Home » Articles » துணிவுடன் போராடு வெற்றி வரும்

 
துணிவுடன் போராடு வெற்றி வரும்


admin
Author:

நேர்முகம் தொடர்ச்சி….

காவல்துறை பணிக்கு இடையில் மாணவர்களுக்கு தேர்வில், வாழ்வில் வெற்றி பெற நிறைய தன்னம்பிக்கை பயிலரங்களில் அற்புதமாக ஆலோசனைகளை வழங்கி வருகிறீர்கள். இது தேர்வு காலம். மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

இந்த உலக ஜீவராசிகளிலேயே சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே.

உலகம் என்கிற பேரண்டத்தில், எத்தனையோ உயிரினங்கள் உயிர் வாழ்கிறது. அதில் நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம். அதற்கு நாம் எவ்வளவு சந்தோஷபட வேண்டும். நம் தாய் தந்தை இந்த உலகிற்கு ஒரு நல்ல மனிதனாக நம்மை கொடுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை உண்டு களிக்க நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். நாம் நலமாகப் பிறப்பதற்கு எத்தனை பெரிய அதிர்ஷ்டம், புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று எண்ணிப்பாருங்கள்.

இந்த பெரிய பேரண்டத்தில், பூமியில் மட்டும் உயிர் வாழ் இனங்கள், வெளிச்சம் இருக்கிறது. அப்படிப்பட்ட பூமியில் உயிர் வாழ ஒரு மனிதராக வாழ உயிர் கொடுத்த நம் தாய், தந்தைக்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் நீங்களாக பிறப்பதற்கு 300 பில்லியன் வாய்ப்புகளில் பிறந்திருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய விசயம்?

நம்மை உருவாக்கி தாய் தந்தைக்கு மகிழ்ச்சி செய்யும் விதமாக நாமெல்லாம் பெரிய சாதனை படைக்க வேண்டும். அதற்கு குறிக்கோள் இருக்க வேண்டும்.

அன்றைக்கு அமெரிக்க விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சந்திரமண்டலத்தில் கால் பதித்த போது அந்த நாட்டு அதிபர் ஜான் F. கென்னடி தொலைபேசியில், நீங்கள் இந்த மனித குலத்திற்கே பெரிய சாதனை நிகழ்த்திவிட்டீர்கள். ஒரு பெரிய திருப்பு முனை, என்றெல்லாம் ஆம்ஸ்ட்ராங் அவர்களை அந்த நாட்டு அதிபரே வியந்து பாராட்டுகின்றார். அந்த அளவுக்கு பெரிய, பெரிய குறிக்கோளுடன் இருக்க வேண்டும்.

அதுதான் உங்கள் தாய் தந்தைக்கு நீங்கள் செய்யும் பெருமை. உங்கள் பெற்றோர்கள் உங்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார்கள். எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் படிக்க வைக்கிறார்கள். அதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதற்காக நீங்கள்,

கடின உழைப்புடன் படித்து நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும். நன்றாக படித்தால் தான் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். அதற்கு நீங்கள் படிப்பின் மீது நல்ல ஆர்வம் வைக்க வேண்டும். படிப்பு மேலே நிறைய ஆசைப்படல் வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். எப்படி எளிதில் படித்து சாதிக்க முடியும் என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக,

ஒரு பாடத்தை ஒரு மாணவர் 1 மணி நேரம் படித்து கிரகித்துக் கொள்கிறான். இன்னொரு மாணவன் 5 மணி நேரம் படிக்கிறான். ஏன் இன்னொரு மாணவனால் அந்த பாடத்தை 1 மணி நேரத்தில் படிக்க முடியவில்லை. ஏன்? பாடங்களை படிக்கும் போது “Technic” வேண்டும். “Instrument” ஐ பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக,

ஒரு காட்டில் இரண்டு பேர் மரம் வெட்டுகிறார்கள். அந்த இரண்டு பேரில், ஒருவர் காலையிலிருந்து மாலைவரை மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார். அதே போல, இன்னொருவர், ஒரு மரத்தை விரைவாக வெட்டுகிறார். மீண்டும், கூர்மைப்படுத்துகிறார். இப்படி அவ்வப்போது கூர்மைப்படுத்தும்போது, அதாவது, Instrumnt பயன்படுத்தும்போது செய்கின்ற செயல் எளிதாகி விடுகிறது. அது போல, உங்கள் கோடாரிகளை கூர்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.

