Home » Articles » சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்

 
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்


செலின் சி.ஆர்
Author:

வணக்கம். ரொம்ப ஜாலியா, சந்தோஷமா புதுவருடத்தைக் கொண்டாடி முடிச்சிருப்பீங்க! இந்த மாதம் நாம பேசப்போற விஷயமும் இந்தக் கொண்டாட்டத்துக்கு ரொம்ப பொருத்தமானது தான். அது எனன்னா…

OK. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு சின்ன கேள்வி. ‘சே.. போன மாசம் நாம தேவையில்லாத விஷயங்கள்ல முதலீடு செஞ்சுட்டமே, போன வருஷம் நாம ரொம்ப தப்பான முடிவு எடுத்துட்டமே அப்படினு கடந்த போன செயல்களைப் பத்தியே அதிகம் யோசிச்சு கவலைப்படற பழக்கம் உங்களுக்கிருக்கா? அப்ப, இது உங்களுக்கு ரொம்பத் தேவையான Topic தான். ஆமாங்க, நம்ம வெற்றிக்குத் தடையா இருக்கிற பல விஷயங்கள்ல ரொம்ப முக்கியமான ஒரு aspect கடந்த கால தவறுகளை நினைத்து அல்லது கடந்து போன விஷயங்களை நினைத்து அளவுக்கதிகமாக அலட்டிக் கொள்வதுதான். புது வருடம் பிறந்துவிட்டது. இந்த நேரத்தில், நாம் விவாதிக்க இதைவிடப் பொருத்தமான விஷயம் வேறு இருக்கிறதா என்ன?

ஒரு குட்டிப்பையன் வீதியில் நின்று அழுது கொண்டிருந்தானாம். அந்த வழியே வந்த ஒரு நபர், ‘ஏம்ப்பா தம்பி அழற என்ன விஷயம்? என்று கேட்க ‘நான் என்னோட ஐந்து ரூபாயை தொலைச்சுட்டேன்…’ அப்படினு ரொம்ப சோகமா சொல்லிட்டே அழுகையைத் தொடர்ந்தானாம். சரி, இதுதானா பிரச்சினை? பரவாயில்லை, இந்தா பிடி.. இந்த ஐந்து ரூபாயை வைத்துக்கொள்.. ‘ என்று தன் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நொட்டை கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட பின்பும் அழுகையை நிறுத்தாமல், முன்பைவிட இன்னும் சத்தமாக அழத் தொடங்கிவிட்டான் அந்த சிறுவன். பதறிப்போன அந்த நபர் என்னாச்சுப்பா, நான்தான் நீ தொலைத்த ஐந்து ரூபாயைக் கொடுத்து விட்டேனே, இன்னும் எதற்கு அழுகிறாய்? என்று கேட்க, கண்ணைக் கசக்கிக் கொண்டே, இப்பொழுது நீங்கள் கொடுத்த ஐந்து ரூபாயுடன் நான் ஏற்கனவே வைத்திருந்த ஐந்து ரூபாயையும் தொலைக்காமல் வைத்திருந்தால் இப்பொழுது என்னிடம் பத்து ரூபாய இருந்திருக்குமே..’ என்று கத்திகத்தி அழுது கொண்டேயிருந்தானாம். இப்படித்தான் நாமும் பல சமயங்களில் இன்றைக்குக் கிடைத்திருக்கும் லட்ச ரூபாயை லாபத்தை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்வதை விட்டுவிட்டு, என்றைக்கோ இழந்த ஆயிரம் ரூபாய்க்காக சாமியைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். அல்லது, நம்மை நினைத்து, ‘நான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, ராசியில்லாதவன்’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறோம். சிலபேர் இருக்கிறார்கள், இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு சுயமாய் தொழில் செய்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் திருப்தியில்லாமல் இந்தக் கதையில் வரும் சிறுவனைப்போல, “சே… அந்த வேலையையும் விடாமலிருந்தால், இந்த ஒரு லட்சம் ரூபாயுடன் இருபதாயிரமும் சேர்ந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆகியிருக்குமே…” என்ற மனக்கணக்கு போட்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த மாதிரியான மன நிலையுடையவர்கள், ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அது என்னவென்றால், மாத சம்பளத்திற்காக வேலை செய்து கொண்டேயிருக்கும்போது, உங்கள் சுய தொழிலுக்கான உத்வேகம் குறைவாகத்தான் இருக்கும். வேலையில் சந்திக்கும் பிரச்சினைகள், மன உளைச்சல் எல்லாம் உங்களை, உங்கள் தொழிலில் முழு கவனம் செலுத்த அனுமதித்திருக்காது. எல்லாவற்றையும் விட, வேலைக்கும் தொழிலுக்குமிடையேயிருக்கும் இந்த எண்பதாயிரம் ரூபாய் வித்தியாசத்தை இப்பொழுதும் நீங்கள் உணராமலிருப்பது சரியானதல்ல. இதை உணர்ந்தீர்களென்றால் மட்டுமே, நிச்சயமாய் அடுத்த அடியை நோக்கி நீங்கள் முன்னேற முடியும். இந்த மாதம் கிடைத்த எண்பதாயிரத்தோடு இந்த வித்தியாசம் நின்று விடப்போவதில்லை. இது இன்னும் அதிகரித்துக்கொண்டேதான் போகப்போகிறது. இந்த லாப இடைவெளியை அதிகரிக்க வேண்டியது நம் கடமை. நாம் மனது வைத்தால், எவ்வளவு தேவையோ அவ்வளவு அதிகமாய் வருமானத்தை உயர்த்த முடியும். அதற்கான வழிகள் இருக்கிறது. முன்பை விட அதிக சுதந்திரம் இருக்கிறது.

