகில இந்திய அளவில் நடைபெற்ற முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் 15 ஆம் இடத்தை பெற்று மும்பை லோக்மான்ய திலக் மருத்துவக் கல்லூரியில் MDRD படித்துக் கொண்டுள்ளேன்.

மாவட்டத்தில் முதல் இடம் பெற்றமைக்கு தமிழக அரசு எனது மேற்படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது சிறப்பாகும். இந்நிலை பெற எனக்கு உதவிய SRV பள்ளியையும் அதன் இயக்குநர்களையும் எனது வாழ்நாளில் மறக்க இயலாது.

K. சதீஸ், சேலம்

நான் 1992இல் SRV Entrance Coaching Classல் படித்தேன். அதன் பின் B.E. (Mechanical) மற்றும் MBA முடித்தேன். இப்போது Chennai ல் AM Soft என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் வாழ்வில் SRV மறக்க முடியாத ஒன்று. உலகில் ஒவ்வொரு மூலையிலும் SRV மாணவர்கள் உள்ளதை இப்போதும் நான் பார்க்கிறேன். அதிலும் முக்கியமாக பொறியியல் வல்லுநர்களும், மருத்துவர்களும் அதிகம். தெளிவாக கற்பித்தல், சிறப்பான அணுகுமுறை, மாணவர்களுக்கு தேவையானவற்றை உரைத்தல், சினேகத் தன்மை, நேரம் பாகுபாடின்றி உழைத்தல் இவை அனைத்துக்கும் மூலகாரணம் SRV.

G. ஆனந்த் (Attur)

நான் +2 SRV மாணவர் (2002-2004). நான் PSG பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு இயந்திரவியல் மாணவன். எனது தந்தை விவசாயி. SRV பள்ளி என் வாழ்வின் திருப்புமுனை என்றே கூறுவேன். அங்கு பணி ஆற்றும் ஆசிரியர்கள் எனக்கு அளித்த ஊக்கமும் பயிற்சியும் தான் என்னை உருப்படுத்தியவை. ஆசிரியர்கள், இரவு வேலையில் கூட எங்களுடன் விடுதியில் இருந்து கற்று கொடுத்தது இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை. நான் அங்கு பெற்ற பயிற்சி மூலம் +2 இறுதி தேர்வில் நல்ல மதிப்பெணகள் பெற்று தமிழகத்தில் சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்தது. என் கருத்து என்னவென்றால் உலகில் மிகச் சிறந்த மருத்துவராகவோ, பொறியியல் வல்லுநர் ஆகவோ மற்றும பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் SRVயை படிகற்களாக உபயோகித்துக்கொள்ள வேண்டும். தற்போது எனக்கு L&T என்ற பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

Dr.S. திவ்யா, மருத்துவ அலுவலர்

நான் SRV மேல்நிலைப்பள்ளியில் படித்து 1999 ஆண்டு +2 பொது தேர்வில் 1157 மதிப்பெண்கள் (மூன்று பாடங்களில் 200 பெற்று நாமக்கல் மாவட்டத்தில் முதலாவதாக தேர்வு பெற்றேன். பின்பு M.B.B.S மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேவு (அதற்கான பயிற்சியையும் SRVல் வழங்கினர்.) வழியாக தேர்ச்சி பெற்று அரசு சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்து தற்போது குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணிபுரிகின்றேன். மேலும் தற்போதைய SRV பள்ளியின் மருத்துவ ஆலோசகராகவும் உள்ளேன்.

என்னுடைய கணவர் Dr. R. வசந்தகீதன் M.D., அவர்களும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் தற்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், மயக்கவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகின்றார். வெற்றிகளைத் தேடித்தரும் பள்ளி எங்கள் SRV பள்ளியாகும். நன்றி!

சிவகுமார், Ireland, Pfize Company

நான் 1993 ல் SRV Entrance Coaching Centreல் படித்தேன். அதன் பின் B.E(Chemical) முடித்து Irelan ல் ஒரு பெரிய கம்பெனியில் Plant Oeratoion Engineer ஆக உள்ளேன். SRVயின் முக்கியத் துவத்தை உணர்ந்ததால் என் தங்கையையும் அங்கு படிக்க வைத்தேன் . அவள் Medical முடித்து இப்போது டில்லி அருகே உள்ள Aligar universityல் MD (DGO) படித்து வருகிறாள். எங்கள் குடும்பமே SRVயை மறக்க முடியாது. என்னை பொறுத்தவரை அவர்கள் ஆசிரியர்களாக இருப்பது அவர்கள் வெற்றிக்கு காரணம் மற்றும் எங்கள் வெற்றிக்கும் அதுவே காரணம்.