படிப்பில், நல்ல மதிப்பெண்கள் பெறுங்கள். வாழ்த்துங்கள்!

மாணவர்களுக்கு கற்கும் முறைகளைப் பற்றி நீங்கள் சொல்வது நல்ல பயன் தருகிறது என அறிந்தோம். மகிழ்ச்சி. அம்முறைகளைப் பற்றிக் கூறுங்களேன்?

1. ஆர்வம்

பாடங்களில் நேசிப்பு இருக்க வேண்டும். அது எந்தப் பாடமாக இருந்தாலும், முதலில் பாடங்களை நன்கு நேசிக்க வேண்டும்.

நீங்கள் படிப்பது, இயற்பியல், வேதியியல், உளவியல், கணிதம், வரலாறு, புள்ளியியல், தமிழ், ஆங்கிலம், அது எந்தப் பாடமாக இருந்தாலும் முதலில் பாடங்களை நேசியுங்கள். படிக்கும் பாடங்கள் மீது ஆர்வம் கொள்ளுங்கள்.

2. நேசிப்பு

நேசிப்பு என்பது இருக்க வேண்டும். ஒரு செயலில் (அ) செய்கின்ற பணயில் நேசிப்பு என்பது அவசியம். உதாரணமாக, ஒருவருக்கு கிரிக்கெட் பற்றிய ஆர்வம் இருக்கிறதென்றால் அவர் கிரிக்கெட் பற்றிய அத்தனை விஷயங்களை அத்துப்படியாக வைத்திருப்பார். மாவட்ட அளவில், மாநில அளவில், நம் நாட்டு அணி, பக்கத்து நாட்டு அணிகள் என்று கிரிக்கெட் பற்றிய அத்தனை விஷயங்களை அத்துப்படியாக வைத்திருப்பார். ஏனென்றால், அந்த விஷயத்தை அவர் ஆர்வமாக நேசிக்கிறார். அதுபோல உங்கள் பாடங்களில் நேசிப்பு என்பது இருக்க வேண்டும்.

3. சிந்தித்துப் படித்தல்

ஒரு பாடத்தை படிக்கும்போது சிந்தித்துப் படி, உதாரணமாக, இயற்பியல், ஒரு பாடத்தை படிக்கும்போது (ஒளியியல் பாடம் என்று வைத்துக்கொள்ளுங்கள்) ஏன்? எதற்கு? என்று சிந்தித்துப் படியுங்கள். சொன்னார்களே? அது உண்மையா? பொய்யா? என்று சிந்தித்துப் படியுங்கள்.

எந்தப் பாடத்தை படித்தாலும் சிந்தித்துப் படியுங்கள். இது பாடங்களை படிப்பதற்கு மட்டும் அல்ல. நீங்கள் படித்து முடித்து பெரிய பெரிய பதவிகளுக்கு சென்றால் கூட (ஒரு கலெக்டராகவோ, விஞ்ஞானியாகவோ) சிந்தனை என்பது முக்கியம்.

Thinking Mind மிக முக்கியம்.

ஏனென்றால், நீங்கள் சிந்திக்கின்ற மனிதர்கள். ஆகவே, சிந்தித்துப் படியுங்கள். உங்கள் பகுத்தறியும் திறன் மேம்படும்.

4. நினைவாற்றல்

நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. இது மாணவர்க்கு மாணவர் வித்தியாசப்படுகிறது. காரணம் என்ன வென்றால், அவர்கள் பயனபடுத்தும் வித்ததைப் பொறுத்தது. எல்லோருக்கும் திறமை உள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த சில Connection Techniques உள்ளது. அதாவது,

அறிவியல் பாடங்களில் (தாவரவியல், விலங்கியல், உயிரியல்) போன்றவற்றில் அறிவியல் பெயர்கள் அதிகம் உண்டு.

அதை நினைவில் வைக்க, வார்த்தைகள் மறக்காமல் இருக்க Subsitution செய்து பழகுங்கள். அதாவது, தொடர்புபடுத்தி தெரியாத வார்த்தைகளை தெரிந்த வார்த்தைகளுடன் Connect செய்து பழகிக்கொள்ளுங்கள். அப்போது சுலபமாக இருக்கும்.

