Home » Articles » மனிதா மனிதா

 
மனிதா மனிதா


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

பஞ்சபூதங்கள்

இனிய வாசகர்களே!

வாழ்க வளமுடன், மனிதநேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன். “வாழ்க்கையின் பிடிப்பில்லாதபோது, பொழுதுபோக்குக்காக சினிமா, பார்க்க, நெருங்கியவர்கள் இல்லம் சுற்றுலா அல்லது பக்தி யாத்திரைக்கு செல்கிறோம். பின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புகிறோம்.

இந்த மனிதப்பிறவியே பிடிப்பில்லாமல், போரடித்தால் எங்கு போவது? வேறு உலகம் உள்ளதா? எப்படிச் செல்வது? கண்முன்பே நெருங்கியோர் பலர் திடிரென இறந்துவிடுகின்றனரே. நினைத்தாலே துக்கமாக, வெறுமையாக,பயமாக இருக்கிறது. நானும் என் குடும்பத்தினரும் ஒருநாள் இறந்து விடுவோமே! அன்பாய் வளர்த்த பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், அன்பு மனைவி, பொத்தி வளர்த்த குழந்தைகள் ஆகியோரின் இழப்பை எப்படித் தாங்க முடியும்? வேறு வழியே இல்லையா? சிறுவயதில் அம்மாயி கதை கூறியவாறு எமன் பாசக் கயிறை எடுத்துக் கொண்டு துரத்தி வருகிறானே! எங்கே ஓடி ஒளிவது?” என என் நண்பர் ஒருவர் ஒருநாள் புலம்ப ஆரம்பித்தார்.

கீதையில் யுத்த பூமியில் அர்ச்சுனன் போருக்கு வந்தபின், எப்படி இவர்களுடன் போரிடுவது எனத் தயங்கி, குழம்பி கண்ணபிரானிடம் முறையிட்ட காட்சி நினைவுக்கு வந்தது.

“இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் பிறக்கிறோம். எந்த ஊரில், எந்தப் பெற்றோருக்கு குழந்தையாகப் பிறக்கவேண்டும்” என நாம் யாரும் முடிவு செய்யவில்லை. பிறந்துவிட்டோம். இப்போது, இந்தப் புத்தகம் படிக்குமளவு வளர்ந்து, வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இறப்பை ஒதுக்கி வைத்து, வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறோம். நாம் வசிக்கும் இந்த உலகம், பிரபஞ்சம் இவை”யென விரிவாய் தெரிந்து கொள்வோம்.

பூமி

“நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா” என்ற திரைப்படப் பாடலில் தெரிவித்தவாறு நம் எல்லோருக்கும் மேலாக ஒரு மாபெரும் சக்தி உள்ளது. ஆரம்பம் முதலே பலரும் பலவிதமாய் கூறி வருகின்றனர். அந்த சக்தி நம்மைவிட பலம் வாய்ந்ததும், நாம் வகிக்கும் இந்தப் பூமியைப் பற்றி படித்திருக்கிறோம். 25,000 மைல் சுற்றளவு உள்ள பெரிய கோளமாக உள்ளது; தினமும் ஒருமுறைத் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனை சுமார் 151/2 லட்சம் மைல்கள் சுற்றி வருகிறது; இதனால் நமக்கு இரவு, பகல் தெரிகின்றது! நினைத்துப் பாருங்கள்; மணிக்கு 64,583 மைல் வேகம், நாம் கண்மூடித் திறப்பதற்குள் (ஒரு நொடி) 18 மைல்கள் ஓடுகின்றது பூமி. சுமார் 29 கிலோ மீட்டர்.

இவ்வளவு வேகமும் நமக்குத் தெரியாமல் இருக்கிறதே! எப்படி? பூமி நம்மையும் இழுத்துக்கொண்டு ஓடுவதால் வேகத்தையோ, சுழற்சியையோ உணர முடியவில்லை. ரயிலில் அமர்ந்திருக்கிறோம்; எவ்வளவு வேகமாய் ஓடுகின்றது பாருங்கள். அதில் கூட குலுக்கல்கள் இருக்கும். எவ்வித குலுக்களும் இல்லாமல் ஒரே சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது இந்த பூமி. அந்தரத்தில், வெட்டவெளியில் ஓடுகின்றது. இதுபோல் பல உருண்டைகள் சூரியனை மையமாக வைத்து சுற்றிக்கொண்டே உள்ளன. இந்த உருண்டைகளை கோள்கள், கிரகங்கள், PLANETS என்று அழைக்கிறோம்.

