Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

இளைஞர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் இளைஞர் தின சிந்தனைகளை, விவேகானந்தர் சிந்தனைகளை தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. தியானம் பற்றிய விளக்கங்களை வழங்கிய திரு. பன்னீர் செல்வம் அவர்களின் வார்த்தைகள் மறுக்க முடியாதவை. திருப்பம் வெற்றியின் விருப்பம், மனது வைத்தால் எல்லாமே முடியும்,

மனதின் மொழி ஆகிய கட்டுரைகள் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. தன்னம்பிக்கை இதழில் நம்பிக்கை இதழ் நம்பிக்கையை விரும்புகின்ற இதயங்களுக்கு ஓர் நல்மருந்து. வாழ்த்துக்கள்.

-R.P. ராம்குமார்.
சாயிபாபா காலனி,
கோவை.

ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் கரூர் மாவட்டத்து அதிகாரிகளின் செயல்பாடு போற்றுதற்குரியது. பாராட்டுக்கள். இவர்களைப் போன்றே இளம் உயர் அதிகாரிகளின் செயல்கள் அமைந்தால் நம் நாட்டின் உயர்வுக்கு மிகவும் நன்மையாகும். ‘மனதுவைத்தால்’ கட்டுரையில் இரண்டு ஊராட்சித் தலைவர்களின் செயல்பாடுகளும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

-கே. இரவிக்குமார்
பு. புளியம்பட்டி, ஈரோடு.

நாளும் பொழுதும் தனக்காக வாழாமல் இளைஞர்களுக்காகவே வாழ்ந்தவர் இல. செ. கந்தசாமி அய்யா அவர்கள். அன்றைய இளைஞன் இன்றைய இளைஞனுக்காக வாழ்கிறேன். அவர் விதைத்த விதை தன்னம்பிக்கையாக இன்றும் உள்ளது. என்றும் எப்போதும் நல் உள்ளங்களில் குடிகொண்டிருக்க வேண்டும். தன்னம்பிக்கை. கட்டுரை தந்த தூசி. தியாகராசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். தொடருங்கள் நாங்கள் தொடர்ந்து வருகிறோம்.

-பொ. சிவகுமார்
வடக்கு சுள்ளிப்பாளையம்

ஜனவரி இதழில் நான் சுவைத்தவை:

தானும் உயர்ந்து தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்த்தி விடுவதில் தான் மனித வாழ்க்கை அடங்கியுள்ளது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்றபடி செயல்பட்டால் எடுப்பார் கைப்பிள்ளையாக இராமல் தன்னம்பிக்கையாளராக விழிப்புடன் வாழலாம்.

விவேகானந்தர் கூறிய ஒளிபடைத்த கண்ணுடன் உறுதிகொண்ட நெஞ்சுடன், தெளிவு பெற்ற சிந்தனையுடன் வாழ்ந்தால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

காலங்கடந்து நன்றி கூறினாலும் நாக்கில் இருந்து உச்சரிக்காமல் இதயத்திலிருந்து உணர்த்தப்படுவது தான் நன்றியாகும்.

எந்த நேரத்திலும் திருப்பம் ஏற்படாலாம் என்பதை நெப்போலியனை எடுத்துக் காட்டி விளக்கியது சிறப்பு.

சிறைக்கதவுகளின் வழியே பார்த்தவர்களின் பார்வையைப் பொறுத்தே சிந்தனைகள் அமையும்.

மனது வைத்தால் எல்லாமே முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு லிங்கம்மாள் மணிமேகலை ஆகியோராகும்.

பழக்கம், எண்ணம் எவ்வாறு உண்டாகிறது. இதனை ஆக்கபூர்வமாக எவ்வகையில் பயன்படுத்தி உயரலாம என யோகதா மனதின் மொழியாகக் கூறியது அருமை. எனக்கு மிகவும் பிடித்த கொள்கையாகும்.

-இரா. தியாகராசன்
தேவி இல்லம், ஆர்.கே. கார்டன், இலால்குடி.

“நாதியற்றோர் எவர்க்கேனும் நலம் விளைக்க முனைந்தீரா என தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் நலிந்தோர்க்கு உதவும் நேயத்தைப் பெற கவிதையில் கேட்கும் பெருமதியழகனின் கூற்றை நெஞ்சார ஏற்போம் ஒருவருக்கேனும் உதவி செய்து மனமகிழ்வைப் பெறுவோம். இரண்டு மதிப்பெண்களால் முதல் இடத்தை இழந்ததை வெற்றியாக்க முயற்சி மேற்கொண்டு இன்று துணைவேந்தராக உயர்ந்த அனுபவங்கள் இளைஞர்களுக்கு வழி காட்டுவதாக அமைந்தது”

-புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்,
ஓசூர்
-தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்