Home » Articles » வெற்றிப் படிக்கட்டுகள்

 
வெற்றிப் படிக்கட்டுகள்


செலின் சி.ஆர்
Author:

வணக்கம். ஹாய்… ஹலோ…! உங்கள் அன்புத்தோழி சி.ஆர். செலினின் உற்சாகமான வணக்கம்.

‘சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்’ தொடருக்கு நீங்கள் கொடுத்த சூப்பரான வரவேற்ப்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றி. இந்தப் புத்தம் புதிய தொடருக்கு வரவேற்கிறேன்.

வெல்கம் டூ வெற்றிப்படிகட்டுகள்…!

நாம் எல்லோருமே நிச்சயமாக வாழ்க்கையில் ஒரு முறையாவது மலையில் ஏறியிருப்போம். பழனி, திருப்பதி, St. தாமஸ் மவுண்ட் இப்படி எதிலயாவது. அந்த அனுபவத்தை இப்பக் கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்களேன். மலை அடிவாரத்துல நின்னு, மேல் உச்சியைப் பார்க்கறப்ப ரொம்ப பிரமிப்பா, கொஞ்சம் பயமா, ‘ஐயோ, எப்படித்தான் ஏறப்போறமோ…?’ அப்படின்னு கவலையா, நடைப்பயணத்தை நினைக்க அலுப்பா… இப்படி ஏகப்பட்ட கலவையான உணர்வுகள் தோணும். எல்லாம் முதல் அடி.. First Step எடுத்து வைக்கற வரைக்கும் தான். கொஞ்சம் தூரம் கடந்தவுடனேயே, சில படிகள் ஏறுனவுடனே நாம என்ன பண்ணுவோம் தெரியுமா? மலைப்படிக்கட்டு பாதையின் ஓரமா இருக்கிற பெஞ்ச்ல கொஞ்சம் ஓய்வா உட்கார்ந்து இதுவரைக்கும் நடந்து வந்த படிக்கட்டுகளை திரும்பிப் பார்ப்போம். அப்ப, சின்னதா ஒரு சந்தோஷம்.. பரவாயில்லையே…இவ்வளவு தூரம் சமத்தா, அழகா, ஒரு பிரச்சனையும் இல்லாம, இடறி கால் தடுக்கி விழாம நடந்த வந்துட்டமேனு ஒரு திருப்தி, சந்தோஷம்…. இதெல்லாம் எட்டிப் பார்க்கும். இந்த உணர்வுகளோட இன்னும் முன்னேற வேண்டிய, நடக்கவேண்டிய, படிக்கட்டுகளை அப்படியே ஒரு லுக் (Look) விடுவோம். ஆரம்பத்துல இருந்த அளவுக்கு பயமெல்லாம் இல்லாம, பழகின பாதைதான், இவ்வளவு தூரம் நடந்து வந்த மாதிரியே நடக்க வேண்டியதுதான் அப்படினு easy ஆக எடுத்துக்கற தன்மையும், எல்லாத்துக்கும் மேல, நம்பிக்கை, நம்ம மேல நமக்கே ஒரு அபரிதமான நம்பிக்கை ஏற்படும் பாருங்க, அதை வார்த்தைகளால சொல்ல முடியாது. நாம நடந்து போற ஒவ்வொரு படிக்கட்டும் நமக்கு ஒரு அனுபவம்.. வழியில கொஞ்சம் relax செஞ்சுக்கறதுக்காக ஓய்வா உட்கார்றதும் ஒரு அனுபவம்… அது மட்டுமில்லங்க, எதிர்பாரதவிதமாகவோ, இல்ல இயல்பான Speed க்கு மேல ரொம்ப வேகமா ஓடிப் போறதாலயோ…. கீழே விழுந்துட்டோம்னா…அதுவும் கூட ஒரு அனுபவன்தான். இந்த ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஏகப்பட்ட விஷயங்களை கத்துக் கொடுக்குது. எப்படி போகணும், எப்படிப் போகக்கூடாது. எது நம்மளோட இலக்கு, நம்மைச் சுத்தியிருக்கிறவங்க நாம் கீழே விழறப்ப எப்படி அதை அணுகறாங்க.. help பண்ண ஓடிவர்றாங்களா இல்ல, இதை.. இதை… இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்.’ அப்படினு ஜாலியா enjoy பண்றாங்களா, தொடரப் போற நம்ம பாதையில, இனி அவங்கள நம்பலாமா, வேண்டாமா..இப்படி நிறைய நிறைய விஷயங்களை இந்த அனுபவங்கள் மூலமாக கத்துக்கிறோம். சில சமயங்கள்ல… நாம விழலேன்னாலும், நமக்கு முன்னாடி நடந்து போறவங்க ஏதாவது ஒரு இடத்துல கல் தடுக்கியோ, குழியில விழுந்தோ, வாழைப்பழத் தோல் வழுக்கியோ விழுந்திட்டாங்கன்னா, அவங்களோட அனுபவத்தை நாம ஒரு எச்சரிக்கையா எடுத்துக்கிட்டு, அந்த இடத்துல ரொம்ப கவனமா நடக்க முயற்சி பண்ணுவோம். இப்படி நிறைய அனுபவங்களை சுமந்திட்டு, உடல்வலியை கால்வலியைப் பொறுத்துட்டு.. விடாமுயற்சியோடு மலைமேல ஏறி, நம்ம போய் சேர வேண்டிய கோவிலுக்குள்ள நுழைஞ்சவுடனே ஏற்படற அந்த சந்தோஷ உணர்வுக்கு அளவே இல்லை. அதோட கிளம்புவமா…? ம்ஹூம் மலைமேல நின்னு மலை அடிவாரத்தையும் ஒரு பார்வை பார்ப்போம். சே…இதுக்கா பயந்தோம். அப்படினு இப்ப நினைக்கத் தோணும்.