தேர்வில் விடைகளை எழுதும்போது, தெளிவாக எழுதவேண்டும். Points ஐ சரியாக எழுத வேண்டும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஒரு பாடத்தை படிக்கும்போது, ஒரு முறை முழுமையாக படித்து விடுங்கள். பிறகு சில Techinque உடன் Develop செய்து படித்தால் சுலபமாக புரிந்துவிடும்.

அந்த Techniques:

PQRST Method ஆகும்.

1. P – Preview
2. Q – Question
3. R-Read
4.S-Self Resitel
5.T- Testing

இந்த முறையை பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறலாம்.
1. P-Preview

Preview என்பது, உதாரணமாக Physics-ல் ஒரு பாடம் படிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது (Light-ஒளியியல்) அந்த பாடத்தை, “ஒரு மேலோட்டமாக தலைப்பு வாரியாக என்ன சொல்ல வர்றாங்க” என்று படித்து பாருங்கள். இதுதான் Preview.

General Idea வுடன் படி, எதைப் படிக்கிறோமோ அதை முழுசாப்படி, 1 மணி நேரம் படித்தாலும் ஈடுபாட்டுடன் படி அந்த பாடத்தில் “என்ன சொல்ல வர்றாங்க” என்று புரிந்து படி.

2. Q-Question

மாணவர்களே! முதலில் என்ன படிக்கிறோம். என்று நீங்களே கேள்வி கேட்டு படித்து பழகுங்கள். என்ன படிக்கிறோம்?

Mechanics படிக்கிறோமா?

Mechanics என்றால் என்ன?

அந்த பாடத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்? உங்ளை நீங்கள் கேள்வி கேட்டு பாருங்கள். அப்போது தான் சிந்தனை எண்ணங்கள் வளரும். சிந்திப்பதற்கு கேள்வி கேட்டு பழுகுதல் மிகவும் முக்கியம்.

3. Read – படித்தல்

படிக்கும்போது, Understanding, thinking, இந்த இரண்டையும் முழுவதும் பயன்படுத்த வேண்டும் அதாவது பாடங்களில் புரிந்து கொள்ளுதல், சிந்தித்து கேள்வி எழுப்புதல் போன்றவற்றைப் பயன்படுத்தி படிக்க வேண்டும். சிந்திக்கின்ற திறைமையை படிக்கும்போது கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிலர், 1 மணி நேரம், 2 மணி நேரம் உட்கார்ந்து படிப்பார்கள். என்ன படித்தேன் எல்லாம் மறந்து போயிற்று. ஒன்றும் புரியவில்லை என்று சொல்வார்கள்.

ஆகவே, 1 மணி நேரம் படித்தாலும் முழு ஈடுபாட்டுடன் படியுங்கள். அப்படி படிக்கும்போது, ஒவ்வொரு பத்தியையும் சிந்தனை செயது, புரிந்து படியுங்கள். அப்போதுதான் முழுமையாக படிக்க முடியும்.

4. S-Self Resital – படித்ததை ஒப்பிப்பது

எப்போதும் பாடங்களை பார்த்தவுடனேயே புத்தகங்களை மூடி வைத்து விட்டு வேறு பக்கம் கவனத்தை திசை திருப்பக் கூடாது.

ஒரு பாடத்தை படித்தவுடனே பகுதிவாரியாக வரிசைப்படுத்தி, திரும்பவும் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். கணிதம் சம்பந்தமான பெயர்கள் போன்றவற்றைத் திரும்ப திரும்ப நினைவு படுத்தி எழுதிப் பார்க்க வேண்டும்.

5. Testing

அவ்வாறு எழுதிப் பார்த்தவுடன், உங்களுக்கு நீங்களே ஒரு ஆசிரியராக மதிப்பெண், இடுவதைப் போல் நீங்கள் படித்து எழுதிப்பார்த்த பகுதிக்கு மதிப்பெண் இடலாம்.

அவ்வாறு செய்யும்போது, எந்த பகுதியில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதை அறிய முடியும்.

அதாவது படிக்கும்போது பாடத்திட்டத்தில் எவ்வளவு பெரிய பகுதியாக இருந்தாலும் பகுதி பகுதியா பிரித்துப் படித்தால் நம்மால் வெற்றியின் இலக்கை அடைய முடியும்.