V.S. சரவண பாஸ்கர் ராஜா…

நான் எனது மேல்நிலைப் படிப்பை இராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் 1998-2000 ஆம் ஆண்டில் படித்தேன்.
பொதுத்தேர்வில் 1200க்கு 1121 மதிப்பெண் பெற்று P.S.G College of Engineering ல் B.E. (ECE) பிரிவில் எனது கல்லூரிப் படிப்பை முடித்து நான் தற்சமயம் சென்னையில் உள்ள Infosys Technology Ltd. என்ற அலுவலகத்தில் System Analyst ஆகப் பணியாற்றி வருகிறேன்.

நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்ததற்குக் காரணம் எனது பள்ளிப்படிப்புச் சிறந்த முறையில் அமைந்ததே ஆகும். நான் எஸ்.ஆர்.வி. பள்ளியில் படிக்கும்போது எனது விடா முயற்சியும், கடின உழைப்பும் ஆசிரியர்களின் அன்பான கல்வி பயிற்றுவிக்கும் முறையும் பள்ளியின் அனைத்து சூழ்நிலைகளும் எனக்கு ஒரு அருமையான கல்வியை அளித்தது.

அங்குள்ள அன்பான இயக்குனர் பெரு மக்களும், தலைமை ஆசிரியர்களும் மற்றும் ஆசிரிய பெருமக்களும் அன்பான முறையில் மாணவர்களை வழிநடத்தி ஒரு சிறந்த கல்வியைக் கற்பித்ததோடு எங்களுக்கு அன்பான அறிவுரைகளை வழங்கி ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கையில் பணிவும், மரியாதையும் போதித்தது எங்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைச் செய்தார்கள்.

கனிமொழி

நான் தற்பொழுது சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு IT பயின்று வருகிறேன். நான் இராசிபுரம் SRV பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் 1115/1200 மதிப்பெண்களை பெற்றேன். எனது பெற்றோர்களும் எனது பள்ளியின் இயக்குநர்களும் கொடுத்த ஊக்கத்தினால் தான் என்னால் என் குறிக்கோளை அடைய முடிந்தது. எந்த ஒரு செயலையும் திட்டமிடுதல் திட்டமிட்டதை செயல்படுத்துதல் மிகவும் முக்கியம். நாம் ஒரு குறிக்கோளை நிர்ணயித்துவிட்டால் ஒருமனதாக அதை அடைய முயற்சிக்கவேண்டும். நாம் நம் முயற்சியில் தோல்வியடைவதில் தவறில்லை. ஆனால் முயற்சிக்காமலே இருப்பதுதான் தவறு. அன்பான ஆசிரியர்கள், அமைதியான பள்ளிசூழல் என பல வகையிலும் SRV எனக்கு உறுதுணையாக அமைந்தது.

M. இளவரசன்

நான் எனது பள்ளிப்படிப்பை இராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2005-2007 ஆம் ஆண்டில், +2 பொதுத்தேர்வில் 1200க்கு 1179 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றேன். இவ்வாறு மதிப்பெண் பெற்று நான் சாதனை படைக்கக் காரணமாக அமைந்து என்னுடைய பள்ளி வாழ்க்கையும் அங்கு அமைந்துள்ள கல்வி முறையும், கற்பிக்கும் முறையுமே ஆகும். பள்ளியின் இயக்குனர்களின் ஆதரவும், தலைமை ஆசிரியரின் கண்டிப்பும், ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறையுமே என்னுடைய சாதனைக்கு காரணமாக இருந்தது.

மேலும் அன்பான அறிவுரைகளை வழங்கி வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறவேண்டும் என்பதை எடுத்துக்கூறி மாணவர்களை நேர்மையாகவும், மரியாதையாகவும் வாழக் கற்றுத் தந்தனர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!