Home » Articles » வளர்ச்சி! முதிர்ச்சி!

 
வளர்ச்சி! முதிர்ச்சி!


தங்கவேலு மாரிமுத்து
Author:

வாழ்க்கையில் வளர வேண்டும். மேலும் வளர வேண்டும். முன்னேற வேண்டும், மற்றவர்களை முந்த வேண்டும் என்ற எண்ணம் கிட்டதட்ட எல்லோருடைய மனதிலும் இப்போது இடம் பெற்று விட்டது.

பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், விதிமுறைகள், சட்டதிட்டங்கள், நியாயங்கள் ஆகியவைகளுக்குக் கட்டுப்படுதல், அடுத்தவர்களுடைய உரிமைகளுக்கு ஊறு விளைவிக்காமல் இருத்தல் போன்ற பண்பாடு, ஒழுக்கம் போன்ற விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனித மனங்களை விட்டு அகன்று கொண்டிருக்கின்றன.

இது, கவலைதரும் விஷயமாக அல்லவா இருக்கிறது.

வளர்ச்சியில் ஆர்வம் காட்டுகிற மனிதர்கள், மனப்பக்குவம், மனமுதிர்ச்சி, பெருந்தன்மை, நியாய உணர்வு ஆகிய விஷயங்களில் ஏன் அலட்சியம் காட்டுகிறார்கள்?

அப்படியென்றால், அவர்கள் அடைவது வளர்ச்சியா? இல்லவே இல்லை.

ஒரே ஒரு சின்ன உதாரணம். ஒரு அலுவலகம் அங்கே பணம் கட்டும் இடம். ரயில் அல்லது பஸ் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம்.

ஒருவர் முதலில் வந்து நிற்கிறார்.

2-வது மனிதர் வருகிறார். எப்படி நிற்க வேண்டும்? அவருக்கு நேர் பின்னால்.

1,2 இப்படி.

ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே!

இந்த மகா மகா சின்ன விஷயத்தில் கூட நமது மனம் இவ்வளவு பின்தங்கி இருந்தால், இவ்வளவு குறுகலாக இருந்தால், நாம் அடைந்திருப்பது வளர்ச்சிதானா.

வரிசையின் லட்சணம் இதோடு முடியவில்லை. புதிதாக வருகிற ஒருவர், வரிசையில் எங்கே இடைவெளி இருக்கிறது என்று பார்த்து ஒட்டிக் கொள்வதும், வரிசை L போல வளைகிற இடத்தில் போய் நின்று கொள்வதும், மிக சகஜமாக முன்னால் நிற்கிற ஒருவரிடம் போய் கூசாமல், தனக்கும் டிக்கெட் வாங்கித்தரும்படி கேட்தும், சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதானே இருக்கிறது?

இது, முன்னாலேயே வந்த காத்துக் கொண்டிருக்கிற, மனிதர்களின் தார்மீக உரிமையை நசுக்குகிற கேவல மனத்தைத்தானே காட்டுகிறது. அவர்கள், நெறிமுறைகளுக்குத் தந்த நியாயமான மதிப்பையும் மரியாதையையும் மதிக்கிற கொடுமையைத்தானேக் காட்டுகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிறபொழுது, வாழ்க்கையில் பல வசதிகளைப் பெற்று, நாம் வளர்ச்சியடைந்திருந்தாலும், மனதைப் பொருத்தவரையிலும் நாம் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இன்னும் தினம் தினம் நிகழும் எத்தனையோ விஷயங்களிலும் நாம் முதிர்ச்சி அடைய வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

வளர்ச்சியைப் போல, முதிர்ச்சியும் முக்கியம் அல்லவா? அதற்கான முயற்சியை இன்றே தொடங்குவோம்.

வரிசையில் (Q) தொடங்குவோம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!