Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


பாலசுப்ரமணியம்
Author:

நம்பிக்கை, உழைப்பு, இல்லாதோர் வாழ்வில் உயர்வு காண முடியாதா?

முடியும். உயிரில்லாத உடல் எழுந்து நடக்கும் போது.

சாதிச் சங்கங்கள் இருப்பதாலேயே சில சலுகைகளை மக்கள் பெறமுடிகிறது. அதற்காகச் சாதிச் சங்கங்களை ஏற்றுக் கொள்ளலாமா?

சமூகங்களிடையே கல்வி – பொருளாதார இடைவெளி அதிகமாக இருக்கும் வரை தாழ்வு மனப்பான்மைக்கும், தற் பெருமைக்கும் வடிகாலாக ஜாதிச் சங்கங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இரண்டும் ஒருவகை மனநோய்தான். தனித்து நின்று சொந்த முகத்தைக் காட்ட இயலாதவர்கள், போட்டுக் கொள்ளும் முகமூடியே ஜாதிச் சங்கம் ஆகும். இறைவன் எந்தச் சாதியைப் படைத்தான்? தாழ்தப்பட்டவர்களாகவும், உயர்சாதிக்காரராகவும் கடவுள் சன்னதியில் நிற்பவர்கள், கடவுளை அவமதிப்பதற்குச் சமமாகும். இவர்கள் தன்னம்பிக்கையில்லாத, மனித நேயமற்ற மானுடங்கள்!

என் முயற்சிகள் யாவும் தோல்வி மேல் தோல்வியாக முடிகிறது. கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார்.?
-சுரேஷ், இராசிபுரம்

திருமணமாகாத தன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என கேள்விப்பட்ட தாய் கதறினாளாம். “கடவுளே, இப்படி பண்ணிட்டியே” என்று. இப்படி இருக்கிறது உங்களுடைய புலம்பல். கர்ப்பத்திற்கும் கடவுளுக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ, அதுபோன்றுதான் உங்கள் தோல்விக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தம்.

அடுத்து வரும் பதிலில் உங்களுக்குத் தெளிவு பிறக்கும் படியுங்கள்.

இறைவனுக்கும் – தனிமனித முன்னேற்றத்திற்கும் தொடர்பு உண்டா?
-பாலசுப்பிரமணியன், பழநி

இதற்கான விடைத்தேடி நான் அலைந்த நாட்கள் பலநூறு. சந்தித்த குருமார்கள் பல. படித்த நூல்கள் சில நூறு. அவ்வப்போது தெளிவு வந்துவிட்டதைப் போலத்தோன்றும். பின்னர் இதுவல்ல என்று புரியும். ஏறத்தாழ என்னுடைய 50 வயதில் ஒரு தெளிவு பிறந்தது.

இதைத்தான் நான் என்னுடைய பயிற்சிகளில் சொல்லி வருகிறேன். மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ பகுத்தறிவாதம் போல் தோன்றும். திறந்த மனதோடு படியுங்கள்.

நிச்சயமாக இல்லை. கேள்வி, கடவுள் உண்டா? இல்லையா என்பதல்ல! இறை ஒன்று இயங்குகிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கும் ஒருவருடைய உயர்வு தாழ்வுக்கும் தொடர்பு உண்டா என்பது தான்.

முதலில் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த உலகம் தானாக தோன்றியதா? அல்லது இறைனால் படைக்கப்பட்டதா என்கிற குழப்பத்திற்கு விடை காண வேண்டும். தானாக தோன்றியது என்று அறிவியல் அறிஞர்கள் அதற்கு இயற்கை என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மனித வாழ்வியலுக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்ப்போம்.

இந்த உலகம் நிலம், நீர் நெருப்பு, காற்று, வான் எனும் ஐம்பெரும் பருப்பொருட்களால் ஆனது என்பதில் எவருக்கும் குழப்பம் இல்லை அல்லவா?

இவை எப்போது தோன்றியது அல்லது படைக்கப்பட்டது? என்பது முதல் கேள்வி.

அறிவியலும் – ஆன்மீகமும் ஏற்றுக் கொண்டுள்ள பதில் ‘பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்’ என்பதாகும். இந்த பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிரினங்களையும் சேர்த்து ஆறாவது அறிவாக மனிதன் தோன்றினான், அல்லது படைக்கப்பட்டான். இது நடந்தது பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் என்பதை அறிவியலும் ஆன்மீகமும் ஒப்புக்கொள்கின்றன. என்னுடைய கேள்வி என்னவெனில், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் தாமாக தோன்றிய அல்லது படைக்கப்பட்ட புதிய படைப்பு என்ன என்பதுதான்!

பஞ்சபூதங்கள் ஓரறிவு முதல் ஆற்றிவு உயிரினங்கள் இவற்றுக்குப் பிறகு இயற்கையும் இறைவனும் படைத்தது என்ன?

ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்வோம்.

படைப்பு என்பது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்துவிட்டது என்பது தான் மறுக்க இயலாத உண்மையாகும்.

