Home » Articles » வேரில் பழுத்த பலா

 
வேரில் பழுத்த பலா


கமலநாதன் ஜெ
Author:

மனம் என்ற ஆழ்கடலின் ரகசியங்கள் எண்ணற்றவை. அவற்றைப் புரிந்து கொண்டால், அவற்றைப் பயன்படுத்தும் வழி தெரியும். கடிவாளத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு வெற்றி உறுதி. இதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது, நிறைய பேருக்கு புரிவதில்லை. உண்மையில், வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கான வழி, தானே தெரியவரும்.

“எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு” என்ற கீதோபதேசம் வாழ்க்கைப் பாதையின் இருபுறங்களிலும் நிறைந்துள்ள துன்பங்களையும், மலர்களையும், சரிசமமாகப் பார்க்க நமக்குக் கற்றுத் தருகிறது. வாழ்க்கையைப் பற்றிய தத்துவ ஞானங்களை எடுத்துச் சொன்ன சித்தர்களும் ஞானிகளும் “வாழ்க்கை அநித்யமானது” என்று ஏன் சொன்னார்கள்? வாழ்க்கையை “உறுதியற்றது” என்று எடுத்துக் கொண்டால் உலக வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் பொருட்களின் மீது உள்ள பற்று விலகும். குறிப்பிட்ட பொருள்களின் மீது கொள்ளுகின்ற பற்று விலகினால் அந்தப் பொருட்களின் இழப்பினால் ஏற்படும் துயரத்தைத் தவிர்க்க முடியும்.

எனது நண்பர் ஒருவர் தனது நண்பருக்கு பத்தாயிரம் ரூபாய் கடனாகக் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட தவணை தீர்ந்ததும், அவர் அதனைத் திருப்பித் தரவில்லை. அந்த நண்பரிடம் “நீ ஏன் கடுமையாகப பேசி பணத்தை திரும்ப몮 பெறக்கூடாது?” என்று கேட்ட பொழுது அவர் சொன்ன பதில், எனக்கு வியப்பளித்தது. “எப்படி இருந்தாலும் அந்தப் பணம் என் கையைவிட்டு ஒருநாள் ஏதோ ஒரு வகையில் செல்லப் போவது உறுதிதானே!

அவர் கடனை அவர் திருப்பித் தரும்வரை என்னுடைய பணம் அவரிடம் இருக்கிறது. என்ற நிறைவு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. அது போதும் என்றார் அவர். இத்தகைய பார்வை எல்லோருக்கும் ஏற்படுவது கடினம்தான்.

பற்று விடவேண்டும். ஆசைகள் துறக்க வேண்டும் என்று புத்தரைப போன்ற ஞானிகளெல்லாம் கூறியதை சரியான நேரத்தில் எதிர்கொள்ள வேண்டும். ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று அவர்கள் கூறினால், “நான் பட்ட படிப்பை முடிக்க வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும்; குடும்பத்தை உயர்த்த வேண்டும்” என்ற ஆசைகளையும் லட்சியங்களையும் துறக்க வேண்டும் என்று பொருளல்ல. செல்வமும் பணமும், வசதிகளும் சில நேரங்களில் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சில நேரங்களில் எதிர்ப்பார்த்தபடி கிடைக்காது. இந்த இருநிலைகளிலும் மனதை ஒரே சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பண்பாட்டினை வளர்த்துக் கொண்டால் எந்தத் துயரைத்தையும் மகிழ்ச்சியில் மாற்ற முடியும்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, துயரமும் இனிமையும் மாறிமாறி இருப்பதுதான் வாழ்க்கை. இரண்டையும் சரிசமமாகக் கருதும் பக்குவம் வந்துவிட்டால், எதுவும் நம்மை பாதிக்காது.