கனடா நாட்டைச் சார்ந்த டெரி ஃபீஸ்ட் என்பவர், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசைக்கு நாள் ஒன்று 500 கி.மீ. வீதம் ஓடி 4000 கி.மீ, தூரத்தை ஓடி சாதனை படைத்தார். ஒரு விஷயம் என்னவென்றால் அவருக்கு ஒரே ஒரு கால்தான் உள்ளது. இன்னொரு கால்புற்று நோய் காரணமாக அகற்றப்பட்டுவிட்டது.

ஒரே காலால் 4000 கி.மீ. உன்னால் எப்படி ஓட முடிந்தது என்று லண்டன் பி.பி.சி முதல் அனைத்துப் பத்திரிகைகளிலும் பேட்டி கண்டனர்.

அப்போது அவர் கூறினார்.

நான் ஒடிய பாதையில் 1 கி.மீக்கு இடைவெளியில் 1 மின்சார விளக்கு இருந்தது. அப்போது நான் பார்க்கும்போது 1 மின் விளக்கு மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. அது மிக அருகில் தானே இருக்கிறது என்று இப்படி ஒவ்வொரு மின் விளக்கையும் இலக்காக வைத்து ஒவ்வொரு பகுதியாக கடந்து வந்தேன். என்று அந்த புற்று நோயாளி கூறினார்.

ஒரு கால் மட்டும் இருந்த அவரே அவ்வளவு தன்னம்பிக்கையாக இருந்து அந்த செயலை செய்யும்போது, உங்களால் ஏன் முடியாது?

ஆகவே, தன்னம்பிக்கையோடு படியுங்கள். வெற்றி உங்கள் பக்கம்.

கற்கும் முறைகளை கூறிய தாங்கள் அதை மாணவர்கள் சிறப்பாக செயல்படுத்த தாங்கள் சொல்ல விரும்புவது?

நாம் எவ்வளவு நினைத்திருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாம் வெற்றிபெற முடியும்.

நாம் எண்ணுகின்ற செயல்களை எல்லாம் யார் செயல்படுத்துகிறார்களோ அவர்களே வலிமை உடையவர்கள்.

நமது தேசத்தந்தை, காந்திஜி, மிகப்பெரிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தையே எதிர்த்து நின்றார் என்றால் அவரிடம் மனோவலிமை இருந்தது.

பிரிட்டிஷ் அரசின், எந்தவித அச்சுறுத்தலுக்கும் அவர் பயந்து கொள்ளவில்லை.

தன்னுடைய அகிம்சை வழியில் நின்று போராடி வெற்றி கண்டார். ஆனால் அவர் மௌனமாகவோ, அமைதியாகவோ இருந்துவிடவில்லை. செயல்பட்டார், செயலபடுத்தினார். எந்த பணியிலும் வெற்றி காண கடுமையான முயற்சியை எடுக்க வேண்டும். அப்போது தான் வெற்றி காணமுடியும்.

உதாரணமாக,

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நாட்டு ஹிரோசிமா, நாகசாஹி என்ற நகரங்கள் குண்டு வீச்சின் மூலம் துயரத்தில் ஆழ்ந்தபோது கூட துவண்டு போகாமல், ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுந்தது என்றால் எதனால்?

தன்னம்பிக்கையான கடின உழைப்பால்!

1944-ம் ஆண்டு நடந்த உலகப்போரால் ஜப்பான் அந்த நிலையை சந்தித்தாலும், அமெரிக்க நாட்டிடம் கடன் பெற்று தனது சீரிய கடின உழைப்பால் முன்னேற்றம கண்ட ஜப்பான் 15 ஆண்டுகளுக்கு பிறகு 1985-ம் ஆண்டு கடன் கொடுக்கும் நாடாக வளர்ந்து விட்டது.

எதனால்?

15 ஆண்டுகள் எந்த அளவுக்கு உழைத்திருப்பார்கள். நாம் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும். கடின உழைப்பால் உற்பத்தி திறனை பெற்று நல்ல வளர்ச்சி பெற்றது

அந்த ஜப்பான் நாட்டை நாம் ஒருமுன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல,

ஒரு சிறுவன் பள்ளியில் சேர்க்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் கல்வியில் முன்னேற்றம் காணாதாதால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டான்.

