Home » Articles » மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்

 
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்


கலைச்செல்வி க
Author:

உலகில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களிலும், தற்போது மரபியல் மாற்றம் செய்யும் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. பல கோடிக்கணக்கில இந்திய அரசும், உலகத்தில் உள்ள பல முன்னேறிய நாடுகளும் மேலும் உலகப் பன்னாட்டு தனியார் நிறுவனங்களும் பல மில்லியன் டாலர் முதலீடு செய்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இப்படி ஆராய்ச்சி செய்து கிடைக்கும் பலன்கள் நாம் அனுபவிக்க வேண்டியது அவசியம். எவ்வளவு விரைவில் நாம் இந்த தொழில் நுட்பத்தை உபயோகிக்கிறோமோ, அந்த அளவிற்கு நமது முன்னேற்றம் உலக அரங்கில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(IT) இன்பரமேஷன் டெக்னாலஜியில் நாம் உலகில் சிறந்தவர்களாக விளங்குகிறோம். அதன் பலனை நாம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கிறோம்.

(BT) பயோ டெக்னாலஜி துறையில் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதில்லை. ஏன்? நாம் மரபணு மாற்றப்பட்ட உயிரினத்தைக் கண்டு ஏன் பயப்படுகிறோம், எதிர்க்கிறோம்.

மற்றுமோர் தொழிற்புரட்சியை (BT) பலவகையான சந்தேகக் கண்ணோடு பார்க்கிறோம். இவற்றிற்கு காரணம் நாம் முழுமையாக அவற்றில் உள்ள உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாததுதான் காரணம்.

மரபணு மாற்றம் என்றால் என்ன?

தற்போது தமிழ்நாட்டில் பயிரிடப்படுகின்ற பெரும்பாலான பருத்தி, மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவானதாகும். இந்த சாதனை கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளது. இதறகு காரணம் விவசாயிகளின் தேவை, ஹீலியாத்தில் என்ற புழு (காய் புழு) அழிக்கவே முடியாது என்ற நிலை உருவானதால், பல விவசாயிகள் பருத்தி பயிரிட்டு, இந்த புழுவுக்கு பல மருந்து கட்டுப்படுத்த முடியாமல் அதனால் பெற்ற கடனால் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்த புழுவை கொல்ல வந்தது (BT) பெசில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ் என்ற பாக்டீரிய நுண்ணுயிரி. இதில் உள்ள புரதம் (Cry புரதம்) குறிப்பாக பருத்தி காய் புழுவின் குடலில் சென்று அடைந்ததும் அந்தப் புழுவின் வயிறு சேதமடைந்து இறந்துவிடும்.

இந்த புரதத்தை உருவாக்கும் ஜீன் (மரபுக்கூறு) கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான Cry/AC என்ற ஜீன்.

இந்த ஜூனை (மரபுக்கூறு), நல்ல பருத்தி ரகங்களுக்கு மாற்றம் செய்து (Transformation) இந்த Cry புரதத்தின் மூலமாக பருத்தி செடியில் காய் உருவாக்குமாறு செய்வார்கள்.

இந்த பருத்திக் காயை மனிதன் மற்றும் விலங்குகள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. இந்த புரதம், பருத்தி காய்புழு உடலில் மட்டுமே தாக்கத்தை உண்டாக்கும்.

இந்த தொழில்நுட்பம் இன்றைய தேவை. எனவே இதை அறிந்து பயன்படுத்துவோம். காலத்திற்கேற்ற விஞ்ஞானப் புரட்சிகளுக்கு கை கொடுப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!