மேலைநாட்டு தத்துவஞானி ஒருவர் கூறிய ஒரு கருத்து “எது நேர்ந்தாலும் எதுவும் நேராத்து போல் நடந்துகொள்” என்பதாகும். திரும்பத் திரும்ப இந்த வாசகத்தை நினைத்துப் பார்த்துக்கொண்டால், வாழ்க்கையின் இழப்புகளையும், தோல்விகளையும் வெறும் வழிமுறைகளாக, ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். ஒரு துன்பம் வந்தவுடன் அல்லது ஒரு பிரச்னை ஏற்பட்டவுடன், வானமே இடிந்து தலைமேல் விழுந்து விட்டதுபோல எண்ணிக் கவலைப்படுவதும், புலம்புவதும், எத்தகைய பயனையும் தராது. அதற்குப் பதிலாக ஒரு பிரச்சனை ஏற்பட்டவுடன் அதனை வாழ்நாளை செலவிடுவதற்குரிய வழிமுறைகளில் இதுவும் ஒன்று என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து திரும்பத் திரும்ப மனைவியிடமும் அல்லது கணவனிடமும் பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொல்லிச் சொல்லி புலம்புவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யுமே தவிர பிரச்சனை தீர வழிவகுக்காது. எனவே நமது மனம் வலிமை உடையதாக இருக்குமானால் பிரச்சனைகள் ஏற்படும்போது தன் பலத்தை இழக்காது. அதிர்வடையாது, வியப்படையாது, ஏமாற்றத்திற்குள்ளாகாது. அதற்கு பதிலாக சில நேரங்களில் மகிழ்ச்சி, சில நேரங்களில் வருத்தம், சில நேரங்களில் விருப்பு, சில நேரங்களில் அதிருப்தி, சில நேரங்களில் வெறுப்பு என்று இரண்டு வகை எதிர்மறை நிலைகளும் தவரிக்க இயலாத்து என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

Robert Frost என்ற ஆங்கிலக் கவி கூறுகிறான்:

I see flowers from a passing car
which disappear beford I tall what they one.

“ஒரு காரில் பயனித்துக் கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும், ஏராளமான செடிகளும், கொடிகளும் தென்படுகின்றன. சில அரிய வகை வண்ண மலர்களும் ஆங்காங்கே தலையாட்டுகின்றன. அவை என்ன மலர்கள் என்று அடையாளப்படுத்தி புரிந்து கொள்வதற்கு முன்னால், அவை மறைந்து விடுகின்றன” என்கிறான் இக்கவிஞன். இதன் பொருள் என்ன? வாழ்க்கையின் சில அரிய தருணங்களும், சில அற்புதமான மனிதர்களும் நாம் புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நம்மை விட்டு விலகிவிடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறான் இவன். எனவேதான் எந்தவொரு பொருளின் மீதும் நாம் கொள்ள வேண்டிய பற்றுதலை நீக்கிவிட்டால், அது விலகும்போது ஏற்படும் மனக் கலக்கத்தை தவிர்க்க முடியும்.

உரிமைகள் கேட்கே, அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்திற்கு, நாம் போராடினால் ஆட்சியைப் பிடிக்க முடியும். என்ற நம்பிக்கையைக் கொடுத்து கார்ல் மார்க்ஸ் என்ற பேரறிஞனின் “இழப்பதற்கு எதுவுமில்லை” என்று மந்திரச் சொல்தான் என்பார்கள். போராடுவதற்குரிய துணிச்சல, மக்கள் மனங்களில் அறிஞர் அண்ணா போன்றவர்களெல்லாம், கையாண்ட தத்துவம், “இழப்பதற்கு எதுவுமில்லை” என்பதுதான். இந்த மனநிலையே ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் வாழ்க்கையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை”

என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகள் மனதில் சமநிலையைப் போற்றுவதற்கு வழிகாட்டும்.

ஏறுவர் இறங்குவர், இறங்குவர் ஏறுவர்
வாழுவர் தாழுவர், தாழுவர் வாழுவர்

என்ற கவியரசுவின் வரிகளும் இதையே சுட்டிக் காட்டுகின்றன. பற்றற்ற நிலை என்பது ஒரு பொருளோ, செல்வமோ அல்லது மனிதர்களோ. நம்மை விட்டு நீங்கினால் வருத்தத்தில் ஆழ்ந்து விடக்கூடாது என்பதுதான் நாம் பெறவேண்டிய சரியான பாடம். வாழ்க்கையில் உயரவேண்டும் நிறைய செல்வத்தை சம்பாதிக்க வேண்டும், வாழும் நிலையிலும் புகழிலும் உயரிய இடத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையை, லட்சியம் என்று கூறலாம். சாதாரண ஆசைகளுக்கும், மலிவான விருப்பங்களுக்கும், லட்சியம் என்று பெயர் சூட்டல் ஆகாது. லட்சியம் வேறு: இச்சைகள் வேறு. இவை இரண்டிற்குமிடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால், மனதின் சமநிலையை பாதுகாக்க நமக்கு வேறொரு ஆசிரியர் தேவையில்லை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!