அதற்குப் பிறகு இயற்கையாகவோ, இறையருளாலோ வேறு எந்த ஒரு புதிய படைப்பும் “இல்லை” என்பதுதான். படைப்பாற்றல் நின்று விட்டது. முழுமையடைந்து விட்டது. திருத்தலங்கள் தேவையில்லாத பூரணத்துவம் வாய்ந்த படைப்பு நிறை வெய்திவிட்டது. என்பதுதான் நிதர்சன உண்மையாகும்!

அதற்குப் பிறகு இயற்கையாகவோ, இறையருளாலோ வேறு எந்த ஒரு புதிய படைப்பும் “இல்லை” என்பதுதான். படைப்பாற்றல் நின்று விட்டது. முழுமையடைந்து விட்டது. திருத்தங்கள் தேவையில்லாத பூரணத்துவம் வாய்ந்த படைப்பு நிறைவெய்திவிட்டது. என்பதுதான் நிதர்சன உண்மையாகும்!

என்னுடைய பார்வையில் நான் புரிந்து கொண்ட விஷயங்கள் இரண்டு. முதலாவது: பஞ்சபூதங்கள்.

இவை பூரணத்துவப் படைப்பாகும். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட படைப்புகள் இவையாகும். இரண்டாவது: மாற முடியாதவை – மாற்றிக் கொள்ளக்கூடியவை என்ற இரண்டு வகை உயிர் வாழ்க்கை.

ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிரினங்கள் தன்மை மாற்றிக் கொள்ள முடியாதவை. ஆனால் ஆறறிவு மனிதன் தன்னை மாற்றிக் கொள்ள முடியும்.

படைக்கப்பட்டது போல் வாழவேண்டியவை ஐந்தறிவுக்குட்பட்ட உயிரினங்கள். ஆசைப்பட்டது போல வாழ முடிந்தவன் ஆற்றிவு மனிதன். மனிதன் அறிவால் வாழ்கிறான். மிருகங்கள் உள்ளுணர்வால் வாழுகின்றன. மாறக்கூடிய படைப்பான மனிதன் மாறினால் தானே மனிதன் – மாறாவிட்டால் மாடுதானே!!

நாம் அறிவியல் பார்வையும் – ஆன்மீகப் பார்வையும் தவிர்த்துவிட்டு சாமானிய மனிதராகக் கொஞ்சம் சிந்திப்போம்.

ஆதிகால மனிதன் மிருகங்களோடு மிருகமாகத்தானே வாழ்ந்திருக்கிறான். கலை, கலாச்சாரம், பண்பாடு, இனம், மொழி, கல்வி, அறிவியல், ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, உறவு, குடும்பம் என்று ஏதாவது ஒன்று அவனிடம் இருந்ததா?

அம்மணமாகப் பிறந்து அம்மணமாகத் தானே பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். மானத்தை மறைக்க ஒரு கோவணத்துணி கூட இல்லாமல் படைக்கப்பட்ட மனிதன் இன்று கோவணமில்லாமல் வெளியில் நடமாட முடியாது.

காட்டில் ஒரு மிருகமாக வாழ்ந்த மனிதனின் இன்றைய வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இத்தகைய மாற்றத்திற்கு யார் காரணம்? இன்றைய மனிதனின் கலை, கலாச்சார பண்பாடு, இனம், மொழி, கல்வி, அறிவியல், ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, உறவு, குடும்பம் என்ற பரிமணாத்துக்கும் கடவுளுக்கும் இயற்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

இவை எந்த இடத்தில் தலையிட்டு இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன?

அனைத்து மாற்றங்களுக்கும் மனித முயற்சியே காரணமாக இருந்திருக்கிறது. மாறுவதற்கான படைப்பே மனிதன். மாறுவதற்கரிய ஆற்றல் அவனுள்ளேயே இருக்கிறது.

மனிதன் மாறியது எப்படி?

மனித மேம்பாட்டிற்குத்துணையாக இருந்தது எது?

என்ற கேள்விக்கான பதிலில்தான் மனித வாழ்க்கையின் முனைப்பான முன்னேற்றம் அடங்கியுள்ளது.

அடுத்த இதழில் சந்திப்போம்.
நீங்களும் சிந்தியுங்கள்!!

 

5 Comments

 1. Ravindran says:

  Dear sir..
  I would like to know when the next workshop is going to be held in Tamilnadu ,by Mr.Thannambikkai
  balasubramaniam? Ravindran.D,oman

 2. M.RAJARETHINAM says:

  Kindly inform me about your next workshop in Singapore and Chennai and the fees for the same

 3. vijayanand says:

  There was a meeting held on 03/03/2014 in Tirupur. Sir was certainly speaking about three points.

  1. A man does business, he makes only loss.

  2. A man does business, he makes no profit no loss.

  3. A man does business, he makes only profit.

  You gave some reasons for above points were I did not listen carefully. Can you pls tell me once agin Mr Balasubramaniam sir, what are all the reason for above points.

  rgds
  Vijayanand

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!