ஆனாலும், தனது சீரிய முயற்சியால் தன் வீட்டிலேயே ஒரு ஆய்வகத்தைஏற்படுத்தி அறிவியல் நட்பங்களை கண்டறிந்து இந்த உலகே வியந்து பாராட்டுகின்ற அளவுக்கு ஒரு மிகச்சிறந்த அறிவியல் விஞ்ஞானியாக வளர்ந்தார். 1300 கண்டுபிடிப்புகளும் சாதாரண கண்டுபிடிப்புகளல்ல. மனித குலத்திறகு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் கண்டுபிடிப்புகளாகும்.

அதேபோல், சிறுவயதிலேயே கண் பார்வை இழந்து, கேட்கும் திறனையும், பேசும் திறனையும் இழந்து தவித்த ஹெலன் கெல்லர் – பிற்காலத்தில் நன்கு படித்து மேதையாக சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக பரிணமித்தார்.

இப்படி எண்ணற்றவர்கள் பல தடைகளையும் தாண்டி தனது கடமைகளை செய்து வரலாறு படைத்துள்ளனர். அதுபோல், முயற்சி செய்து, நல்ல வழிமுறைகளை கையாண்டு வெற்றி கொள்ளலாம். எந்த பணியிலும் வெற்றி பெற்று சாதிக்கும் குணம் வேண்டும்.

ஒரு ஊரில குறும்புக்கார இளைஞர்கள் இரண்டு பேர் இருந்தனர்.

அந்த ஊரில் ஒரு சாமியார் ஒருவர் மக்களுக்கு அருள்வாக்கு சொல்வதையும், மக்களின் விருப்ப காலத்தைப்பற்றி சொல்வதுமாக இருந்தார். இதைக் கண்ட அந்த குறும்புக்கார இளைஞர்கள் அந்த சாமியார் உண்மையானவரா? பொய்யானவரா? எனக் கண்டறிய, ஒரு சோதனை நடத்தினார்கள், அது என்ன வென்றால், ஒரு கிளியை பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு, அது உயிரோடு உள்ளதா? இல்லையா? என்று கேட்பது,

சாமியார் உயிரோடு இருக்கிறது என்றால் கிளியை கையால் கழுத்தை நெறித்து விட்டு இதோ கிளி உயிரோடு இல்லை என்று காட்டலாம். “சாமியார், கிளி உயிரோடு இல்லை” என்றால் பின்னால் கைகளில் மறைத்து வைத்திருக்கும் கிளியை அப்படியே உயிரோடு காட்டி விடலாம். எப்படியாவது திட்டமிட்டு அந்த குறும்புக்கார இளைஞர்கள் சாமியாரிடம் சென்றார்கள்.

சாமியாரிடம், கிளியை காண்பித்து, அந்த இளைஞர்கள் உயிரோடு, இருக்கிறதோ, இல்லையா? என்று கேள்வி கேட்க, சாமியார் சற்று நிதானமாக யோசித்துவிட்டு, சாமியார், சாமார்த்தியமாக இப்படி பதில் சொன்னார். அந்தக் கிளி உயிரோடு இருப்பதும், உயிரோடு இல்லாததும் உங்கள் கையில்தான் உள்ளது என்றார். அந்த இளைஞர்கள் அந்த சாமியாரை வணங்கிவிட்டு சென்றார்கள்.

அதுபோல், மாணவர்களே, அந்த கிளியைப் போன்ற எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. அதை வென்று காட்டுவது உங்கள் செயல் திறனில் தான் உள்ளது. வாழ்த்துக்கள்!

(தொடரும்…)
நன்றி திரு. K. வெள்ளிங்கிரி

V. அர்ச்சுன்ன, A. சீதா, A. ராஜ கணேஷ் A. அகிலா, மேட்டுப்பட்டி,
திண்டுக்கல்

“திண்டுக்கல் மாவட்டத்தில் ஐயா அவர்கள் பதவி வகித்த காலங்கள் நல்ல மனிதர்களுக்கு பொற்காலம், தீயவர்கள் திருந்திய காலம்! எங்கள் மாவட்ட மக்களின் மனம் வருந்திய நாள் எது என்றால், ஐயா வேறு மாவட்டத்திற்கு மாறிய அந்த நாள் மட்டுமே. இன்றும் ஐயாவின் பெயரில் ஓர் உருவாகி உள்ளது. ஒவ்வொரு நல்ல மனிதர் மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ளார். ஐயாவின் எண்ணங்களும் எழுத்தும் எங்களை மேலம் ஒரு படி உயர்த்தியுள்ளது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!