நட்சத்திரங்கள்

இரவில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். இவை ஒவ்வொன்றுமே, நாம் பகலில் ஆகாயத்தில் பார்க்கும் சூரியன் போன்றதே. நாம் வசிக்கும் பூமியிலிருந்து சுமார் ஒன்பது கோடி மைல் தொலைவில் சூரியன் இருப்பதால், பெரியதாகத் தெரிகிறது. பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடி மைல்கள் தொலைவில் இருப்பதால், அந்த சூரியன்களை நட்சத்திரங்கள் என்று அழைக்கிறோம்.

சூரியக் குடும்பம்

ஒவ்வொரு சூரியனையும் மையமாக வைத்துப் பல கோள்கள் சுற்றி வருகின்றன. இம் மாதிரியான ஒரு குழுவை சூரியக் குடும்பம் (GALAXY) என அழைக்கிறோம். ஒவ்வொரு சூரியக் குடும்பமும் பல நூறுகோடி மைல்களை விட்டமாகக் கொண்டுள்ளது. ஒரு சில கோள்களுக்கு உபகோள்களும் உள்ளன. இது போன்ற பல சூரியக் குடும்பங்கள் இணைந்த இந்த பிரபஞ்சத்தை பேரண்டம் MILKY WAY என்று அழைக்கிறோம்.

கோள்கள் உருவான விதம்

சூப்பர்பவர், பிரம்மம், இறைநிலை = ஒன்றுமில்லா ஒன்றாக உள்ளது. தன்னைத்தானே இறுக்கிச் சூழ்ந்து அழுத்திக் கொள்வதால், மடிப்புகள் உண்டாக்கி, நுண்ணிய தூசிகள் உண்டாகின்றன. இவை பல சேர்ந்து, விண் எனும் முதல் பூதம் உண்டானது. இந்த விண்துகள்கள் பல இணைந்து காற்றானது; காற்று அழுத்தம் பெற்று நெருப்பானது. நெருப்புடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் விண் துகள்கள் சேர நீரும், அதன் இறுதியாக நிலமும் உண்டாயின.

இவையெல்லாம் இணைந்ததோ, ஒரு சில இருப்பதோ கோள்கள் எனப்பட்டன. பல கோடி விண்துகள்கள் இணைந்து ஆவி வடிவ கோளமாகிறது. சுழல் வேகத்தால் அடர்ந்த அணுக்கள் மையப்பகுதிக்கு வந்து, எடை கூடி கெட்டியானது.

இந்த விண்துகள்கள் விரைவாகச் சுழன்று வெட்ட வெளியில் உராய்வதால் ஓர் அலை உண்டாகிறது. இதைக் காந்த அலை என்கிறோம். வானத்தில் இருப்பதால் இதை வான்காந்தம் என்று அழைக்கிறோம். இந்த அலைகள் எங்கிருந்து புறப்படுகிறதோ அந்தக் கோள்களின் மீது மோதுகின்றன; பிரதிபலிக்கின்றன; ஊடுருவுகின்றன; எல்லா திசைகளிலும் சிதறுகின்றன; அத்துடன் இருகோள்களுக்கும் இடையில் ஓடிக்கொண்டுள்ளன.

இந்தக் கோள்களின் அழுத்தம் அதிகமாகி நெருப்புக் குழம்பாக மாறுகிறது. அங்கே தேங்கி நிற்க முடியாத போது இந்த நெருப்புக் குழம்பு எரிமலையாக வெளியே வருகிறது. வெப்பம் மேலும் பரவும்போது சூரியனாக மாறுகின்றன. ஆவி வடிவக் கோளை Nebula என அழைக்கிறோம். பொதுவாக எடை குறைந்த சிறிய கோள்கள் எடை அதிகமான பெரிய கோள்களை சுற்றி வருகின்றன.