வேலை பார்க்கும் நேரத்தை நிர்ணயிப்பது நாம்தான். நமது இலக்கை நிர்ணயிப்பது நாம்தான்.. இப்படி, நாம் அடைந்திருக்கும் பல லாபகரமான விஷயங்களை, சுதந்திரமான மனப்போக்கை, வாழ்க்கை முறையை நினைத்துப் பார்த்து அதை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், வாழ்க்கையில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல. வெற்றிகரமாக நாம் வாழ்கிறோமா என்பது அதைவிட முக்கியம். வெற்றிகரமான வாழ்க்கை என்பது திருப்தியான மனநிலையைக் குறிக்கிறது. பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும், மனதிருப்தியுடன் வாழ்பவன், பத்து லட்சம் சம்பாதித்தும் மன திருப்தியின்றி வாழ்பவனை விட பணக்காரன். நீங்கள் எப்படி?

நிச்சயமாய் நீங்கள் முதல் வகை நபர் தான், இல்லையா..? வெற்றி பெறுவதை விட, ‘நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற உணர்வுடன் வெற்றியாளர்’ என்ற துடிப்புடன், திருப்தியுடன் வாழ்வது மிகவும் மிக மிக அவசியம். இந்தப் புது வருடத்திலிருந்து, நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நபராக வாழ வேண்டும்.. சுய மதிப்பு மிக்க தன்னம்பிக்கை மிக்க நபராக நீங்கள் வலம்வர என் வாழ்த்துக்கள்..! பழைய தோல்விகள், பழைய அவமானங்கள் எல்லாம் கடந்து போய் விட்ட விஷயங்கள். சென்ற வருடத்தோடு அதை மூட்டை கட்டி கடலில் வீசியாயிற்று. அதன் சுவடு கூட இப்பொழுது உங்கள் மனதில் இல்லை. 2008 ஆம் ஆண்டிலிருந்து, வெற்றிதான் உங்கள் தேர்வு.. உங்கள் விருப்பம். ஆம்…

Success Your Choice..!

சக்ஸ்ஸ் உங்கள் சாய்ஸ்….!

வாழ்த்துக்கள்..!

இந்த இதழுடன் நிறைவுற்றது
இத்தொடர்தான்
வெற்றி அல்ல…!

உங்கள் வாழ்வில் வெற்றி என்றும் தொடரும்…!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்