நம்மளோட வெற்றிப் பயணமும் இப்படி தாங்க, ரொம்ப யோசிச்சு, அலசி ஆராஞ்சு ஒரு Goal ஐ, இலக்கை, லட்சியத்தை நாம தேர்ந்தெடுத்துருவோம். ஆனா, அதுக்கப்புறமா, ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே, அகலக்கால் வைக்கறமோ, ஒரு வேளை Failure ஆயிட்ட என்ன பண்றது இப்படி நிறைய பயங்கள், தயக்கங்கள் நம்ப மனசைப் போட்டு வாட்டும். அதுக்கெல்லாம் கவலைப்படாம வாட்டும். அதுக்கெல்லாம் கவலைப்படாம நம்மளோட வெற்றிப்படிகட்டுகள்ள ஏற ஆரம்பிக்கணும். ஒவ்வொரு படிக்கட்டுமே முக்கியம்தாங்க. ஒவ்வொரு படிக்கட்டுமே ஒரு பாடம்தான். அனுபவம்தான். வெற்றிங்கற உச்சியை அடைஞ்ச உடனே நீங்க மேல இருந்து பார்க்கறப்ப எல்லாம் ஒரே பாதையா, மலையாத்தான் தெரியுமே தவிர, தனித்தனி படிக்கட்டுகளா தெரியாது. ஒரு படியை மட்டும் தனியே கழட்டலாமே, உடைக்கலாமேனு நீங்க யோசிக்க முடியாது. Because, its not possible. ஆனா, ஒன்னு செய்யலாம். சில படிக்கட்டுகளை கடக்கற Speed ஐ நீங்க அதிகப்படுத்தலாம். வேகம்தான் அதிகமாகனுமே தவிர, அழுத்தம் குறையக்கூடாது. உங்க கால் அந்தப் படிக்கட்டுல சரியா பதியலேன்னா, நீங்க விழ வேண்டிவருமே.

இப்ப நான் சொல்லப்போற சில முக்கியமான வெற்றிப் படிக்கட்டுகள்ல, சிலதை நீங்கள் ரொம்ப தீவிரமா முயற்சி செஞ்சு ஏறி, கால் பதிந்து நடக்க வேண்டி இருக்கலாம். ஏற்கெனவே உங்களுக்கு நல்லா பழகின பாதையில, ரொம்ப சுலபமா ஏறமுடிஞ்ச படிக்கட்டுகள்ல வேகமா, ஈஸியா நடந்து போக முடியலாம். உங்களுக்கு இதுவரை பழக்கப்படாத சில படிக்கட்டுகள் சின்னதா, தட்டையா, Flatஆ நீங்க ஏற வசதியா இருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, இந்த ஒவ்வொரு படிக்கட்டும் உங்கள் வெற்றியின் ஆதாரம் அடிப்படை அடுத்த இதழிலிருந்து இந்த ஒவ்வொரு படிக்கட்டிலும் தன்னம்பிக்கையோட ஏறப்போகிறோம். Ok? எங்கே, என்னோட சேர்ந்து முதல் படியில கால் எடுத்து வைக்கத் தாயராகுங்க பார்க்கலாம்…!
-படிகள் தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!