Home » Articles » வியாபாரத்தின் ஒரே முதலாளி

 
வியாபாரத்தின் ஒரே முதலாளி


மணவழகன் ஜே
Author:

உற்பத்தியாகும் ஒவ்வொரு பொருளும் பல மாற்றங்களுக்கு உட்டுவது, பல வசதிகளை அதில் மேம்படுத்துவது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக பல மில்லியன் கணக்கான டாலர்களை செலவழிப்பது, புதிய, புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவது அனைத்தும் இவருக்காக, உங்கள் வியாபாரத்தின் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பவர் இவர். இவரை “கஸ்டமர்” என்கிறார்கள். ஆனால் இவர் நமது பிஸினஸின் முதலாளி என்கிறார், வால்மார்ட் வியாபாரத்தின் சி.இ.ஓ.

ஒரு இலட்ச ரூபாய் கார் இவரை நம்பித்தான் அறிமுகமாகி உள்ளது.

உலகம் ஒரு கிராம்மாகிவிட்டது. வேண்டியது மிக்க் குறைந்த நேரத்திலோ அல்லது உடனடியாகவோ தரமானதாக கிடைத்துவிடக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. வசதிகளையோ, பொருட்களையோ கடனுக்காக பெற அலைந்த காலம் சென்று, ‘ம்’ என்றால் கடன் கொடுத்த வங்கி ஏஜண்ட்கள் செல்போனுடன் தயாராய் இருக்கிறார்கள். இவற்றை அதிகப் போட்டி நிலவுகின்ற சூழல் என்று கூறுவதைவிட, உங்கள் வியாபாரத்தை உலகமயமாக்கிக் கொள்ள, உயர்த்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக்க் கருதினால் மிக்கப் பலனுண்டு.

வால்மார்ட்டன் சி.இ.ஓ கூறுவதைப் போல உலக வியாபாரத்தின் முதலாளியான கஸ்டமர் வாடிக்கையாளரை, கவர்ந்து, வியாபாரம் செய்து, (தொடர்ந்து) அவரைத் தக்க வைத்துக்கொள்ள அனைத்து நிறுவனங்களும் கஜ கர்ணம், கோகர்ணம் போடுகின்றன.

குறைந்த பட்சம் சில விஷயங்களை வாடிக்கையாளர் எதிர் பார்க்கிறார், அவை கிடைக்கும் இடங்களைத் தேடிச்செல்ல அவர் தயங்காமல், தயாராய் இருக்கிறார்.

உங்களது சேவை (வியாபாரம்)யின் பொருளை விரிவாக்கிக்கொள்ளுங்கள். துணி விற்பது உங்கள் வியாபாரம் என்றால், நிறத்துக்கான உத்திரவாதத்திற்கு, தரத்துக்கான உத்திரவாத்த்திற்கு, துணியை அழகாக தைக்கும் (பெண், ஆண் தனித்தனியே) இடங்களை அறிமுகப்படுத்துவது, அல்லது அதையும் செய்து செய்து தருவது, திருமணத்துக்கு ஜவுளி என்றால், திருமணத்தன்று வாழ்த்து அனுப்புவது போன்ற கூடுதல் வசதிகள் மற்றும் சேவைகளைச் செய்யலாம்.

வாடிக்கையாளரை ஒரு புதிய நண்பராக்க் கருத வேண்டும். வெளிப்படையாகப் பேசுவோம். வேண்டிய உதவிகளை முன்வந்து செய்வோம், கோப்ப்பட மாட்டோம், Etc உங்கள் கஸ்டமரை புதிய நண்பரைப் போல் நடத்த வேண்டும்.

நல்ல கஸ்டமர் சர்வீஸ் என்பது உங்கள் தொழில் வெற்றி, லாபம், வளர்ச்சி, பணி திருப்தி (JOB SATRISFACTION), குழு முன்னேற்றம் இன்னும் பலவற்றைக் கொண்டது.

சில புள்ளிவிவரங்கள், சர்வேக்கள் கூறும் உண்மைகளைப் பார்க்கலாமா?

ஒரு வாடிக்கையாளர் பொருளுக்கான விலையை விட தரமான சேவையைப் பெறுவதற்காக பத்து சதவீதம் கூடுதலாகச் செலவு செய்ய தயாராக இருக்கிறார் (சேலத்தில் பிரபலமான ஓட்டல் ஒன்றில் மூன்று இட்லிகள் பதினான்கு ரூபாய்க்கு விறகிறார்கள். ஆனால் இரவு பத்து மணிக்கும் சூடாக கிடைக்கும். இதற்காக கூடுதலாக செலவு செய்து சுவையாகச் சாப்பிட வாடிக்கையாளர்கள் தயாராய் இருக்கிறார்கள்).

உங்கள் நிறுவனத்திலிருந்து சிறப்பாக சேவையைப் பெற்றவர் அதை சராசரியாக பத்து பேருக்கு பெருமையாகக் கூறுகிறார்.

அதேநேரம் மோசமான சேவையை சந்திக்கும் வாடிக்கையாளர் அக்குறையை சராசரியாக இருப்பது பேருக்குக் கூறுகிறார்.

உங்கள் பொருளில், சேவையில் திருப்தி கொண்டவர் 82 சதவீத்த்தினர் மீண்டும் உங்கள் நிறுவனத்திற்கு வியாபாரத்திற்காக வருகிறார்கள்.

91 சதவீதத்தினர் சரியான சேவை இல்லை எனில் வேறு நிறுவனத்துக்கு சென்று விடுகின்றனர்.

உங்கள் உடை, முகம், சுத்தம், வரவேறபு, வியாபாரம், வழியனுப்புதல் அனைத்தையும் எதிர்பார்க்கிறார். இக்கால வாடிக்கையாளர். எனவே முதலீடு செய்த முதலாளியாகிய வாடிக்கையாளரை” தக்க வைத்துக் கொள்வதற்கு நீங்கள் மட்டுமின்றி உங்கள் நிறுவனத்தில் பணி புரியும் அனைவரையும் “கஸ்டமர் கேர்”க்காக பயிற்றுவிக்க வேண்டும். வாடிக்கையாளரின் திருப்திதான் நிறுவனத்தின் லாபம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!