Home » Articles » கேள்வி-பதில்

 
கேள்வி-பதில்


பாலசுப்ரமணியம்
Author:

என்னதான் உழைப்பு புத்திசாலித்தனம் இருந்தாலும் பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டமும் வேண்டுமா?

கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஒன்று அதிர்ஷ்டம் என்ற பெயரில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது போன்று உங்கள் கேள்வி அமைந்துள்ளது.

வாதத்துக்காக இதை ஒப்புக்கொண்டால் காட்டிமிராண்டியாக வாழக்கையைத் தொடங்கி, இன்று விண் வெளிக்கு வான் கலத்தை அனுப்பிக் கொண்டிருக்கும் மனித முயற்சி கேவலப்படுத்துப்பட்டுவிடும்.

Mirracle or Methodology மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுச சக்தியா? அல்லது வெற்றிக்கான வழிமுறையா ? என்பதில் தான் குழப்பம்.

மனித சமுதாயம் இந்த இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டிருக்கிறது.

‘எல்லாவற்றுக்கும் கொடுப்பினை வேண்டும். என்ற நம்பிக்கை ‘தனிமனித முயற்சிக்கு போடப்பட்ட மன விலங்காகும்.’

உலக வரலாற்றை மாற்றியமைக்க புரடசியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தங்கள் எல்லாம் அதிர்ஷ்டமா?

இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அண்ணல் காந்தியின் வெற்றி அதிர்ஷ்டத்தினாலா அல்லது சுதந்திரப் போராட்டத்துக்கு அவர் கண்டறிந்த ‘சத்தியாகிரகம்’ – என்ற வழிமுறையா?

இன்று நாடு நகரம், தொழிற்சாலைள், வணிகம், ஏற்றுமதி – இறக்குமதி கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்து வருவதெல்லாம் அதிர்ஷ்டம் என்றா கருதுகிறீர்கள்.

மூடநம்பிக்கை – ஜாதிக் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க தந்தை பெரியார் கண்டறிந்த ‘சுயமரியாதை தத்துவம்’ அதிர்ஷ்டமா அல்லது வழிமுறையா?

கொஞ்சம் ஏமாந்தால் வள்ளுவன் எழுதிய வான்புகழ் திருக்குறளும், இந்திய நாடு அணுகுண்டு தயாரித்தும், ‘அக்னி’ வான்கலத்தை விண்ணுக்கு அனுப்பியதும் அதிர்ஷ்டம்தான் என்று முத்திரை குத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே!

ஒவ்வொரு சாதனைக்கும் பின்னால் ‘தியாகங்களின் வீடு இருக்கும்’. அது சாதித்தவருக்கு மட்டுமே தெரியும்.

என் மீது தப்பில்லை. அதிர்ஷ்டம்தான் தவறு செய்துவிட்டது என்று பொறுப்பிலிருந்து நழுவப் பார்க்கிறவர்களின் கவசம்தான் அதிர்ஷ்டமாகும்.

‘Preparedness meets with opportunity is success’

‘தயார் நிலையில் இருப்பவருக்கு கிடைக்கப் படும் வாய்ப்பே அதிர்ஷ்டமாகும்’.

தயார்நிலை என்பது குறிப்பிட்ட துறையில் வல்லவனாகத் திகழ்வதுதான்.

உங்கள் வல்லவமையை வளர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பை சந்திக்கும் போது சாதனையாளனாவீர்கள்.

உங்கள் வெற்றியை பிறர் அதிர்ஷ்டம் என்று அரட்டிக் கொண்டிருப்பார்கள். இந்தப் பட்டியலில் இருக்கும் உங்கள் பெயரை அழித்து விட்டு புதிய வரலாறு படைக்க புறப்படுங்கள். வெற்றி கிட்டும்.


Share
 

2 Comments

  1. S.Gopinathan says:

    i am accepted in the topics

  2. S.Gopinathan says:

    inth varthaikalai padikkum pothu ennakkul oru motivation vanthathu

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்