நம் சூரியக் குடும்பம்

சூரியனை மையமாக வைத்து புதன் (மெர்க்குரி), சுக்கிரன் (வீனஸ்) , பூமி, செவ்வாய் (மார்ஸ்), குரு (ஜூபிடர்), சனி,யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ, ஆகிய கோள்கள் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கோள்களிலுமுள்ள விண்துகள்களின் எண்ணிக்கையும் அதன் தற்சுழல் வேகமும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் தடுக்கிறது. இவற்றின் தள்ளும் ஆற்றலே இவைகட்கு இடைப்பட்ட தூரமாகும்.

சூரியன் தான் அளவு, எடையில் பெரியது. தன் சக்தியால் எல்லாக் கோள்களையும் விடாமல் இழுத்துப் பிடித்துச் சுற்றிக் கொண்டுள்ளது. தற்சுழற்சியால் ஒவ்வொரு கோளிலிருந்தும் வெளிவரும் அலைகள் அக்கோளின் ரசாயனத் தன்மைகளைக் கொண்டிருக்கும். பிற கோள்களின் அலைகளுடன் மோதும்போது காந்த சக்தி, மின்சக்தி, ரசாயண சக்தியில் மாற்றம் உண்டாகிறது. இது போலவே நம்மையும் பாதிக்கிறது.

கோள்களுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தைப் பொறுத்து பாதிப்பின் அளவு கூடும் அல்லது குறையும். மேலுள்ள படத்தைப் பாருங்கள். சூரியனுக்கும் நாம் வசிக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் ஒன்பது கோடி மைல்கள். ஒருமுறை சூரியனைச் சுற்ற பூமிக்கு ஒரு வருடம் ஆகிறது. ஒருநாளில் சுமார் 151/2 லட்சம் மைல்வீதம் 365 நாட்கள் சுற்றினால் ஒரு முழுச்சுற்று. தினமும் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.

பூமியிலிருந்து மற்ற கோள்களின் தூரம் சுழலுக்குத் தகுந்தவாறு சில சமயம் அருகிலும் பல சமயம் தொலைவிலும் அமையும். அருகில் வரும்போது அந்தக் கோள்களின் ரசாயனத் தன்மைகள் நம்மைப்பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

பஞ்சபூதங்கள்

விண்துகள்களின் சேர்க்கையால் கோள்கள் உருவானதை அறிந்தோம். விண்துகள்களின் எண்ணிக்கைக்கேற்ப காற்று, நெருப்பு, நீர். நிலம் என்ற மற்ற நான்கு பூதங்களும் உண்டாயின. பரிணாம வளர்ச்சியில் தாவரம் முதல் மிருகங்கள் வரை உயிரினங்கள் தோன்றின.

அதன் தொடர்ச்சியாக மனிதன் தோன்றினான்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி பஞ்ச பூதங்களால் ஆனதோ, அதேபோல் நம் உடலும் பஞ்ப்பூதங்களால் உண்டாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நிலம் கெட்டித்தன்மையுடையது. நீர் நம் உடலில் இரத்தமாக ஓடிக்கொண்டுள்ளது. நெருப்பு உடல் சூடாக உள்ளது காற்று மூச்சாக இயங்கி நம்மை இயக்கிக் கொண்டுள்ளது. விண் நம் உயிராக உள்ளது.

உடலுக்குள் ஓடும் ரத்தம் காற்று, வெப்பம் இவற்றில் தடை ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தை இழக்கிறது. அந்தத தடைகளை நீக்கி ஓட்டங்களைச சரிசெய்வதே இயற்கை மருத்துவம் (NATUROPATHY) . மண், நீர், சுவாசப் பயிற்சி, நெரும்பு ஆகியவற்றால் உடலில் உண்டான தடைகளைச் சரிசெய்ய முடியும்.

நமது சூரியக் குடும்பத்திலுள்ள பல கோள்களுக்கே நம்மால் இன்னும் விண்கலங்களைச் செலுத்த இயலவில்லை. இந்தக் கோள்களின் வேகம், அவற்றிலிருந்து, வெளிவரும் காந்த அலைத்த தன்மை இவைகளை அறியும் கலைதான் வானியல் (ASTRONOMY) ஆகும். ஒரு சிறிய விதைக்குள் பெரிய மரமே அடங்கியிருப்பது போல, இந்த வானியலுக்குள் சோதிடம் (ASTROLOGY) உள்ளது. சோதிடம் இன்று பெரிதாக ஜோடித்துக் காண்பிக்கப்படுகிறது.
(காண்போம் அடுத்த இதழில்….)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!