Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

பிப்ரவரி இதழ் படித்தேன். முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை “தன்னம்பிக்கை” தகவல்கள், கட்டுரைகள் அற்புதம், பாராட்டுக்கள். நிறுவனர் பக்கத்தில் “நாவடக்கம் ஒரு நாகரிகம்” என்ற தலைப்பில் டாக்டர். இல.செ. கந்தசாமி அவர்களது கருத்துக்கள் பயனுள்ளவை. பேச்சுத்திறன் எப்படி இருக்க வேண்டும் எனவும், எப்படி பேசக்கூடாது என்றும் அருமையாக விளக்கினார். பயனுள்ள கட்டுரை.

காவல்துறையில் பல சாதனைகள் புரிந்துவரும் முனைவர். செ.சைலேந்திரபாபு அவர்களது பேட்டி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். மன உறுதியை படித்தவர்களுக்கு கொடுக்கும்.

பேரா. பி.கே. மனோகரன் அவர்களது கட்டுரையில் அறிவியல் கண்டுபிடிப்பில் நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். அறிவியல் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஜப்பானின் முன்னேற்றம் இதைத்தான் உணர்த்துகிறது என சிறப்பாக கூறினார். வாழ்த்துக்கள்.
-கோவைப்புதூர் கண்ணன்

தொடர்ந்து வெற்றிப்பாதையில் எங்களை வழிநடத்தி செல்லும் “தன்னம்பிக்கை” இதழுக்கு நிகர் வேறெதுவும் தொடர்ந்து நலமானதொரு பாதையில் பயணிக்கும் ஆசிரியர்களின் உழைப்பு மிகவும் பாராட்டுதற்குரியது. மேலும் தங்கள் பெற்ற அனுபவங்களையும், அறியாத கருத்துக்களையும் எங்களுக்கு வழங்கி ஊக்குவித்து உள்ளனர்.
-பொ. சிவகுமார், வடக்கு சுள்ளிபாளையம்

பிப்ரவரி 2008 இதழில் சிறப்புக் கட்டுரையாக, காவல்துறை சார்ந்த உயர் அலுவலர் முனைவர். செ. சைலேந்திரபாபு அவர்களின் பேட்டி கண்டேன். மிக அருமை. மருத்துவப் பணியும், காவல் பணியும் ஒன்று சார்ந்தவை எனக் குறிப்பிட்ட விதம் அற்புதம்.
-K. பெருமாள், உடுமலைப்பேட்டை

ஒரு தீய செயலை நடைபெறாமல் தடுக்க… அவர்கள் வழியிலேயே சென்று (தடுத்து) அழைப்பு விடுக்கிறார்… தேவமணி அவர்கள் வாராய்… நீ வாராய்… என்று….! ஆடுகிற மாட்டை ஆடி, பாடுகிற மாட்டை பாடி பால் கறந்திருக்கிறார்…! ஆனால் ஆரோக்கியமாக …இனி… “வாராய்…நீ …வாராய்….” தொடரலாமே!!
-வேல் முத்தரசு, ஒண்டிப்புதூர், கோவை

முனைவர். செ. சைலேந்திரபாபு -திட்டமிடுதல் – செயல்படுதல் -கடமை உணர்வு – மனித நேயம் இவை பற்றிக் கூறியது சிறப்பு. இதன்படி எல்லோரும் செயல்பட்டால் பல குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்.

First Impression is the best impression என்ற வகையில் சிந்தித்து தேர்வு எழுதினால் தேர்ச்சி நிச்சயம் உண்டு. தேர்வுகள் இனி தேர்ச்சிகளே கட்டுரை அருமை.

காது கேளாதோருக்குரிய சிகச்சை பற்றி விளக்கியது தேவையான ஒன்று. சிந்தித்து செயல்பட வேண்டும்.
-இரா. தியாகராசன், ஆர்.கே. கார்டன், இலால்குடி

நிறுவனர் பக்கத்தில் வரும் அய்யா டாக்டர் இல.செ.க அவர்களின் “நாவடக்கம் ஒரு நாகரிகம்” பகுதியில் வந்த நாவடக்கத்துடன் பேசினால் அனைத்தையும் பெறமுடியும், ஆணவ பேச்சு அழிவை தரும்” என்ற கருத்து மிகவும் அருமை.

திருமுருகன் அவர்களின் சீனியர் சிட்டிசன் என்ற குறும்தொடரில் வந்த “வயதானவர்களாக இருந்தாலும் அடுத்தவர்களின் மனதின் எண்ணங்களை மதித்துப் போற்ற வேண்டும் என்ற கருத்து அருமை.

முனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களின் துணிவுடன் போராடு வெற்றி வரும் என்ற நேர்முகத்தில் வந்த, வெற்றியடைய எது தேவை மற்றும் அவரின் வாழ்க்கைக் குறிப்பு, மற்றும் எல்லோருக்கும் “கடமையுணர்வும், மனித நேயமும்” மிகவும் அவசியம் என எல்லா கருத்துக்களுமே நன்றாக இருந்தது.

க. தேவமணி அவர்களின் வாராய்! நீ வாராய், தொடரில் தற்கொலைக்கு முயலும் பல மனிதர்களின் எண்ண போராட்டங்களையும், அவைகளை கலைத்து எறிந்துவிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்ம என்ற கருத்து 100% உண்மை.

S.M. பன்னீர் செல்வம் அவர்களின் மனிதா! மனிதா! தொடர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

சி.ஆர். செலின் அவர்களின் “சக்ஸ்ஸ் உங்கள் சாய்ஸ்” வெற்றிக்கு வழிவகுக்கும் உன்னத தொடராக முடிந்திருக்கிறது.

மற்றும் கடந்த இதழில் வந்த சீக்கிரம் தோற்றுவிடுங்கள், நிறுவனர் நினைவுகள், அறிவியல்தொடர், வேரில் பழுத்த பலா, உங்கள் கவனத்திற்கு, திருமதி, ம. யோகதாவின் மனதின் மொழி, நல்ல தூக்கம் வேண்டுமா, கேள்வி – பதில் பகுதி, மாணவர்களுக்கான தேர்வுகள் இனி தேர்ச்சிகளே தொடர், திரு. தங்கவேலு மாரிமுத்து அவர்களின் ஆமையும் முயலும் என அனைத்துக்களும் அருமையிலும் அருமை.
-காளிதாஸ், காசிபாளையம், கோபி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!