Home » Articles » உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?

 
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?


செந்தில் நடேசன்
Author:

தனி மனிதனின் சாதனை

மனித மரபுக்கூற்றை (DNA Sequence) 10 ஆண்டுகளில் வரிசைப்படுத்தி வெளிக்கொண்டு வந்த டாக்டர் கிரேக்வெண்டர், தற்போது உலகில் புதிய உயிரினத்தை செயற்கையாக உருவாக்க முடியும் என்கிறார்.

உண்மையில் இவரால் முடியுமா? அவ்வாறு உற்பத்தி செய்ய இவரிடம் திறமை உள்ளதா? அல்லது இவரிடம் அந்த தொழில்நுட்பம் உள்ளதா? கேள்விகள் எழலாம்.

பல கோடி செலவு செய்து ஆராய்ச்சி செய்து வரும் பல பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் இது போன்ற முயற்சிகள் செய்து வந்தாலும், டாக்டர் வெண்டர் மட்டும் தன்னால் செய்ய முடியும் என்ற அறிவிப்பை எப்படி வெளியிடுகிறார், உண்மையில் இந்த சாதனைகளை இவரால் செய்ய முடியுமா?

தன்னால் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனமான, அமெரிக்காவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில்(NIH) ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும்போது புதுவகை மரபுக்கூறுகளை (ஜூன்) கண்டுபிடித்து, அதன் குணங்களை விரிவாக அறிந்து கொள்ளக்கூடிய (EST – Expresssed Sequence Tag) புது உத்தியை கண்டுபிடித்தார். இது உயிரியல் தொழில் நுட்பத் துறையில் (Biotechnology) புது புரட்சியை ஏற்படுத்தியது.

பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களில் தனது ஆராய்ச்சி முடிவுகளை தன்னிச்சையாக செய்ய இயலாது என்று எண்ணி, தான் சொந்தமாக 1992ல் டைகர் (TIGER) என்ற தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தினார்.

சொந்தமாக ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் ஆரம்பித்த பிறகு தான் சாதிக்க நினைத்த அனைத்திற்கும் விரைவில் அவருக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது.

இன்புலுஎன்சா(Influenza), காய்ச்சசல் தோற்றுவிக்கும் உயிரினத்தின் முழுமையான டி.என்.ஏ. மூலக்கூறு (DNA sequencing) வரிசைகளை கண்டுபிடித்தார். மேலும் டி.என்.ஏ. மூலக்கூறுகளை விரைவில் வரிசைபடுத்தும் முறையைக் (Short gum sequrncing) கண்டுபிடித்தார். 2001ல் மனிதனின் அனைத்து DNA மூலக்கூறுகளையும வரிசைப்படுத்தினார்.

இவர் ஆரம்பித்த “செலரா” என்ற நிறுவனம், எலி, ஈ ஆகிய உயிரினத்தின் அனைத்து டி.என்.ஏ மூலக்கூறுகளையும் கண்டுபிடித்தது.

இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானியாக வலம் வருவதற்குக் காரணம் என்ன? எப்படியோ விஞ்ஞானிகள் திறமையான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டும் குறைந்த காலத்தில் சாதிக்க முடியாமல் இருக்க காரணம் என்ன?

1. பெரும்பாலான விஞ்ஞானிகள், தான் சார்ந்து இருக்கும் நிறுவனத்திற்கென்று, ஏற்ற ஆராய்ச்சிகளை செய்வது, இதனால் தான் தனித்தன்மை வெளிக்கொண்டுவர முடியவில்லை.

2. விஞ்ஞானிகள் பெரும்பாலோர், வர்த்தக ரீதியில் (அல்லது) தனக்கு கிடைக்கும் புதிய கண்டுபிடிப்புகளை எப்படி வர்த்தகம் செய்து பணம் ஈட்டுவது என்பதில் எண்ணங்களை செலத்துவதில்லை.

3. துணிச்சலாக புதிய நிறுவனத்தை உருவாக்கி, அதில் தன்னுடைய ஆராய்ச்சி திறனை முழுவதுமான செலவழித்து புதிய பொருட்களை உருவாக்கி, அதை சந்தைப்படுத்துவதில்லை.

இந்த பிரச்சனைகளால், பல ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகள் மிகவும் குறுகலான வட்டத்தில் ஊர்ந்து கொண்டு, தன் திறமையை முழுமையாக வெளிக்கொணராமல் இன்றும் இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக தன்னால் சாதிக்க முடியும், தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் என்பதை உலகிற்கு வெளிக்காட்டியவர், இன்றும் புதிய திட்டங்களை சாதித்துக் கொண்டு இருப்பவர், ஜீனோ மிக்ஸ் தலைவர் வெண்டர்.

இன்றைய இளமை விஞ்ஞானிகளுக்கு வெண்டரின் வாழ்க்கை, ஒரு முன் உதாரணமாக அமைந்துள்ளது. வெண்டர் ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல, அறிவியல் மூலம் எப்படி சமுதாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய புதிய உயிரினத்தை கொடுக்க முடியும் என்தில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.

இவருடைய திட்டம் “பூமியில் புதிய செயற்கை உயிரினத்தை உருவாக்குவது”. இந்த திட்டத்தை இயற்கயின் நீதிக்கு எதிரானது என்று கூறுவார்கள் பழமைவாதிகள். இதை விஞ்ஞான வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்வர் முற்போக்குவாதிகள்.
– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!