Home » Articles » தேர்வு எழுதும் மாணவர்களே!

 
தேர்வு எழுதும் மாணவர்களே!


admin
Author:

  1. தேர்வு நடக்கும் பள்ளி அமைந்திருக்கும் இடம் குறித்து முன்னமே அறிந்து கொண்டு அதற்கேற்ற நேரத்தை தீர்மானித்துக் கொண்டு முன்னதாகவே புறப்பட்டுச் செல்லுங்கள்.
  2. படிப்பில் அக்கறை இருக்கட்டும். கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை, விரக்தி, சஞ்சலம் இவையாவையும் ஒதுக்கி விடுங்கள்.
  3. புத்துணர்ச்சி தரும் உடற்பயிற்சிகளை (தியானம், மூச்சுப்பயிற்சிகள்) செய்து மனதை அமைதிப்படுத்துங்கள்.
  4. நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து வீணாக பொழுதுபோக்குவதை விட்டுவிடுங்கள்.
  5. கேள்வித்தாள் கைக்கு வந்தவுடன் எல்லாக் கேள்விகளையும் நன்றாகப் படியுங்கள். சுலபமானது என்றாலும், கடினமானது என்றாலும் கவலை கொள்ளுதலை தவிர்த்து விடுங்கள்.

    மூன்று மணி நேரத்தை சரியாகப் பகிர்ந்து கொண்டு எல்லாக் கேள்விகளுக்கும் தெரிந்ததை தெளிவாக எழுதிவிட்டு வாருங்கள்.

  6. உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். வயிறு நிறைய உண்பதை விட சத்தான உணவு வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். மந்தப்படுத்தும் உறக்கம் தரும் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். மேலும் வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்த்திடுங்கள்.
  7. ஹால் டிக்கெட், பஸ் பாஸ், டிரைவிங் லைசென்ஸ், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் போன்ற தேவையானவற்றை மறவாமல் எடுத்துச் செல்லுங்கள்.
  8. விடை எழுதி முடிந்ததும் விடைத்தாள்களை சரியாக அடுக்கி நல்ல முறையில் நூலால் கட்டிவிட்டு ஒரு முறை எல்லாம் முறையாக இருக்கிறதா என்று சரிபாருங்கள்.

Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!